திலீபன் : பிரபாகரனின் நரபலி
By நட்சத்திரன் செவ்விந்தியன் செப்டம்பர் 15 ல் நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் சிலை அவர் இறந்த நாளுக்கு அடுத்த நாளான செப்டம்பர் 27ல் ஸ்ரீலங்கா பொலீசாரால் அகற்றப்பட்டது . அதாகப்பட்டது திலீபன் உண்ணாவிரதமிருந்த பதினொரு நாட்களும் அச்சிலையை வைத்திருக்க JVP அரசாங்கம் அனுமதித்துள்ளது . ஆட்சியிலுள்ள இன்றைய JVP அரசாங்க தலைவர்கள் எவருக்குமே இலங்கையில் சிலை இல்லை . அப்படியிருக்க திலீபனின் சிலையை 11 நாட்கள் அனுமதித்த இந்த அரசாங்கத்தை அதற்கான நன்றியின்றி இன்று புலித்தேசியவாதிகள் சாடுகிறார்கள் . புலிகள் இலங்கையில் இன்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பு . அவ்வமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு சிலை வைப்பது சட்டவிரோதமானது . இதில் புலித்தேசியவாதிகள் திலீபன் புலிகளில் விதிவிலக்காக இருந்தார் . அகிம்சை வழியில் போராடி இறந்தார் . அதனால் அவர் விதிவிலக்கு என்கிற தந்திரமான கதையாடலை (Narrative) வைத்து அவருக்கு விதிவிலக்கு கேட்கிறார்கள் . இந்த மாயதந்திரக் கதையாடலை ஆங்கிலத்தில் எழுதிய சந்தர்ப்பவாத சனரஞ்சக தமிழ்ப்பத்திரிகையாளரான DBS. ஜெயராஜும் பரப்பினார் . உண்மை வரலாறு இடியாப்பச...