கே.எஸ். சிவகுமாரன்: ஒரு மதிப்பீடு
இக்கட்டுரையாசிரியர் கவிஞர் சேரனும் அவரது ஆய்வுப்பொருள் KS சிவகுமாரனும் By கவிஞர் சேரன் தமிழில் இலக்கிய விமர்சனம் பற்றிக் கொஞ்சம் எழுதலாம் என்று நினைக்கிறேன். அதுவும், குறிப்பாக இலங்கையில் விமர்சனத்தின் அடிப் படைகள் தகர்ந்து போவதையும். ஆழமான கண்ணோட்ங்களும் ஒரு படைப்பின் உண்மையான உள்ளீட் டைக் கண்டு பிடிக்கும் முயற்சிகளும் அற்று வெறுமனே பொதுமைப் படுத்தப்பட்ட சொற்றொடர்களையும், பொதுவான அபிப்பிராயங்களையும் விமர்சனம் என்று சொல்லிக்கொள்கிற தன்மையை விசனத்துட்ன் அவதானிக்கக் கூடியதாயிருக்கிறது. குறிப்பாக கே. எஸ் சிவகுமாரனின் எழுத்துக்களை, கைலாசபதியின் பெரும்பாலான முன்னுரைகளைப் படிக்க நேர்கையில் இவ்வாறான உணர்வு மேலோங்குகிறது. இப்போ தைக்கு எல்லாவற்றையும் எழுதுவது இயலாத காரியம். கே. எஸ். சிவகுமாரன் பற்றி மட்டும் சொல்லலாம். தமிழ் இலக்கியத்தைப் பற்றி அவ்வப்போது ஆங்கிலத்திலும், தமிழிலும் "குறிப்புகள்” எழுதிவருப வர் கே. எஸ். சிவகுமாரன். இக்கட்டுரையின் Doctoral Advisor அத்தனாஸ் யேசுராசா இவருடைய அனைத்து எழுத்து க்களைப் பற்றியும் இங்கு குறிப்பிடுவது சஞ்சயனின் பக்கங்கள