மேதகு: வரலாற்றுப் புரட்டு விளம்பரம்
நிராயுதபாணிகளைக் கொல்லும் கொலையாளியாக ஈழப்போராட்டத்திற்குள் வந்த பிரபாகரன் ஒரு போர்வீரனோ(Soldier) மாவீரனோ அல்ல. துரையப்பாவிலிருந்து அவரால் தனிப்பட்டரீதியில் கொல்லப்பட்ட இலங்கை பொலீசார், செட்டி, கனகரத்தினம் MP முதலிய கொலைகளில் கொல்லப்பட்டவரகள் நிராயுதபாணிகளாகவே இருந்த சமயங்களிலேயே நடந்தது. ஆயுதபாணிகளாக இருந்த படையினரை ஒருபோதுமே பிரபாகரன் தன்னந்தனியனாக தாக்கி கொன்றதில்லை. பிரபாகரன் தன் வாழ்நாளில் எந்த ஒரு சமரிலும்(Battle) பங்குபற்றியவர் அல்ல. எந்த ராணுவமுகாம் பொலீஸ் நிலையத்தாக்குதலிலும் பங்குபற்றியவர் அல்ல. நட்சத்திரன் செவ்விந்தியன் வரலாற்று ஆளுமையையோ வரலாற்றுச் சம்பவத்தையோ வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் இரண்டு வகையானதாக இருக்கலாம். ஒன்று முற்றிலும் விபரணப்படமாக இருப்பது. இதற்கு உதாரணம் புலிகளால் கொல்லப்பட்ட மனித உரிமைப் போராளியும் பல்கலைக்கழக விரிவுரையாளரும் மருத்துவருமான ராஜினி திராணகமவின் வரலாற்றை வைத்து எடுக்கப்பட்ட No More Tears என்ற படம். இதில் ராஜினியின் பாத்திரமாக மட்டுமே (அவரது மகள் சரிகா) நடிகையாக நடிக்க மற்றவர்கள் எல்லோரும் நிஜ பாத்திரங்களாக படத்தில் பேசுகிறார்கள்.