மச்சானை மண்டையிலபோட்டு அத்தான் பேரா. துரைராஜாவை மாமனிதராக்கிய புலிகள்
நட்சத்திரன் செவ்விந்தியன் அன்ரன் பாலசிங்கம் பிறந்து 5 ஆண்டுகள் கழித்து கரவெட்டி இரும்பு மதவடியில் பிறந்த பசுபதிப்பிள்ளை ஹாட்லிக்கல்லூரியில் படித்து பேராதனையில் அரசியல் சிறப்பு பட்டதாரியானவர். பல்கலைக்கழக காலத்தில் பின்னாளில் மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி அதிபரானவரும் புவியியல் சிறப்பு பட்டதாரியுமான விஜயராணியை காதலித்து திருமணம் செய்தார். ஒரு மாவலி நதிக்கரைக்காதல் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை. "மாமனிதர்" பேராசிரியர் துரைராஜாவின் மனைவி ராஜேஸ்வரியின் சொந்த சகோதரர். பேர்த்தியின் பிஞ்சுவிரல்களில் பசுபதிப்பிள்ளையின் புகைப்படம் 1988 மார்ச் 30 புலிகளால் மானிப்பாயில் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார். மனதில் பட்டதை தான் படித்த நியாயத்திற்கேற்ப வெளிப்படையாக பேசும் இயல்புள்ளவர். எண்பதுகளின் நடுப்பகுதியில் யாழில் ஒரு Think Tank ஐ உருவாக்கியவர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை புலிகள் குழப்பியதை அவர் விமர்சித்தது புரிந்து கொள்ளக்கூடியது. 3 பெண்குழந்தைகளின் தந்தையாக 44 வயதில் சந்தோசமாக தன் மனைவி வீட