Posts

Showing posts from February, 2023

யாழ்ப்பாண Trendsetter குறும்படம்

Image
  By நட்சத்திரன் செவ்விந்தியன் யாழ் நகரிலுள்ள மிக அழகான ஊர்கள் குருநகரும் பாசையூரும். யாழ் நகரின் மீன்பிடித்துறைமுகம் இங்குதான் அமைந்துள்ளது.  அழகிய கலைச்சிற்பங்களான கத்தோலிக்க தேவாலயங்களின் இடம். பலமான உதைப்பந்தாட்ட கிளப்புக்களின் ஊர். சுருக்கமாகச் சொன்னால் இதுதான் யாழ்ப்பாணத்தின் வடசென்னை. இன்றைய பின்நவீனத்துவ மேலை நாடுகளில் காதல் டேற்றிங்கிலிருந்து தொடங்கும். ஈழத்திலோ இந்தியாவிலோ அது மாதக்கணக்காக ஒரு பெண்ணை பின்தொடர்ந்து ஊருக்கே அறிவித்தபின் ஒரு Proposal செய்யும் சூதாட்டத்திலிருந்து தொடங்கும். ஏறத்தாள திமிங்கிலங்களும் சேவல்களும் குரங்குகளும் செய்யும் சடங்குதான். ஆனால் விலங்குகள் சில நாட்களில் செய்யும் சடங்கை  யாழ்ப்பாண ஆண் வருடங்களாகச் செய்யவேண்டும்.  இக்குறும்படத்தில் காதலர்களின்   டயலாக் அற்புதம்.                    Proposal                                 Jaffna version of Dating ஸ்ரெல்லா ஒருக்கா நில்லு. உன்னோடை கதைக்க...