Posts

Showing posts from November, 2023

சுவஸ்திகா: அர்த்தமும் அபத்தமும்

Image
  By நட்சத்திரன் செவ்விந்தியன்   "Prabhakaran was a Textbook Fascist"                         - The Economist சுவஸ்திகா: கடந்த 4 வாரங்களாக சமூக வலைத்தளங்களில் “றெண்டிங்” ஆகிக்கொண்டிருக்கும் பெயர். மூன்று வாரங்களுக்கு முதல் அவர் புலிகளை ஒரு கொடூரமான பாசிச அமைப்பு என்று பேசியதிலிருந்து இவ்வாரம் யாழ் பல்கலைக்கழகத்தில் சட்டபீடம் ஒழுங்கு செய்த அவருடைய பேச்சு “கலைப்பீட மாணவர்களின் எதிர்ப்பு” காரணமாக கைவிடப்பட்டது வரை நல்லதுக்கும் கெட்டதற்குமாக அவர் சமூக ஊடகங்களில் கலாய்க்கப்பட்டு வருகிறார். அவருக்கு எதிர்ப்பான கண்டனப் பதிவுகளே அதிகம் வந்தாலும் நியாயம் அவர் பக்கமிருப்பதால் அவர் இந்த சமூக வலைத்தள கவன ஈர்ப்பை சரியாகப் பயன்படுத்துவதற்காக பாசிஸம் என்றால் என்ன என்பதை விரிவாக விளக்குவதோடு  புலிகள் ஏன் பாசிஸ்டுகளாகிறார்கள் என்பதையும்  விரிவான ஆதாரங்களுடன் ஒரு ஆய்வுக்கட்டுரையாக எழுதியிருக்கவேண்டும். அதனை சுவஸ்திகா இன்னமும் செய்யவில்லை.  பாசிஸம் என்ன என்று எளிமையாக விளக்குவதாயின் அது மக்களாட்சி(சனநாயகத்திற்கு) நேரெதிரான ஆட்சிமுறை என்பதிலிருந்து தொடங்கலாம். பாசிஸ ஆட்சியின் குணாதிசயங்களாக சர்வ