சவாரித்தம்பரும் சின்னத்தம்பியும்
அது 2007. கனடாவில் ஒரு இனிய கோடைகாலத்து காலையில் 2 தமிழர்கள் மது அருந்தியபடியே தமிழ்த்தேசியம், புலிப்பாசிஸம் பற்றி சம்பாஷிக்கிறார்கள் 2007 கனடிய வசந்தகாலத்தில் நட்சத்திரன் செவ்விந்தியன் எழுதி தேனியில் வந்த கட்டுரை. புலியின் அழிவு ஆருடம் சொல்லப்பட்டிருக்கிறது கனடாவில் வேனில் காலம். புதிதாக மணமாகியிருந்த சின்னத்தம்பி சங்கானைச் சந்தைக்கு தனியாக அதிகாலையிலேயே சென்று மரக்கறி மீன்சாமான்களை வாங்கிவந்து தன் இளம் மனைவி கனகாவை அசத்தினான். தன்னுடைய புதுப்புருசனை "அதிகம் வேலை வாங்கி கஸ்டப்படுத்துகிறேனோ" என்று குற்ற உணர்ச்சியால் வருந்திய கனகா "சரி இண்டைக்கு வேணுமெண்டால் பப்புக்குப் போய் ரண்டு பியர் குடிச்சிட்டு வாங்கோ. நான் சமைச்சு வைக்கிறன்" என்றாள். தன்னுடைய மனுசிதான் இதைச் சொல்லுகிறாளோ என்று ஒரு கணம் நம்ப மறுத்த சின்னத்தம்பி, மனுசி மனம் மாறினாலும் என்று அவசர அவசரமா இறங்கினான். வெளியில பத்துமணி வெய்யில் சின்னத்தம்பியின்ர முகத்தில அடிக்க அவனுக்கு யாழ்ப்பாணத்து தெருவொன்றில நடந்த மாதிரி இருந்தது. வயுத்துக்குள்ள வண்ணாத்திப்பூச்சி பறந்தது. கனகாவையும் தன்னோட சேர்ந்து பியர