நாட்டுப்புறப் பாலியல் கதைகள்
1996ம் ஆண்டு கி. ராஜநாராயணன் கழனியூரானுடன் சேர்ந்து தொகுத்த நாட்டுப்புறப் பாலியல் கதைகள் நூலுக்கு நட்சத்திரன் செவ்விந்தியன் சரிநிகரில் எழுதிய மதிப்புரை தமிழ் மொழியில் சமஸ்கிருதத்தின் செல்வாக்கு நிரம்ப உண்டு. அப்படியிருந்தும், சமஸ்கிருத மூலத்தில் எழுதப்பட்ட உலகின் முதலாவது பாலியல் நூலான காமசூத்திரம் முழுமையான நூலாக தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் பல வேறுபட்ட மொழிபெயர்ப்புக்கள் வந்துவிட்டன. 28 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்து திருக்குறளையும் காமசூத்திரத்தையும் ஐரோப்பிய மொழிகளில் பெயர்த்த பிரெஞ்சு அறிஞர் Alain Danielou வின் மகத்தான நவீன காமசூத்திர மொழிபெயர்ப்பு. ஒருபாலியலாளரான இவர் இந்திய கோயில் சிற்பங்களிலும் காமசூத்திராவிலும் இருந்த ஒருபால் விடயங்களை வெளிப்படுத்தியதால் ஐரோப்பிய வழிக் கல்விபெற்ற காந்தியினதும் நேருவினதும் சீற்றத்துக்கு இலக்காகி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியதானது. இதனை மொழி பெயர்க்கும்போது ஆசிரியர் தன் எண்பதுகளின் நடுப்பகுதியிலிருந்தார் இவ்வாறான திறந்த பாலியல் சம்பந்தமான விவாதங்களுக்கு தமிழ்ச் சூழலில் இப்புத்தகத்தின் வரவு ஒரு சமூக மாற்றத்தின