Posts

Showing posts from January, 2022

விருந்தாளி வீட்டில் சாரு நிவேதிதா கமெரா திருடிய கதை : சாருவின் பாரிஸ் பயணம்

Image
  சாரு நிவேதிதாவின் முதல் விமானப்பயணமும் முதல் சர்வதேச பயணமும் அவர் 2001ல் பாரிஸ் மாநகருக்கு சென்ற பயணம்தான். தன்னுடைய அழகான கையெழுத்தில் அவர் ஆயிரம் புகழ்ச்சிக்(Flattery) கடிதங்களை சோபாசக்தி, சுகன், கற்சுறா, கலாமோகன், ஸ்ராலின், சேனன் முதலியோருக்கு எழுதி தன் பாரிஸ் பயணத்தை சாத்தியமாக்கினார். தன் விருந்தாளிகளை "இலவு காத்த கிளிகள்" போல ஆக்கி  எப்படி துன்பம், துரோகம் செய்து ஏமாற்றினார் என்பதை சாருவை விருந்தாளியாக அழைத்தவர்களில் ஒருவரான கற்சுறா போட்டு உடைக்கிறார். 2015ல் கற்சுறாவின் புளக்கில் வந்த கட்டுரை இது👇 By கற்சுறா சாரு   என்ற  அயோக்கினைப்   பற்றி   என் வாழ்நாளில்     ஒருபோதும் எழுதக்கூடாது   என்றே   எண்ணுவேன் .   அது ஒரு வெட்கக் கேடான விடையமாகவே எனக்கு எப்போதும் இருக்கும்.   அவன் எழுதும் பலவற்றை பார்க்க நேரிடும் போது மிக அதிகமான கோபம் தோன்றிவிடும். அவை மிக அதிகமான பொய்களால் நிறைந்திருக்கும். அந்தப் பொய்யை அறியாத யாரோ சிலருக்காக எந்த வெட்கமும் இல்லாது எவ்வித குற்ற உணர்வும் இல்லாது அவன் அவற்றை எழுதியிருப்பான். அவன் எதற்காக எழுதுகிறான் என்று எப்போதோ அவனுக்கு அருகில் இருந்தவர

மீனா கந்தசாமியின் மோசடிப்புத்தக விசாரணை

Image
  மீனா கந்தசாமியின் The orders were to rape you என்கிற புத்தகம்   மோசடியானதாக இருக்கலாம் என்பதற்கு நாங்கள் எழுப்புகிற கேள்விகள் 1. ஆங்கில நாட்டில் வசிக்கிற இவரின் இந்த ஆங்கிலப்புத்தகத்தை   ஏன் ஒரு சர்வதேச, ஆங்கிலப் பதிப்பகமும் வெளியிட முன்வரவில்லை? ஒரு இந்தியப்பதிப்பகமே இதனை வெளியிட்டுள்ளது. விடை: சர்வதேசப் பதிப்பகங்கள் கடுமையான Fact checking என்கிற உண்மை உறுதிப்படுத்தும் பரிசோதனையின் பின்னரே இம்மாதிரியான Non Fiction புத்தகங்களை வெளியிட முன்வரும். நல்ல உதாரணம்  ஈழயுத்தம் முடிந்தபின் 2011ல் மோசடியான ஒஸ்றேலியப் பதிப்பகம் Allen&Unwin வெளியிட்ட Tamil Tigress என்கிற Fake Memoirs. இதனை முதலில் அம்பலப்படுத்தியது நட்சத்திரன் செவ்விந்தியன்  என்கிற Arun Ambalavanar. தொடர்ந்து மதிப்புக்குரிய பல்கலைக்கழக அக்கடெமிக்குகளான   Dr. மைக்கல் ரொபேட்ஸ் ,  Dr. முத்துகிருஷ்ணா சர்வானந்தன் ஆகியோரும் இந்த போலி தன்வரலாற்றை அம்பலப்படுத்தினார்கள்.  விளைவு எந்தவொரு ஐரோப்பிய, அமெரிக்க பதிப்பகங்களும் குறித்த போலி தன்வரலாற்று நூலை(Tamil Tigress) வெளியிட முன்வரவில்லை. போலி நூல்களை வெட்கமின்றி வெளியிடுகிற ஒரு இந்தி