புட்டு பிலிப்பைன்ஸிலிருந்து வந்த வரலாறு
நட்சத்திரன் செவ்விந்தியன் Pirurutong என்கிற பிலிப்பைன்சில் புட்டு செய்யும் அருசி புட்டு அல்லது பிட்டுவினது நமக்கு தெரிந்த வரலாறு கேரளாவிலிருந்து வந்ததாக நாம் நம்புகிறோம். புட்டு ஒரு ஆதி தமிழ் உணவல்ல. சங்க இலக்கியத்தில் புட்டு பற்றி எந்த குறிப்புமில்லை. எட்டாம் நூற்றாண்டில் உருவான மலையாள மொழியிலும் புட்டு பற்றி எந்த குறிப்புமில்லை. 15 ம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழில்தான் புட்டு பற்றிய முதல் குறிப்பு வருகிறது. பிறகு சைவரான பரஞ்சோதி முனிவர் 17ம் நூற்றாண்டில் மதுரையில் தங்கியிருந்து எழுதிய திருவிளையாடல் புராணத்தில்தான் பிட்டுக்கு மண்சுமந்த பெருமானின் செம்மனச்செல்வி கதை வருகிறது. பரஞ்சோதி முனிவர் ஊர் வேதாரண்யம். போர்த்துக்கேயர் நாகபட்டினத்துறைமுகத்தை வைத்திருந்த காலத்தில்தான் அங்கிருந்து மதுரைக்கு வந்தபோதுதான் புட்டைபற்றி பாடினார். ஆக புட்டையும் இந்தியாவுக்கு மிளகாய், சோளம், உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிளங்கு, ஆனைக்கொய்யா(அவக்கடோ), முருங்கக்காய் முதலிய திரவியங்களை கொணர்ந்த போர்த்துக்கேயர்தான் கொணர்ந்தார்களா எனத்தேடினேன். உண்மை. ப