Posts

ஒரு நாள் கூத்து(சிறுகதை)

Image
நட்சத்திரன் செவ்விந்தியன் எழுத்தாளன் காட்டுக்கும் நாட்டுக்குமிடையிலுள்ள புல்வெளியிலுள்ள ஒரே தனித்த வீட்டில் குதிரையோடும் இரண்டு நாய்களோடும் (Labrador Retriever, Rottweiler) வசிக்கவேண்டும். மதியத்தில் குதிரையை புல்வெளியில் மேயவிட்டபின் நாய்களோடு காட்டுக்கு வேட்டைக்கு போகிறான். அங்கு ஒரு வனமோகினியை சந்திக்கிறான். பகல்முழுக்க அவளோடு வனத்தில் அலைகிறான். நாய்கள் இவர்களை விட்டு தம்பாட்டுக்கு காடுமணந்து வேட்டையாடுகின்றன. அந்திசாய்கிறபோது வனமோகினி இரவுக்குமுன் தான் போய்விடவேண்டுமென்கிறாள். அவன் தன் நாய்களுக்காக விசில் அடித்தபோது மோகினி மறைந்துவிட்டாள். (அவள் Shrek பட இளவரசிபோல் இரவில் அரக்கியாபவள்)  நாய்கள் வாயில் இரண்டு உடும்புகளோடு பிரசன்னமாகின்றன. இரவில் அவளை தன்வீட்டுக்கு கூட்டிப்போய் அவளுக்கு சமைத்துப்போடும் தன் கலைந்த கனவோடு வீடேகிறான். பாதிவழியில் இன்னொரு விசிலடிக்க குதிரை கணங்களில் வாயில் நுரைதள்ள வந்து சேர்கிறது. உடும்புகளை கொடியால் கட்டி தோளில் போட்டு குதிரையில் முன்னிரவில் நட்சத்திரங்களை GPS ஆகவைத்து வைத்து வண்டிப்பாதைகள், காடு, மலை, கழனி கடந்து நகரம் போகிறான்.  அந்நகர மத...

பிரபாகரன் மாத்தையா(சிறுகதை)

Image
   நட்சத்திரன் செவ்விந்தியன்  தர்மபுரக்காட்டுக்குள்ளிருந்த பிரபாகரனின் பங்கருக்குள் நாமல் ராஜபக்க்ஷவும் மாலக சில்வாவும் (மேர்வின் சில்வாவின் மகன்) நானும் படிகளில் இறங்கி போகிறோம். மூன்றாவது தளத்தில் டைனிங் கோல் மாதிரியிருந்தது. அங்கிருந்த ஒரு பீரோவுக்குள் அன்ரன் பாலசிங்கம் அரைவாசி குடிச்சிட்டு வைத்திருந்த அரிய சிங்கிள் மோல்ற் ஸ்கொச் விஸ்கி போத்திலொன்றையும் அரிய கியுபன் சுருட்டுக்களையும் கண்டெடுக்கிறான் மாலக. நாங்கள் மூவரும் மேசையிலிருந்து ஒரு பெக் அடிக்க மாலக தள்ளிக்கொணர்ந்த செக் குடியரசை சேர்ந்த நீலக்கண் சரக்கு அப்பொலேனா  “ நான் ஜேர்மன், பெல்ஜியம் பியர்தான் குடிப்பேன்”  என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்த குளிர்சாதனப்பெட்டிகளில் சல்லடை போட்டாள். அவளுக்கு பியர் கிடைக்கவில்லை. அடேல் அன்ரி பாதி குடிச்சிட்டு வைத்திருந்த தென் ஆஸ்திரேலிய பரோஸா பள்ளத்தாக்கை சேர்ந்த செம்மதுப்புட்டி ஒன்று மட்டும் கிடைக்கிறது. அவள் தொடர்ந்து தேடியபோது அரச வம்சத்தினர் சாப்பிடும் கவியார் மீன் முட்டை ரின்கள் பலவும் விலையுயர்ந்த ரஷ்ய வோட்கா மதுவும் கிடைத்தன. கவியார் ரின்களைக்கண்டு மிகப்பரவசமடைந்...

