Posts

Showing posts from January, 2021

ஒரு சைக்கோவின் வாக்குமுலம்

Image
"எனது முன்னாள் காதலியைப் பற்றிய நினைவுகள் மேலோங்கும் போது நான் மிகுந்த வெறுப்புக்குள்ளாகிறேன். யாரையாவது தாக்கவேண்டும என்று வெறி என்னுள் எழுகின்றது."      -ரஞ்சகுமார் By அ.யேசுராசா அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள். வந்து கொண்டிருந்தோரின் எண்ணிக்கை அதிகமாகி கதிரைகள் போதாமற் போகவே, சில பல்கலைக்கழக இளைஞர்கள் (கூட்ட அமைப்பாளர்களுடன் சம்பந்தப்படாதவர்கள்) தாமாகவே எழும்பிச் சென்று, அடுத்த அறைகளிலிருந்து கதிரைகளை அடிக்கடி எடுத்து வந்து வசதிசெய்து கொடுத்த செயல் மனதில் பதிந்தது. மற்றப்படிக்கு, பிரமுகர்களுக்கும் காசுள்ள முதலாளிகளுக்கும் கெளரவம் கொடுத்து (என்று மறையும் இந்நிலை?) நடத்தப்பட்ட வழமையான கூட்டம்.  ஆய்வுரைகள் முடிந்தபின் நூலாசிரியர் தான் பேசவேண்டியதை நீண்ட கட்டுரையாக எழுதி வாசித்தார். பல இடங்களில் கருத்துக்கள் நெருடலை ஏற்படுத்தின; ஆயினும் அவற்றையெல்லாம் பற்றிக் கருத்துரைத்து உங்களைச் சோதிக்கும் எண்ணம், இல்லை.  ஓரிடத்தில் அவர் சொன்னார்.  "எனது முன்னைய நாள் காதலியைப் பற்றிய நினை

அ.யேசுராசாவும் அன்னா அக்மத்தோவாவும்

Image
நானுங்கூட பளிங்காய் மாறுவேன்                        - நட்சத்திரன் செவ்விந்தியன்  சில ஆண்டுகளுக்குமுன் சிட்னியில் ஒரு வசந்தகாலத்து பகலில் வீட்டிலிருந்து நடந்தேன். அப்பருவகாலபரவசம். ஒரு மணித்தியாலத்தில் Wentworthville என்ற புறநகர நூலகத்தில் மிதந்தேன்.  அப்போது கணிசமான தமிழர்கள் சிட்னியில் குடியேறி விட்டார்கள். தமிழ் புத்தகங்களும் தினமுரசு மோன்ற பத்திரிகைகளும் அங்கு கிடைக்கும். சிட்னி பிரதேசசபை நூலகங்களில் ஒரு நூலை பலர் இரவல் பெறாவிட்டால் விரைவில் அறாவிலைக்கு விற்பனைக்கு போட்டுவிடுவார்கள்.  அறாவிலைக்கு விற்பனைக்கெனப்போடப்பட்ட புத்தகங்களில் என் முன்னாள்  இலக்கிய குரு யேசுராசாவின் "குறிப்பேட்டிலிருந்து" என்ற புத்தம் புதிய புத்தகம் 50 சதத்துக்கு விலைக்கு போடப்பட்டிருந்தது. அதிலுள்ள கட்டுரைகளை நான் ஊரில் வாசித்திருந்தேன். புத்தகத்தோடும் மனோரதியமான மனதோடும் வெளியே வந்து பார்க்கில் ஒரு கோப்பியோடு படித்தேன். புத்தகத்திலிருந்த பின்வரும் அக்மத்தோவா பற்றிய கட்டுரை ருஸ்ய மொழியறிந்த சிங்கள புத்திசீசி றெஜி Siriwardena எழுதியது. றெஜி அய்யா ரூசிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் அசலாக மொழிபெயர்த்

ஒரு மூடன் கதை சொன்னான்

Image
                   ஜெயமோகனுக்கு முதுகு சொறியும்                                                   முத்துலிங்கம் முத்துலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோரின் இலக்கிய ஊழல்கள். By  நட்சத்திரன் செவ்விந்தியன்.  2013ல் மலைகள் இணைய  இதழில் வெளிவந்த இக்கட்டுரைதான் ஜெயமோகன் செவ்விந்தியன் மீதான  வஞ்சம் தீர்ப்புக்கான காரணம்.  2012 ம் ஆண்டில் வெளிவந்த தனக்குப்பிடித்த அவ்வாண்டின் சிறந்த சிறுகதையாக அ.முத்துலிங்கத்தின் (அ.மு) சூனியக்காரியின் தங்கச்சி (உயிர்மை நவ.2012) என்ற சிறுகதையை எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவுசெய்துள்ளார்.  Best of 2012 என்கிற ஆங்கில அறிவிப்போடும் வந்துள்ள இப்பட்டியலில் அவ்வாண்டின் சிறப்பான 50 வகைகள் உண்டு (திரைப்படம், நாவல், மனித உரிமைப்போராளி, வாசகன், பாடலாசிரியன், ஓவியன், பத்திரிகையாளன் என..) ஆனால் இங்கு முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு தெரிவு அதுவும் தெரிந்து கொண்டேசெய்யப்பட்ட ஒரு மோசடி ஒரு போலிச்சிறுகதை அல்லது சிறுகதைப்போலியான சூனியக்காரியின் தங்கச்சி தெரிவு செய்யப்பட்டதுதான்.  தமிழில் இன்று வருகின்ற சிறுகதைகளை மோசமான கதைகள், போலிச்சிறுகதைகள், தரமான சிறுகதைகள்

