Posts

Showing posts from May, 2020

அன்ரன் பாலசிங்கம் புதிய வரலாற்று தொடர்

Image
(By நட்சத்திரன் செவ்விந்தியன்) அத்தியாயம் ஒன்று 2005 மாவீரர் நாளில் லண்டனில்  "ரணில் ஒரு நரியன்" என்று அன்ரன் பாலசிங்கம் உரையாற்றுகிற ஒரு வீடியோவை பார்த்திருப்பீர்கள்.  இந்த உரையை வழங்குகிறபோது பாலசிங்கம் வன்னியில் செத்துப்பிழைத்து தாய்லாந்து வழியாக லண்டன்சீமைக்கு நடைப்பிணமாக வந்தவர். அவரது மதியுரைஞர் வாழ்நாள் முழுக்க சாராய புகையிலை போதையில் இருந்தவர். சலரோக நோய் முத்தி தன் சிறுநீரகங்களை இழந்து இரவல் சிறுநீரகங்களில் பிழைத்த பாலசிங்கத்தின் உடல் மொழியை கவனியுங்கள். எவ்வளவு கஸ்ரப்பட்டு சேடமிழுத்து அந்த உரையை வழங்குகிறார். இப்போது பாலசிங்கம் உயிர்வாழ்வதற்கு வழங்கப்பட்ட குளிசைகளின் போதையில் இவ்வுரையை வழங்குகிறார். அவரது நாக்கு மட்டுமல்ல உடலும் தள்ளாடுகிறது. கடல்வழியாக தாய்லாந்து வழி லண்டன்போன பிற்காலத்தில் பாலசிங்கம் வழங்கிய பல உரைகள் சபை நாகரீகமற்ற பேச்சுக்கள். ஒரு ராசதந்திரியின் பண்புகளற்றவை. கருணா தாய்லாந்தில் சரக்கடித்ததால்தான் பின்னர் பிரிந்தார்/ ஆனந்த சங்கரியின் உடும்பு றச்சியும் இரண்டு கிழவிகளும்/ சிங்களவனுக்கு மேல்வீடு இல்லை இந்த வகையான விசிலடிச்சான் குஞ்சுகளுக்கான குடிகார

குருபரன்: தமிழ்தேசிய கட்டைப்பஞ்சாயத்து தலைவர்

Image
(By நட்சத்திரன் செவ்விந்தியன்) முன்னாள் முதலமைச்சர் புதுக்கட்சி தொடங்கிய புதின விழாவில் குருபரன் குமாரவடிவேல் வழங்கிய முழு உரையையும் கிரகித்து ஆராய்ந்து இதனை எழுதுகிறேன். புலிகளின் ஈழப்போருக்குப்பின்னான காலத்தில் சந்தர்ப்பவாத தேசியவாதப்பத்திரிகைகளும் அவரும் குருபரனை வெகுகச்சிதமாக தமிழ்த்தேசியத்தின் தத்துவாசிரியராக வடிவமைத்துள்ளனர். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை என்பதுபோல அவர் போட்டியிடாமலே இப்பதவியை பெற்றுக்கொண்டார். குருபரன் புத்திசீவியா அல்லது வெறும் Technocrat தானா?  திறமையான புத்திசீவியின் அடிப்படைப்பண்புகள் தனக்காக தன் சாதிக்கான/குழுமத்திற்கான/பிரதேசத்திற்கான/ வர்க்கத்திற்கான/இனத்திற்கான நலனிற்காக சிந்திக்காது முழு சமூகத்திற்காக முமு நாட்டிற்காக சர்வதேசப்பின்புலத்தில் வைத்து சிந்திப்பது. தான் படித்த சட்டத்துறை விதிகள் சூக்குமங்களை மட்டும் அடிப்படையாக வைத்து சிந்திக்காமல் வரலாறு சமூகவியல் அரசியல் மனித உரிமைகள், சர்வதேச பூகோள அரசியல் மானுடவியல் இனவியல் போன்ற இன்னபிற கற்கைநெறிகள் சார்ந்து multifaceted- பன்மைத்துவம் சார்ந்து சிந்திப்பது. சமகால உலகின் மிக அற்புதமான சட்த்தரணி/

மே 18 வெளிவரும் NETFLIX முள்ளிவாய்க்கால் படம்

Image
வரும் மே 18ல் நெற்பிளிக்ஸ் முள்ளிவாய்க்கால் இறுதிநாட்களைப்பற்றிய விவரணப்படத்தை வெளியிடுகிறது. பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு முன் காட்சியைப் பார்த்தபின் நட்சத்திரன் செவ்விந்தியன் எழுதிய பட விமர்சனம்👇 தாயகம் சஞ்சிகை ஆசிரியர்  ஜோர்ச் குருச்சேவ் ஆங்கிலத்தில் எழுதிய Nutty Professor and Forty Evil Clowns என்ற உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஆங்கில நாவல் இப்போது தமிழில் சிவத்தம்பியும் நாற்பது கோமாளிகளும் என்ற திரைப்படமாக வருகிறது. படம் ஆரம்பமாகிய ஓரிரு நிமிடங்களிலேயே பெருந்தமிழ் வரலாற்று நாயகனான “முள்ளி வாய்க்காலில் வெள்ளிபார்த்த வெங்காயத் தலையனின்” கதையே இது என்பது யாவருக்கும் புரிந்துவிடும். பாட்டுடைத்தலைவனான மகா பிரபாகரன் என்கிற பாதி வரலாற்று நாயகனும் மீதி கடவுளுமானவனின் கொடுங்கோல் பாசிஸ ஆட்சிக்கு ஒத்தூதி தங்கள் சொத்துக்களையும் பத்துக்களையும் செல்வாக்கையும் பாதுகாத்துச் சேகரித்துக்கொண்ட பச்சோந்திகளான நாற்பது தமிழ் கவிஞர்கள் கலைஞர்கள் மாக்சிஸ்டுகள் பேராசிரியர்கள் போலிப்பேராசிரியர்கள் ஊடகவியலாளர்கள் ஊடக ரவுடிகள் ஆகியோரின் பரிஹாசத்திற்கும் பரிதாபத்திற்குமுரிய வாழ்க்கையாக இத்திர