சுஜாதா: ஒரு மறு மதிப்பீடு

(By Vasu Devan)

 மிகை உணர்ச்சியை மலிவாக தூண்டும் மேம்போக்கான எழுத்து சுஜாதாவுடையது.

 எந்த ஆழமும் இல்லாமல் அனைத்தையும் எளிமைப்படுத்தி பண்ட சரக்காக மாற்றியதில் கெட்டிக்காரர்..அனைத்து அறிவார்த்த துறையைப்பற்றியும் சுருக்கி போலி அறிவு ஜீவி முகமூடி மூலம் நடுத்தர வர்க்கத்தை கவர்ந்தவர். மொழியை சீரழித்தது மட்டுமல்லாமல் ஒரு தலைமுறையை சர்வ நாசப்படுத்தியதில் இவருக்கு பெரும் பங்குண்டு.

அவர் இறந்தபிறகும் அவர் பெயரில் ஒரு விருதை ஏற்படுத்தி அவர் பிம்பத்திற்கு எந்த சேதாரமும் இல்லாமல் காப்பது மட்டுமல்லாமல், அவரை இலக்கியவாதி வரிசையில் பீடத்தில் தூக்கி நிறுத்தும் அவலமும் தொடர்கிறது.. சொந்த விசுவாசத்திற்கும் நன்றிக்கடனுக்கும், ஒரு மலிவான வணிக எழுத்தாளருக்கு இலக்கிய அந்தஸ்தை வலிய வழங்கி அதை பிறரையும் ஏற்கச்செய்யும் மோசடித்தனம் இங்குதான் சாத்தியம்.. சுஜாதா / பாலகுமார் குப்பைகள் எந்த வேப்பிலை அடித்தும் நகரமாட்டேங்கிறது..அந்தளவுக்கு கெடுதல் விளைவிக்கும் கதிர் வீச்சு நச்சுத்தன்மை கொண்ட எழுத்து.

அவரைப்பற்றி நண்பர் #நாவிச்வநாதன் எழுதியதை கீழே வாசிக்கலாம்.. சுஜாதா என்ற ஆரவாரம் ~~~ 'வந்தேனய்யா நானும் வந்தேனய்யா-வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேனய்யா...' முன்கால நாடகங்களில் நாகரிகக் கோமாளி ஒருவர் வருவார்.அளவுக்கு மீறிய அரிதாரம் அலங்காரம் ஜிலுஜிலுப்பு ஏகப்பட்டஆரவாரம் பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் சும்மா தகதகவெனப் பார்க்கும்போது அந்த இடமே களைகட்டிவிடும்.சீரங்கத்து சுஜாதாவின் வருகை இப்படித்தான் இலக்கியக் களத்தில் இருந்தது.இது தமிழுக்குவழக்கமானதுதான். ஸ்ரீமான் வடுவூர்துரைசாமிஐயங்கார்சுவாமி, வை.மு.கோதைநாயகியம்மாள், கேஆர் ரங்க ராஜூ, கல்கி, சாண்டில்யன், இலக்கிய சாம்ராட் என தன்னையே அழைத்துக் கொள்ளும் கோவிமணிசேகரன் என்ற நீள்வரிசையில் சுஜாதா ஒரு கண்ணி.

கிஞ்சித்தும் பயனற்ற விஷயங்களையும் தமிழ்க்களத்தில் தூக்கிப் பிடித்து லாபகரமான வணிகம் சாத்தியமே என்பதும் நிரூபணமானது. இங்கு எந்தக் கந்தை கஷாயங்களையும் சுலபமாக விற்று விடலாம் என்பதும் பதிவானது. சுஜாதா சீசன் எழுத்துதான்.மாஸ்யம் பண்ணுவது மாதிரிதான்.மௌனி குபரா புதுமைப்பித்தன் ந.பிச்சமூர்த்தி ஜானகிராமன் எம்விவி முத லானோர் வளப்படுத்திவைத்திருந்த செம்மையான எழுத்து வளத்தைச் சேதமாக்கியது சுஜாதாவின் மேலான கைங்கர்யமே.தமிழ் வாசகர்களின் நாடிச் சப்தம் அறிந்த இவர் அதற்கேற்றாற்போல ஆரோகண அவரோகண மிசைத்தார்.கொஞ்சம் பிரகாசம் காட்டி னாலே ஒரு கணிசமான சிஷ்ய கோடிகள் பின்தொடரும் சுபாவபூமி இது.

