கொள்ளி (சிறுகதை)
ஜூன் மாத தனிமை வெளியில் பிரசுரமான நட்சத்திரன் செவ்விந்தியனின் சிறுகதை கிருபாகரன் தூங்கி தற்கொலை செய்துகொண்டது ஈழப்போரின் உச்சத்தில் இருந்த புலிகளில் பொற்காலத்தில். ஹாட்லிக்கல்லூரியில் என் வகுப்பு சக மாணவன் . அவன் உயரமானவன். எங்கள் வகுப்பில் முதலில் மீசை வளர்ந்தது அவனில்தான். பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தோம். போர் நிலவரங்கள் காரணமாக சில மாதங்கள் பள்ளிக்கூடம் நடைபெறவில்லை. அதற்கு முதலே அவன் எங்களெல்லோரையும் விட்டு விலகிப்போய்விட்டான். வயதுக்கு மீறிய வளர்ச்சியால் அவன் எங்களைவிட இரு வயது கூடிய அண்ணன்மார்களுடனேயே நண்பரானான். எங்களில் முதலில் குரல் உடைந்ததும் அவனில்தான். அவனின் குரல் எனக்குப்பிடிக்கும். எட்டாம் வகுப்பில் பள்ளிக்கு ஒருநாள் பூதக்கண்ணாடி கொணர்ந்தான். முதுவேனில் காலத்தில் திறந்த வகுப்பறை யன்னலுக்கு வெளியே சூரிய வெளிச்சத்தில் பூதக்கண்ணாடியால் வெளியிலிருந்த புற்தரையைக்கு தீ வைத்தான். சிறுதீயே உருவாக பள்ளியே கலவரமாகிவிட்டது. ஆதிபர் வந்து விசாரித்தும் எங்களில் ஒருவரும் அவனைக் காட்டிக் கொடுக்கவில்லை. பிறகு ஒன்பதாம் வகுப்பில் நம் அதிபரே அவனை ஒரு கீரோ ஆக்கினார். எங்கள் பள்ள