மலையகச் சிறுமிகள் குளிப்பதை படமெடுக்க கமெரா பொருத்திய சிவபூமி
By நட்சத்திரன் செவ்விந்தியன் 2024ம் ஆண்டு யாழ்ப்பாண மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய நிகழ்வொன்று ஆறுதிருமுருகனது யாழ்ப்பாண சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தால் நடத்தப்பெற்றது. சிவபூமி மலையகத்திலிருந்து 29 O/L பரீட்சை தேறிய மாணவிகளை அழைத்துவந்து அவர்கள் தெல்லிப்பளை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் தங்க வைத்தது. அச்சிறுமிகள் யாழ்ப்பாணத்திலிருந்து யாழ் பாடசாலைகளில் சேர்ந்து படித்து A/L படிக்க வசதி செய்வதாக ஏற்பாடுகள் செய்தது. ஆனால் அந்த 29 சிறுமிகளான(Child) மலையக மாணவிகளும் கண்ணியத்துடன்(Dignity) அங்கு பராமரிக்கப்படவில்லை. இலங்கைச் சட்ட வரம்புகளை மீறியும் அவர்கள் அங்கு தங்கவைக்கப்பட்டார்கள். இரண்டாந்தரப் பிரஜைகள் போல அவர்கள் நடாத்தப்பட்டார்கள். அந்த மகளிர் விடுதியில் போதியளவு முடிய குளியலறைகள் இருந்தும் அவர்கள் திறந்தவெளி குளியலறையில் குளிக்கவைக்கப்பட்டார்கள். அங்கு பல கண்காணிப்பு கமெராக்கள் திறந்தவெளி குளியலறை நோக்கி பொருத்தப்பட்டிருந்ததன. அதனைச் சுட்டிக்காட்டி மாணவச் சிறுமிகள் மூடிய குளியலறையில் அனுமதி கேட்க அது விடுதி முகாமையாளரும் முன்னாள் மகாஜனா கல்லூரி அதிபருமான சிவமலர் ஆனந்தசயனன...