ஆன்மிகத் திருமடங்களுக்குக்கூடுவதுபோல.இலக்கியத்திலும் அடியார்திருக்கூட்டத்திற்குப் பஞ்ச மில்லை.பாதபூஜைக்கு 'ரெடி' தான்.சுஜாதாகொழுத்த தீனிபோட்டார்.யோக ஜாதகர். எல்லாக் கட்டங்களிலும் உத்தமமான ராசிநட்சத்திரங்கள்.அதிகப்படியாகவே புகழப் பட்டு படுபுஷ்டியாக்கப்பட்டது தற்செயலானதல்ல. தானே நிராகரித்து கசக்கிப் போட்ட காகிதச் சுருள்களைத் தேடித்தேடி வெகுஜாக்கிரதையாகப் பிரித்து -சுஜாதா வீட்டுச் சலவைக்கணக்குப்பட்டியல் உட்பட-அச்சிடஒரு சிறு- பெரு பத்திரிகைக் கோஷ்டியே அவர்வீட்டு வாசலில் காத்துக் கிடந்தது பற்றிஎன்ன சொல்ல? சுஜாதா கிராக்கி பண்ணிக் கொள்ள நியாயமிருந்தது.

"சிறந்த எழுத்தை எழுதினேன் என்று யாரும்சொல்லிக் கொள்ள முடியாது" என்று வாதம் செய்த சுஜாதாவிற்கு தமிழ் எழுத்து மரபு தெரியாமல் போனது.மணிக்கொடி, கிராம ஊழியன், தேனீ, எழுத்து, நடை,பிரக்ஞை போன்ற இதழ்கள் முக்கி முனகி "சத்"எழுத்து யாகம் பண்ணிக் கொண்டிருந்தது தெரியும். விற்காத பண்டத்தை மார்க்கெட் டில் விட அவரொன்றும்அசட்டு பிராமணரல்ல.எழுதியபின் எழுத்தாளன் பணிமுடிந்தது.பிறகு வாசகனுக்குத்தான் வேலை. ஒரு சிறிய வாசிக்கும்கும்பலைத் தனக்காகத் தயாரித்து வைத்திருந்தார்.பிறர் பிரச்சனைகள் என்றும் மற்றவர்களுக்குச் சுவாரசியமானவையே. அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சாமர்த்திய எழுத்தைச் சரசர வென விட்டது கலைநேர்த்தியே.

