உக்ரைன்: நியாயங்களும் நிலைப்பாடுகளும்
By கார்த்திக் வேலு சோவியத் ஒன்றியம், செஞ்சீனம் ஆகிய கொம்யூனிச ஆட்சி அதிகார மையங்களிலிருந்து வந்த லெனினிச/ஸ்டாலினிச/மாவோயிச பிரச்சார வரலாற்றுப் புத்தகங்களை மதநூல்களாக படித்து விழுங்கிவிட்டு ரூசியாவின் உக்ரேனியப் படையெடுப்புக்கு தமிழ் இடதுசாரிகள் ஆதரவு மதப்பிரச்சாரக் கட்டுரைகள் எழுதுகிற இக்கணத்தில் அருஞ்சொல் என்கிற சுயாதீனமான தமிழ் பத்திரிகை இப்போரின் உண்மையான வரலாற்றை சமூக விஞ்ஞானமாக சொல்கிறது. இக்கட்டுரையை படித்தவர்கள்(குறிப்பாக வெளிநாட்டு தமிழர்கள்) உங்களால் முடிந்தால் இந்த அருஞ்சொல் பத்திரிகைக்கு சந்தா செலுத்துங்கள். உங்கள் உதவியால் சந்தா செலுத்த முடியாத தமிழக, ஈழ, மலேசிய மாணவர்கள் முதலியோருக்கும் அருஞ்சொல் சென்று சேர வாய்ப்பாகும். இ ந்திய வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பேரரசுகள் வளர்ந்து தேய்ந்த சித்திரம் நமக்குப் பள்ளிக்கூட வரைபடப் பயிற்சியாக நம் மனதில் பதிந்திருக்கும். இன்றைய தமிழகம் என்பது வரலாற்றின் சுவடுகளில் பல்வேறு அரசர்களால் ஆளப்பட்ட ஒன்றே. வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு எல்லைகளைக் கொண்டிருந்தது. ஆனால், ஒரு நவீன ஜனநாயக நாடாக நாம் உருவாகிய பின்னர் பல்வேற