Posts

Showing posts from December, 2020

பாலசிங்கத்தின் பாணபத்திர ஓணாண்டிகள்

Image
  ஓணாண்டிகள்:  ஜெயராஜ், சேரன், சிவராம் நட்சத்திரன் செவ்விந்தியன் அன்ரன் பாலசிங்கம்  புத்திஜீவிதான். அறம் சிறிதுமற்ற சைக்கோபாத் புத்திசீவி. தன்னுடைய வரலாற்றை மகத்தான வரலாறாக எழுத தன் எதிரிகளையே வாடகைக்கு அமர்த்திய பக்கா திறமைசாலி. பாலசிங்கம் முதலில் வசியப்படுத்திய புத்திசீவி தராக்கி சிவராம். புளட் தலைவர் உமா மகேஸ்வரனுக்கு நெருக்கமானவரும் பொம்பிளைக்கள்ளருமான(Semi skilled womaniser) சிவராம் பாலசிங்கத்துக்குமுதலே கொல்லப்பட்டு விட்டதால்  சிவராம் பாலசிங்கத்துககு Obituary எழுதக்கிடைக்கவில்லை.  கவிஞர் சேரனும் ஒரு பொம்பிளைக்கள்ளன்(Skilled  womaniser) தன்னுடைய பல நண்பர்களையும் நண்பிகளையும் புலிக்கு பலிகொடுத்தவர். சேரனின் தங்கையான கவிஞர் ஒளவையின் கணவரான விக்னேஸ்வரனின்  தம்பியைக் கொன்றதும் புலிகள். சேரனும் விக்னேஸ்வரனும் 1990 ன் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தைவிட்டு கொழும்புக்கு ஓடிவராவிட்டால் புலிகளால் கொல்லப்படப்பட்டிருப்பார்கள். தங்கையும் கவிஞருமான ஒளவையும் புலிகளால் கொல்லப்படும் ஆபத்திலிருந்தவர்.  NLFT கட்சியின் பல கூட்டங்கள் பல அளவெட்டி சேரனின் வீட்டிலேயே நடந்தன. அங்குதான் விக்கி, ஒளவை காதல் வசமானா

முருகையன்: நகலும் நாடகமும்

Image
  நட்சத்திரன் செவ்விந்தியன் ஈழப்போர் முடிந்து சில வாரங்களில் முருகையன் இறந்தார். தமிழ்த்தேசியம் என்ற போர்வையில் புலிப் பாசிஸத்தை அறிந்து அறியாமலோ அல்லது தங்களது தனிப்பட்ட சந்தர்ப்பவாத நலன்களுக்காகவோ ஆதரித்து வரும் எழுத்தாளர்கள் வலைப்பதிவாளர்கள் முருகையனை ஒருபக்கச் சார்போடு விதந்துரைத்து அதிகளவில் முருகையனுக்கு அஞ்சலிக்குறிப்புக்களை எழுதியிருக்கிறார்கள். முருகையனும் புலிப்பாசிஸத்தை நியாயப்படுத்தி அதனது பிரச்சாரத்துக்கு உதவியவர் என்பதால் இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. தான் வாழ்ந்த சமூகத்தின் விமர்சகராக தன் காலத்தின் மனச்சாட்சியின் குரலாக முருகையன் இருந்தாரா? அவரது சமகாலத்து ஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் முருகையனின் இடம் என்ன?  1986ம் ஆண்டு முருகையன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு துணை பதிவாளராகப் பணியாற்ற வருகின்றபோது தான் புலிப் பாஸிசத்திலிருந்து தனது சுயாதீனத்தை பேணிக்கொள்வதற்காக பல்கலைக்கழகம் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. இதே ஆண்டுதான் யாழ் பல்கலைக்கழக மாணவரான விஜிதரனை புலிகள் கடத்திச்சென்று சித்திரவதை செய்து கொன்றதன் மூலமாக பல்கலைக்கழகம் மீதான தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தினார