யாழ்ப்பாண மாட்டுச்சவாரியின் கதை
(By த. சண்முகசுந்தரம்) சவாரி மாட்டைப் பராமரித்தல் ஒரு தனிக் கலை. அதற்கு உணவு ஊட்டுதல், தட்டிக் கொடுத்தல், கால் பிடித்தல் எல்லாம் தனிக்கலை. "மாட்டின் வெற்றி அதன் உணவில் ' என்பர். பனம் ஒலை வைத்தால் மாட்டின் கால் உழைவைக் கூட்டும் என் பது நம்பிக்கை. அரிசி, கடலை, கொம்புப் பயறு, உழுந்து, சிவப்புத் தவிடு, எள்ளுப்பிண்ணுக்கு என்பன முக்கியமான உணவுகள். சவாரிக்கு முதல் நாள் மாட்டின் ஏரியைத் தட்டி, உடலை உருவி, காலைத் தடவிவிடுவார்கள், சவாரி முடிந்ததும் துணியைச் சுடுநீரில் நனைத்து " ஒத்தணம் ' பிடிப்பர். பச்சைத் தேங்காய் மட்டையைச் சூடாக்கி உருவி விடுவர். சவாரியின் போது மாடுபட்ட அடிகாயத்தை ஆறவைக்க வேப்ப நெய், இருப்பை நெய், தேங்காய் நேய், கற்பூரம் என்பனவற்றைக் காய்ச்சிப் பூசுவர். துவரந்தடி அடிகாயம், குத்தூசிக்காயம் என்பனவற் நிற்குச் சிறப்பான கவனஞ் செலுத்தப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் மாட்டுச் சவாரி ஒட் டத்திடல் இருக்கும் கீரிமலை வீதி இறக்கம், அளவெட்டி வீதி, ஈவினை வெளி, கூத்தியவத்தை வெளி என்பன புகழ்பெற்ற போட்டி நிலையங்களுட் சில. யாழ்ப்பாணத்துக் கமக்காரர் மட்டும் சவாரி