கூட்டமைப்பு உருவான உண்மை வரலாறு

Image
நட்சத்திரன் செவ்விந்தியன் Rushangan Kodeeswaran, Amirthanayagam Nixon, Gowripal Sathiri Sri, DBS jeyaraj, Ramasamy Thurairatnam முதலிய "பத்திரிகையாளர்கள்"  கூட்டமைப்பு புலிகளால் 2001 ல் ஏற்படுத்தப்படவில்லை என்றும் கூட்டமைப்பு 2004ன் பின்னரே புலிகளால் கட்டுப்படுத்தப்பட்டது என்றும் ஒரு வரலாற்றுத்திரிப்பை செய்கின்றனர். கூட்டமைப்பு ஆரம்பத்திலிருந்தே(2001) புலிகளால் துப்பாக்கிமுனையில் உருவாக்கப்பட்டது என்பதை பின்வரும் எனது கட்டுரை ஆதாரங்களுடன் விளக்குகிறது. 2018 இறுதிப்பகுதியில் கம்பவாரிதி ஜெயராஜ்  நடத்திய ஒரு மேடையில் Kesavan Sajanthan கூட்டமைப்பு புலிகளால் துப்பாக்கி முனையில் உருவாக்கப்பட்டது என்பதை வெளிப்படையாக பேசியிருந்தார். எதிரிகளையும் துரோகிகளையும் கொல்லாது மிரட்டல், வசதிவாய்ப்பு மற்றும் பணம் அல்லது Blackmail என்கிற பணையவைப்பு/பொறிவைப்பு மூலம் தங்களுக்கு வேலைசெய்பவர்களாக மாற்றும் தந்திரம் ஒரு பழைய ராசதந்திரம். இது ஸ்ராலின்கால சோவியத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட உத்தி. புலிகள் இந்த உத்தியை பயன்படுத்த காரணமாக இருந்தவர் புலிகளின் பல சகுனி வேலைகளுக்கு காரணமாக இருந்த அன்ரன் பால...

பொக்ஸ் நாவல்: ஒரு மலின இலக்கியம்

Image
Pornography of Literature மதிப்புரை  நட்சத்திரன் செவ்விந்தியன் 2009ல் ஈழப்போர் முடிந்தபின் தமிழ் உணர்வை சனரஞ்சகமான கச்சாப்பொருளாக்கி சுமாரான மற்றும் மோசமான ஈழப்போர் சம்பந்தமான நாவல்கள் வெளிவந்தன. ஆனந்த விகடன் போன்ற வியாபார நிறுவனங்கள் ஊக்குவித்த இந்த போக்கின்படி தமிழ்க்கவி, தமிழ்நதி, சயந்தன், குணா கவியழகன், தீபச்செல்வன் முதலியோர் எழுதிய நாவல்கள் வெளிவந்து சனரஞ்சக மதிப்பைபெற்று பிரபல்யமாகின்றன. இந்த நாவல்களை எழுதியவர்களுக்கு தமிழகத்தில் கிடைக்கும் பிரபல்யத்தால் மனங்குமைந்து "ரென்சனான" ஷோபாசக்தி தனக்கு இருக்கும் தெரிவுகளை ஆராய்கிறார். ஷோபாசக்திக்கு தனது சரக்கும் இலக்கிய திறமைகளும் தீர்ந்துபோனது தெரியும். புலி எதிர்ப்பாளன், புலி விமர்சகன் போன்ற தனக்கு எதிராக இருக்கிற வணிக சாபங்களையும் சமரசம் செய்து குத்துக்கரணமடித்து புலியாதரவு நாவலாகவே எழுதுவதைத்தவிர தன்னிடம் திராணி இல்லை என்பதை உணர்ந்த ஷோபாசக்தி தீட்டியதுதான் "ஒப்பரேஷன் Box"                               மோசடி இதழ்: 7-11-2012 1. முன்னாள் பெண்புலி தளபதி ...

செல்லன் கந்தையன், ஷோபாசக்தி, ராஜசிங்கம் சகோதரிகள்+ராகவன் Public Relations ஏஜன்சி

Image
  நட்சத்திரன் செவ்விந்தியன் அறுபதுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்தளவு கொடுமையான சாதி அடக்குமுறை புத்தாயிரங்களில் (2003) இருந்ததில்லை. 1968ல் தாழ்த்தப்பட்ட மக்கள்  ஆதிக்க சாதியினரின் ஒத்துழைப்போடு வெற்றிகரமாக மாவிட்டபுரம் ஆலயப்பிரவேசத்தை செய்தபோது  சுயாதீன அரசியல்வாதிகளில் ஒருவரான பேரா. சுந்தரலிங்கம் மாவிட்டபுர ஆலய அறங்காவலராக இருந்து இறுதிவரை ஆலயப்பிரவேசத்தை தடுக்க முனைந்தார். சாதி வெறியை வைத்து 1970 தேர்தலில் சுந்தரலிங்கம் மாவிட்டபுரம் கோயில் அமைந்துள்ள அதே காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்ட போதும் கிறிஸ்தவரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான தந்தை செல்வாவால் தோற்கடிக்கப்பட்டார். தமிழரசுக்கட்சி 1968ல் நடந்த தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப்பிரவேசப் போராட்டத்தை ஆதரித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.            தீண்டாமை ஒழிப்புச்சட்டத்தின்                                           சிற்பிகள்        ராஜவரோதயம்    ...

