சைக்கோபாத் 001: உமா வரதராஜன்
உடையப்பா மாணிக்கம் வரதராஜன் நட்சத்திரன் செவ்விந்தியன் உமா வரதராஜனின்(1956) உள்மன யாத்திரை(1988) ஒரு யாழ்ப்பாண இளவேனில் வெய்யிலில் புதுவருச வாய்ப்பன் பிளேன் ரீயுடன் நான் அனுபவித்து படிச்ச புத்தகம். வரதராஜனின் முதல் சிறுகதைத்தொகுதி. பெருவரவேற்பை பெற்றது. அதற்குப்பிறகு பலகாலமாக அவர் புத்தகம் எதுவும் போடவில்லை. முதல்புத்தகத்தின் புகழிலேயே அவர் குளிர்காய்ந்து அனுபவித்தார். சைக்கோ பாத் எழுத்தாளர்கள் என்றொரு தொடரை எழுதவுள்ளேன். முதலாவது எழுத்தாளர் ஈழத்து உமா வரதராஜன். யார் சைக்கோபாத் அல்லது sociopath? சாதாரண மனிதர் எல்லோருக்கும் அறவிழுமியங்கள் நீதி நியாயங்கள் இருக்கும். இவற்றை பின்பற்றாவிட்டால் சாதாரண மனிதர்களுக்கு குற்ற உணர்ச்சிவரும். சைக்கோ பாத்துகளை பொறுத்தவரையில் தாங்கள் சட்டம், நீதியைவிட மேலானவர்களாக நினைப்பார்கள். இவர்களுக்கு குற்ற உணர்ச்சி கிடையாது. தங்கள் தவறுகளை நியாயப்படுத்துவார்கள். உலகத்து கலைஞர்கள் எழுத்தாளர்களில் சைக்கோ பாத்துக்களின் வீதம் அதிகம். உலகத்தின் அற காவலர்கள் கலைஞர்கள் என்ற தப்பு அபிப்பிராயத்தை இவர்கள் செமையாக பாவிப்பார்கள். இசைமேதை மொசாட்டில...