Posts

Showing posts from October, 2021

சமகால யாழ்ப்பாண சாதிப்போராட்ட கேலிக்கூத்துக்கள்

Image
                      வி. மணிவண்ணன்                     துரையப்பாவைப் போல செயற்திறன்     மிக்க  தற்போதைய யாழ் நகரபிதா புத்தூர் மயான பிரச்சனை ஒரே தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்த இரு கிராமத்தவர்களுக்கிடையிலான பிரச்சனையே என்பதை மயானம் இருக்கவேண்டும் என்று போராடுகிற ஜனசக்தி கிராம தாழ்த்தப்பட்ட மக்களின் வழக்கறிஞரும்  தற்போதைய யாழ் நகரபிதாவுமான (இவருக்கான சேவைப்பணத்தை ஐனசக்தி கிராம மக்களே வழங்குகின்றனர்) வி. மணிவண்ணன் விளக்குகிறார். இப்பிரச்சனையை சாதிப்பிரச்சனையாக்கி படங்காட்டி "போராடும்" அனைத்து தறிகெட்ட இடதுசாரிகளுக்கும் so called தலித் போராளீசுக்கும் மணிவண்ணனின் வாதத்தை சமர்ப்பிக்கிறோம்.                                - Intelligence Unit/Jaffnafashion.com "History repeats itself, first as tragedy,               second as farce"                                                              - Karl Marx By வி. மணிவண்ணன்                                            யாழ்ப்பாண நகரபிதா                   புத்தூர் சிந்துசிட்டி மயானம்                                                 

புதிய பெயர், புதிய மத்திய குழு: அத். 03

Image
  எப்படி பிரபாகரன் மைக்கலை காட்டில்     எரித்தாரோ அப்படியே பிரபாகரனும்       2009ல் காட்டில்  எரிக்கப்பட்டார் அத்தியாயம் 03 By கணேசன் ஐயர் நானும் சற்குணமும் காட்டிலுள்ள குடிசையில் அமர்ந்திருக்க, பிரபாகரனும் குமரச்செல்வமும் மைக்கலைச் சற்றுத் தொலைவே கூட்டிச்செல்கிறார்கள். மைக்கலைக் கூட்டிச்சென்ற இரண்டு நிமிடத்திற்கு உள்ளாகவே துப்பாக்கி வெடிச் சத்தம் ஒன்று  கேட்கிறது. நாம் அதிர்ந்து போகிறோம். மைக்கல் தான் பேசுவது எதையுமே கேட்கிறாரில்லை. அவர் இயக்கத்தை விட்டு வெளியே போகப்போவதாகச் அடம்பிடித்தார் அதனால் நான் சுட்டுக் கொன்றுவிட்டேன் என்கிறார். ஆம், அது நடந்துவிட்டது மட்டக்களப்பில் தமிழுணர்வுப் போராட்டங்களை நடத்திய மைக்கல் இப்போது எம் மத்தியில் இல்லை. வெறுமனே தூய இராணுவக் குழு ஒன்றையும் அதற்கான ஒழுங் முறைகளையும் உருவமைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இவற்றையெல்லாம் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கு எமக்குத் தெரிந்திருக்கவில்லை. உலகில் வெற்றி கொண்ட போராட்டங்களெல்லாம், மக்கள் அமைப்புக்க்களை உருவாக்குவதிலும்,கட்சியை உருவாக்குவதிலும், அவற்றிலிருந்து கெரில்லா இராணுவ அமைப்புக்களைக் கட்டியமைப்பது குறி

தலைவரின் முதல் சகோதரக்கொலை: அத்தியாயம் 02

Image
      மைக்கல்: காட்டில் ஒரு யாமக்கொலை அத்தியாயம் 02 By கணேசன் ஐயர் 70 களின் நடுப்பகுதியில் எமக்குத் தெரிந்தவையெல்லாம் ஆயுதங்களைச் சேகரித்துக்கொள்வதும் எதிரியை அழித்துவிடுவதும் தான். சந்திகளும் சாலைத் திருப்பங்களும் இருள் சூழ்ந்து கோரமாய்த் தெரிந்த ஒரு காலம்! எங்காவது ஒரிடத்தில் ஒருசில மணி நேரத்திற்கு மேல் தரித்திருக்க முடியாத மரண பயம். மரணத்துள் வாழ்தல் என்பதைத் தமிழ் உணர்வுக்காக நாமே வரித்துக்கொண்டோம். மயானமும், கோவில்களும், பாடசாலைகளும், தோட்டங்களும், வயல் வரப்புக்களும் தான் எமது உறங்குமிடம். பல காத தூரங்களை நடந்தே கடந்திருக்கிறோம்! எங்கள் சைக்கிள்கள் கூட எம்மோடு உழைத்து உழைத்து இரும்பாய்த் தேய்ந்து போயின!! முட்களும், புதர்களையும், கற்களும் பல தடவைகள் எமது பாதணிகளாகியிருக்கின்றன. குக் கிராமங்கள், அடர்ந்த காடுகள் என்று எல்லா இடங்களுக்குமே எமது தமிழ் உணர்வு அழைத்துச் சென்றிருக்கிறது. இவ்வேளையில் தான் எமது மத்திய குழு அமைக்கப்படுகிறது. அதன் பருமட்டான திட்டம் வழி முறை இதுதான்: 1. இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதப் போராடம். 2. தமிழீழம் கிடைத்த பின்னர் தான் இயக்கம் கலைக்கப்படும். 3. இயக்கதில் இ

ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்

Image
    ஒர்  இளவேனிற்கால  வைகறையில்(2009 மே 19) பிரபாகரன் கொல்லப்பட்டதோடு ஈழப்போர் முடிந்தது. அவ்வாண்டு முன்பனிக்காலத்தில் புலிகளின்/பிரபாகரனின் இந்த மிகச்சிறப்பான பொக்கிசமான  வரலாறு தமிழில் எழுதப்படத்தொடங்குகிறது. இதை எழுதிய கணேசன் ஐயர் ஓர் இலட்சிய புருஷர். முதலில் புலிகள் இயக்கத்தை தொடங்கியவர்களின் மத்திய குழுவிலிருந்தவர். அவ்வியக்கம் தப்பான வழியில் சென்றபோது அதிலிருந்து பிரிந்து அடுத்த புளட் இயக்கத்தில் சேர்கிறார். புளட் தப்பாகிறபோது பிரிந்து அடுத்த NLFT இயக்கத்தில் சேர்கிறார். இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த மூன்று இயக்கங்களுமே இவரது அப்பழுக்கற்ற நேர்மைக்காக இவரை தமது நிதிப்பொறுப்பாளர் ஆக்குகின்றன. இக்கணம் வரை இந்து மூன்று இயக்கங்களுமே இவர்மீது எந்த நிதிமோசடிக் குற்றச்சாட்டும் வைக்கவில்லை. உண்மைகளை பச்சையாக எழுதினால் தான் கொல்லப்படலாம் என்பதால் இதை எழுத கணேசன் ஐயர் பிரபாகரன் இறக்கும்வரை காத்திருக்கவேண்டியிருந்தது. இந்த வரலாற்று நூலை ஐயர் சொல்லச்சொல்ல கேட்டு எழுதி அதனை இணையத்தில் பிரசுரித்து பின்னர் புத்தகமாக்கிய சபா நாவலனுக்கும் உலகத்தமிழ் சமூகம் மிக்க கடமைப்பட