அன்ரன் பாலசிங்கம் புதிய வரலாற்று தொடர்

Image
(By நட்சத்திரன் செவ்விந்தியன்) அத்தியாயம் ஒன்று 2005 மாவீரர் நாளில் லண்டனில்  "ரணில் ஒரு நரியன்" என்று அன்ரன் பாலசிங்கம் உரையாற்றுகிற ஒரு வீடியோவை பார்த்திருப்பீர்கள்.  இந்த உரையை வழங்குகிறபோது பாலசிங்கம் வன்னியில் செத்துப்பிழைத்து தாய்லாந்து வழியாக லண்டன்சீமைக்கு நடைப்பிணமாக வந்தவர். அவரது மதியுரைஞர் வாழ்நாள் முழுக்க சாராய புகையிலை போதையில் இருந்தவர். சலரோக நோய் முத்தி தன் சிறுநீரகங்களை இழந்து இரவல் சிறுநீரகங்களில் பிழைத்த பாலசிங்கத்தின் உடல் மொழியை கவனியுங்கள். எவ்வளவு கஸ்ரப்பட்டு சேடமிழுத்து அந்த உரையை வழங்குகிறார். இப்போது பாலசிங்கம் உயிர்வாழ்வதற்கு வழங்கப்பட்ட குளிசைகளின் போதையில் இவ்வுரையை வழங்குகிறார். அவரது நாக்கு மட்டுமல்ல உடலும் தள்ளாடுகிறது. கடல்வழியாக தாய்லாந்து வழி லண்டன்போன பிற்காலத்தில் பாலசிங்கம் வழங்கிய பல உரைகள் சபை நாகரீகமற்ற பேச்சுக்கள். ஒரு ராசதந்திரியின் பண்புகளற்றவை. கருணா தாய்லாந்தில் சரக்கடித்ததால்தான் பின்னர் பிரிந்தார்/ ஆனந்த சங்கரியின் உடும்பு றச்சியும் இரண்டு கிழவிகளும்/ சிங்களவனுக்கு மேல்வீடு இல்லை இந்த வகையான விசிலடிச்சான் குஞ்சுகளுக்கான குடிகார...

குருபரன்: தமிழ்தேசிய கட்டப்பஞ்சாயத்து தலைவர்

Image
(By நட்சத்திரன் செவ்விந்தியன்) முன்னாள் முதலமைச்சர் புதுக்கட்சி தொடங்கிய புதின விழாவில் குருபரன் குமாரவடிவேல் வழங்கிய முழு உரையையும் கிரகித்து ஆராய்ந்து இதனை எழுதுகிறேன். புலிகளின் ஈழப்போருக்குப்பின்னான காலத்தில் சந்தர்ப்பவாத தேசியவாதப்பத்திரிகைகளும் அவரும் குருபரனை வெகுகச்சிதமாக தமிழ்த்தேசியத்தின் தத்துவாசிரியராக வடிவமைத்துள்ளனர். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை என்பதுபோல அவர் போட்டியிடாமலே இப்பதவியை பெற்றுக்கொண்டார். குருபரன் புத்திசீவியா அல்லது வெறும் Technocrat தானா?  திறமையான புத்திசீவியின் அடிப்படைப்பண்புகள் தனக்காக தன் சாதிக்கான/குழுமத்திற்கான/பிரதேசத்திற்கான/ வர்க்கத்திற்கான/இனத்திற்கான நலனிற்காக சிந்திக்காது முழு சமூகத்திற்காக முமு நாட்டிற்காக சர்வதேசப்பின்புலத்தில் வைத்து சிந்திப்பது. தான் படித்த சட்டத்துறை விதிகள் சூக்குமங்களை மட்டும் அடிப்படையாக வைத்து சிந்திக்காமல் வரலாறு சமூகவியல் அரசியல் மனித உரிமைகள், சர்வதேச பூகோள அரசியல் மானுடவியல் இனவியல் போன்ற இன்னபிற கற்கைநெறிகள் சார்ந்து multifaceted- பன்மைத்துவம் சார்ந்து சிந்திப்பது. சமகால உலகின் மிக அற்புதமான சட்த்த...