நிலம்'என்ற தன் கதையை அவரே சிலாகித்துக் கொண்டார்.இதுபோன்ற கதைகள் இவ ருக்கு முன்னும் பின்னும் இருக்கவே செய்தன.நடுத்தரவர்க்கம் என்பதே என்றைக்கும் ஏமாளி வர்க்கம்தான்.மொத்து பட்டாலும் கோபப்படாமல் விதி வலிது என்று உதறி விட்டுப் போகும் கூட்டமே.முதல்தரம் அநேகமாக ஜெயிக்காமல் போவதற்கு இதுதான் காரணம்.இரண்டு,மூன்று நான்காம்தரம் ஜெயபேரிகை கொட்டிக் கொண்டிருப்பதற்குக்கும் இதுவே காரணம் என்றறிக. Omnipresent- "சுஜாதா பிரமாதமாக வருவார்" என க.நா.சு ஒரு வாக்குமூலம் தந்திருக்கிறார்.சுஜாதா வின் முதல்கதை 'சிவாஜி'இதழில் வந்தது என்பதால் போட்ட தப்புக் கணக்கு.க.நா.சு மாப்பிளை பாரதிமணி கொஞ்சம் தூக்கிப் பிடித்துப் பார்த்தார்.மாமனார்மாதிரி மாப்பி ளையாண்டான் இருக்க முடியாது. மக்கள் திரளுக்குப் பிடித்தால் அது நல்ல இலக்கி யம் என்பது கோணல்.மக்களுக்குப் பிடிக்குமாறு பார்த்துப் பார்த்துச் செய்வது வணிகம். பெண்களை போகப் பொருளாகவே பார்த்து விவரமான வியாக்யானங்கள் பண்ணியது சாண்டில்யன் தாண்டி.ஆசானை விஞ்சுவது. ஒருதடவை வசமாக மாட்டிக் கொண்டார் சாதி சார்ந்து- பெரிய கலவரமாக ஆயிற்று.அப்புறம் எதிர்வினையாற்றாத தன் சமூகப் பெண்களையே ஆட்படுத்தினார்.அநேகமாகஆண்-பெண்களின் உஷ்ணப் பெருமூச்சு மட்டுமே கதைக்களமானது.வெறும் தசைத்திரள்களாலான இரு மார்பகங்களுக்குத் தங்கக் குடங்கள் உவமம்,எச்சிலும் உமிழ்நீரும் ஊறலும் முகத்திற்கு நிலா உவமம், ஒழுகும் சிறுநீரால் ஈரப்படுத்தப்பட்ட இடுப்பினுடைய பின்பகுதிக்கு யானையின் தலை உவமம் என்று பத்ருகிரி மாதிரி ஆரம்பித்துவிட்டார். "நெற்றியைச் சுருக்கிக் கொண்டு நாலுநாள் தாடியோடு உட்கார்ந்திருப்பதுதான் முக்கிய மானது என்று கருதுகிறார்கள்"என்று அவர் அடிக்கடிக் கிண்டலடிப்பார்.ஜி.நாகராஜன் புதுமைப்பித்தன் ஜெயகாந்தன் போன்ற ஆளுமைகளின் சமூக அக்கறை சுஜாதா என்ற விஞ்ஞானிக்கு- கலைமாமணி விருது வாக்குப்பதிவு எந்திரம் கண்டுபிடிக்கப் பணி யாற்றியதற்காகக் கிடைத்த சிறந்த அறிவியலறிஞர்விருது வாஸ் விக் விருதுகள் போல கூடைகூடையாக கௌரவங்கள் பெற்ற நம் எழுத்தாளருக்குப் பிடிபடவே இல்லைதான். தான் எழுதுவது நிலைக்காது என்றறிந்து பின்னர் சங்க இலக்கியங்களில் கைவைத்து வாங்கிக் கட்டிக் கொண்டார்.சங்கப்பாடல்களுக்கு உரை, திருக்குறளுக்கு உரை என ஏகப்பட்ட அபத்தங்கள்.எடுபடவில்லை.கணையாழி கடைசிப்பக்கங்கள் என துண்டு துணுக்குகளாய் நிறைய எழுதினார்.இலக்கிகிய அந்தஸ்தின் தேவை இருந்தது.தன்னு டைய எழுத்தின் பலம் பலவீனம் அறிந்ததேஇருந்தார்.வேண்டுமென்றே அதிர்வடைவை க்க ஏதோ பண்ணினார்.தமிழிலக்கிய வரலாற்றில் தனக்கான இடத்தைத் தானே காணா மலடித்துக் கொண்டார்.பால்ய காலத்தில்நானும் இவரிடம் ஆட்பட்டவன்தான்.பின் னரான வாசிப்பு ,அனுபவம்,முதிர்ச்சி சுஜாதாவை அடையாளம் காட்டியது. "அங்குற்றேனல்லன் இங்குற்றேனல்லன் நின்னைக் காணும் அவாவில் எங்குற்றே னும் அல்லன்"என்ற ஆழ்வார் நிலைமைதான். என்ன செய்ய? '""

தொடர்பான கட்டுரைகள்

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

யாழ்ப்பாணம் தோற்ற கதை