பாலைவனத்தில் ஒரு புத்தகக் கடை

Image
சல்மான் ரஷ்டி காதலி றொபின் டேவிட்சனுடன், சிட்னி 1984 அடிலயிட் சர்வதேச எழுத்தாளர் வாரம் கீர்த்திமிக்க ஆஸ்திரேலிய விழா.  இவ்விழாவுக்கு  பிரதம விருந்தினராக 1984ல் வந்த   சல்மன் ருஸ்டி தனது  நினைவுகளை Imaginary Homelands  என்ற நூலில் எழுதியுள்ளார். அக்குறித்த கட்டுரையின் சில பகுதிகள். தமிழாக்கம் நட்சத்திரன் செவ்விந்தியன்   ஓரளவு வித்தியாசமான இந்தமாதிரியான எழுத்தாளர் விழாக்களால் வாசகர்களுக்கும் பார்வையாளருக்கும் என்ன பயன்? சில காரணங்களால் எழுத்தாளர்களைப்பார்த்து அவர்களின் பேச்சைக் கேட்டுவிட்டு அவர்களின் புத்தகங்களை வாசிப்பதை சுவாரஸ்யமானதாக வாசகர்கள் கண்டனர். இங்கே எழுத்தாளர்களுக்குப் பெறுமதியானதாக இருப்பது என்னவென்றால்,  நான் நினைக்கிறேன் மேடைக்கு வெளியே எழுத்தாளர்களுக்கிடையே இடம்பெறுகின்ற உதிரி கதைகள்தான். எழுத்தாளர்கள் ஒவ்வொருத்தரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வதில்லை. அவ்விதம் அவர்கள் நேருக்கு நேர் சந்திக்கின்ற சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றபோது அதிக நேரம் கதைக்கின்றனர். என்னுடைய பல்கலைக்கழகக் கல்வியின் முதல்நாள் இரவின் போது எங்கள் கல்லூரி நிர்வாகி கூறியதை இது எனக்கு நினைவூட்டியது. ஒரு இரவு விர

சுய தணிக்கையும் சுய மைதுனமும்

Image
  மதிப்புரை Lutesong and Lament (Tamil writing from Sri Lanka) By நட்சத்திரன் செவ்விந்தியன்   மஹாகவி இலிருந்து றஷமிவரை எழுதிய, எழுதி வருகின்ற ஈழத்தின் 13 கதாசிரியர்களதும் 22 கவிஞர்களதும் சில படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தொகுப்பாக இப்புத்தகம் வெளிவந்துள்ளது. ஏழு மொழிபெயர்ப்பாளர்கள் இப்படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தாலும் இதன் தொகுப்பாளராக செல்வா கனகநாயகம் மட்டுமே இருக்கிறார்.  தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் தங்களுடைய படைப்புக்கள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப் படுகின்றனவே என்று, ஒருவகையான சுயகரமைதுனம் செய்வதற்கொப்பான சுய திருப்திப்படுவதற்காக இவைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படுவதில்லை. இம் மொழி பெயர்ப்பினுடைய வாசகர்கள் தமிழில் இவற்றை வாசிக்காத வாசிக்கமுடியாத சர்வதேச இலக்கிய ஆர்வலர்கள். இதன் காரணமாக இவ்வாறான தொகுப்பிற்கு எழுத்தாளர்களினதும் படைப்புக்களினதும் தெரிவிலும் தொகுப்பிலும் மிகுந்த பொறுப்புணர்வோடு கூடிய கவனம் அவசியம். 2003ல் மூன்றாவது மனிதனில் வந்த மதிப்புரை  சர்வதேச இலக்கிய ஆர்வலர்கள், உலக இலக்கிய பரப்பின் புனைகதை சார்ந்த அல்லது புனைகதை சாரா எழுத்துக்களுக்கு

யாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன்

Image
                                 செல்லையா இளங்குமரன்   By நட்சத்திரன்செவ்விந்தியன் (புலனாய்வு பத்திரிகையாளர், கவிஞர், எழுத்தாளர், இலக்கிய அரசியல் விமர்சகர்) இலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்தியவர் செல்லையா இளங்குமரன் . 1985ம் ஆண்டிலிருந்து இன்றுவரை  யாழ் பல்கலைக்கழக புள்ளிவிபரவியல் விரிவுரையாளராக இருந்த இவர் இன்று அதே பல்கலைக்கழகத்தில் புள்ளிவிபரவியல் பேராசிரியராக இருக்கிறார்.                  முகநூலில்  இளங்குமரன் இளங்குமரன் பாலியல் பலாத்காரங்களை தன் மாணவிகள்மீது செய்யத்தொடங்கிய எண்பதுகளின் நடுப்பகுதி சிவில் நிர்வாகம் சீரழிந்திருந்த போர்க்காலம். கிழக்கு மாகாண காரை தீவைச்சேர்ந்த இளங்குமரன் 1980ல்  யாழ் பல்கலைக்கழக மாணவராக யாழ்ப்பாணத்துக்கு வருகிறார். 1985ல் அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரானதிலிருந்து 40 வருடங்களுக்கு மேலாக அவர் வசிப்பது யாழில்தான். (1999 இலிருந்து 2002 வரை நியூசிலாந்து Massey university ல் Ph.d செய்த காலம் தவிர). பாதிக்கப்பட்ட மாணவிகள் வஞ்சினத்தில் இளங்க