💥கள நிலவரம்💣 ஈழப்போரின் இறுதிக்காட்சிகள்
என் சனம் படுகின்ற தொல்லைகளை நான் கண்டேன். அவர்களிடும் கூக் குரலை நான் கேட்டேன். அவர்கள் படும் வேதனையை நான் அறிவேன். பார்வோன் பிரபாகரனிடம் போய்ச் சொல் "என் சனத்தை போக விடு" - யாத்ராகமம் By சிவராசா கருணாகரன் ஈழப்போரின் இறுதி நாட்களைப்பற்றி தமிழில் பக்கச்சார்பற்று எழுதப்பட்ட இதுவரையில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோரால் படிக்கப்பட்ட மகத்தான கள ஆய்வறிக்கை👇 நாயிற் கடைப்பட்ட நம்மை இம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி ஆடப்பொற்சுண்ணம் இடித்து நாமே - திருவாசகம் 2006 ஆகஸ்ட் 11இல் விடுதலைப் புலிகள் யுத்தத்தை ஆரம்பித்ததுடன் வன்னிக்கான கதவுகள் பெரும்பாலும் மூடப்பட்டுவிட்டன. ஒரு பக்கத்தில் சிறிலங்கா ராணுவம் பாதைகளை மூடியது என்றால் மறுபுறத்தில் புலிகள் சனங்களுக்கான தொலைத்தொடர்புகள், போக்குவரத்து, பயண அனுமதி எல்லாவற்றையும் மூடினார்கள். வன்னி மக்கள் இரண்டு தரப்பினருடைய நெருக்கடிகளுக்கும்