கூட்டமைப்பு உருவான உண்மை வரலாறு
நட்சத்திரன் செவ்விந்தியன் Rushangan Kodeeswaran, Amirthanayagam Nixon, Gowripal Sathiri Sri, DBS jeyaraj, Ramasamy Thurairatnam முதலிய "பத்திரிகையாளர்கள்" கூட்டமைப்பு புலிகளால் 2001 ல் ஏற்படுத்தப்படவில்லை என்றும் கூட்டமைப்பு 2004ன் பின்னரே புலிகளால் கட்டுப்படுத்தப்பட்டது என்றும் ஒரு வரலாற்றுத்திரிப்பை செய்கின்றனர். கூட்டமைப்பு ஆரம்பத்திலிருந்தே(2001) புலிகளால் துப்பாக்கிமுனையில் உருவாக்கப்பட்டது என்பதை பின்வரும் எனது கட்டுரை ஆதாரங்களுடன் விளக்குகிறது. 2018 இறுதிப்பகுதியில் கம்பவாரிதி ஜெயராஜ் நடத்திய ஒரு மேடையில் Kesavan Sajanthan கூட்டமைப்பு புலிகளால் துப்பாக்கி முனையில் உருவாக்கப்பட்டது என்பதை வெளிப்படையாக பேசியிருந்தார். எதிரிகளையும் துரோகிகளையும் கொல்லாது மிரட்டல், வசதிவாய்ப்பு மற்றும் பணம் அல்லது Blackmail என்கிற பணையவைப்பு/பொறிவைப்பு மூலம் தங்களுக்கு வேலைசெய்பவர்களாக மாற்றும் தந்திரம் ஒரு பழைய ராசதந்திரம். இது ஸ்ராலின்கால சோவியத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட உத்தி. புலிகள் இந்த உத்தியை பயன்படுத்த காரணமாக இருந்தவர் புலிகளின் பல சகுனி வேலைகளுக்கு காரணமாக இருந்த அன்ரன் பால