விஷ்ணுபுரம் விருதின் மோசடி வரலாறு
"ஊரில் புதுசா ஒரு ரௌடி தாதா வந்தா எதிர் எதிரா சண்டை போட்டு ஒருத்தர் ரத்தத்தை மற்றவர் குடித்து கொண்டிருந்த பழைய தாதாக்கள், புது தாதாவை எதிர் கொள்ள ஒண்ணா சேருவது தெரிஞ்ச விஷயம் தான். ரெண்டு பேரு பொழைப்புலயும் மண்ணு விழுந்துடுமே" - Naren Ganapathy By Rajesh Kumar சாரு நிவேதிதா (சாநி) என்பவர் ஒரு பத்தி எழுத்தாளர். சில நாவல்களும் எழுதியுள்ளார். வாசகர் வட்டங்கள் மட்டுமே அறிமுகமாயிருந்த தமிழிலக்கிய உலகில் முதல் முறையாக விமர்சகர் வட்டம் என்று ஆரம்பிக்கப்பட்டது அண்ணாருக்குதான். ஆரம்பித்தவர்கள் வேறு யாருமல்ல, சாநியின் எழுத்துக்கு கடின சாவு விசிறிகளாக இருந்தவர்கள். அவர்கள் எல்லாம் ஏன் அப்படி மாறிப்போனார்கள் என்று நான் யூகம் செய்ய விரும்பவில்லை. ஆனால் நான் ஏன் விமர்சகனானேன் என்பதில் இருந்து இதற்கான பதிலை ஆரம்பிக்கிறேன். தமிழிணையம் அப்போதுதான் கொஞ்சம் பரவலாக அறிமுகமாகத் தொடங்கிய காலகட்டம். இணையத்தை சரியாக பயன்படுத்தி முதன் முதலில் அக்கவுண்டுக்கு காசு அனுப்பினால் மெயிலில் சீரோ