ஒரு சைக்கோவின் வாக்குமுலம்

"எனது முன்னாள் காதலியைப் பற்றிய நினைவுகள் மேலோங்கும் போது நான் மிகுந்த வெறுப்புக்குள்ளாகிறேன். யாரையாவது தாக்கவேண்டும என்று வெறி என்னுள் எழுகின்றது."      -ரஞ்சகுமார்


By அ.யேசுராசா

அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள். வந்து கொண்டிருந்தோரின் எண்ணிக்கை அதிகமாகி கதிரைகள் போதாமற் போகவே, சில பல்கலைக்கழக இளைஞர்கள் (கூட்ட அமைப்பாளர்களுடன் சம்பந்தப்படாதவர்கள்) தாமாகவே எழும்பிச் சென்று, அடுத்த அறைகளிலிருந்து கதிரைகளை அடிக்கடி எடுத்து வந்து வசதிசெய்து கொடுத்த செயல் மனதில் பதிந்தது. மற்றப்படிக்கு, பிரமுகர்களுக்கும் காசுள்ள முதலாளிகளுக்கும் கெளரவம் கொடுத்து (என்று மறையும் இந்நிலை?) நடத்தப்பட்ட வழமையான கூட்டம். 

ஆய்வுரைகள் முடிந்தபின் நூலாசிரியர் தான் பேசவேண்டியதை நீண்ட கட்டுரையாக எழுதி வாசித்தார். பல இடங்களில் கருத்துக்கள் நெருடலை ஏற்படுத்தின; ஆயினும் அவற்றையெல்லாம் பற்றிக் கருத்துரைத்து உங்களைச் சோதிக்கும் எண்ணம், இல்லை. 

ஓரிடத்தில் அவர் சொன்னார்.

 "எனது முன்னைய நாள் காதலியைப் பற்றிய நினைவுகள் மேலோங்கும் போது நான் மிகுந்த வெறுப்புக்குள்ளாகிறேன். பதட்டமடைகிறேன். யாரையாவது தாக்கவேண்டும என்று வெறி என்னுள் எழுகின்றது."

 'அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் எழுதிய கதைதான் ...... ஒரு மோசமான கதை. அம்புலிமாமாக் கதைபோல இருக்கிறது. இதிலுள்ள ஒரேயொரு நல்ல அம்சம் கவர்ச்சியைத் தரும் அந்தத் தலைப்புத்தான் என்று தோன்றுகிறது" 

 உண்மையில் இக்கதை(மோகவாசல்) மோசமான கதையென்பதில் சந்தேகமில்லை சரி! மோசமான கதையென்று தெரிந்தபின்பும் அதைத் தொகுதியில் ஏன் சேர்க்கவேண்டும்? அதிலும், மோசமான அக்கதையைத்தான் தொகுப்பின் தலைப்புக் கதையாக வைக்கவேண்டுமா? ஈழத்து இலக்கிய வாசகர்கள் 'அம்புலிமாமாக் கதை படிக்கும் தரத்தில்தான் இருக்கிறார்களா? 

புத்தகத்திலுள்ள ஏழு கதைகளில் நான்கு மட்டும் ஏற்கனவே ஒரு சிறுசஞ்சிகையில் வெளியிடப்பட்டவை விளக்கப்படங்கள் வரைந்தவர்களின் பெயர்ப் புத்தகத்தில் தரப்பட்டுள்ளன. முன்புற பின்புற அட்டைப் படங்களைப் பெற்ற சஞ்சிகைகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது; அதில் ஒரு சஞ்சிகை (ஆனந்தி) இன்று வரை வெளிவராத சஞ்சிகை! 

 இனித்தான் சுவாரசியமான செய்தி இருக்கிறது. இந்த எழுத்தாளரின் கதையை முதலில் வெளியிட்டதோடு, ஏனைய மூன்று கதைகளையும் (அதில் இரண்டு மிக நீண்ட கதைகள்) வெளியிட்டு இலக்கிய உலகிற்கு அவரை நன்கு அறிமுகப்படுத்திய அந்தச் சிறு சஞ்சிகையின் பெயர்(அலை) மட்டும், புத்தகத்தில் எங்குமே குறிப்பிடப்படவில்லை.

 தார்மீகப் பொறுப்பு என ஏதோ வொன்று இருக்கிறதாகத் தான் எனக்கு நினைவு. கூடவே, இதையெல்லாம் 'சுத்த அக்கப்போர் என்று அந்த எழுத்தாளர் சொல்லி விடுவாரோ என்று, பயமாகவும் இருக்கிறது!                                                   நன்றி: திசை(25.8.89)

பிற்குறிப்பு

 அ. யேசுராசா ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர். 70 கள், 80 களில் இவர் ஆசிரியராக இருந்து வெளியிட்ட அலை சஞ்சிகை ஈழ இலக்கியத்தில் மிகப்பெரிய தாக்கம் செலுத்தியது. 80 களில் அ. யேசுராசா அவர்கள் ரஞ்சகுமாரரின் Mentor ஆக இருந்து ரச்சகுமாரின் பல சிறுகதைகளை வெளியிட்டு ரஞ்சகுமாரை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தினார். குறுக்கு வழியில் புகழ் சம்பாதிக்க விரும்பிய ரஞ்சகுமார் யேசுராசாவின் எதிர் முகாமில் இருந்த பேராசிரியர் சிவத்தம்பியை பிரதம விருந்தினராக அழைத்து தனது தொகுதியை வெளியிட்டார். யேசுராசா விழாவுக்கு அழைக்கப் படக்கூட இல்லை. யேசுராசா ஒரு பார்வையாளராகக் கலந்து கொண்டு எழுதிய கட்டுரை இது. யேசுராசாவின் புத்தகமான தூவானம் நூலில் இக்கட்டுரை உண்டு.

அண்மையில் எனது இச்சா விமர்சனம் தொடர்பான விவாதங்களில் ரஞ்சகுமார் என்னையும் ஜெயமோகனையும் உளநோயாளிகள் என்று அர்த்தம் பட முகநூல் பின்னூட்டங்களில் தாக்கியிருந்தார். வாழ்வில் ஒரேயொரு சிறுகதை தொகுதி வெளியிட்டுவிட்டு அந்த மோகவாசலில் இன்று வரை ஓட்டிக்கொண்டு தன்னுடைய Narcissistic Complex க்கு குளிர்காய்கிறவர் ரஞ்சகுமார். இந்தப்பதில் காணாவிட்டால் ரஞ்சகுமாருக்கு விரிவான பதில் தரப்படும். -நட்சத்திரன் செவ்விந்தியன்  

தொடர்பான கட்டுரைகள்

1. சைக்கோபாத்01: உமா வரதராஜன்

2. சைக்கோபாத் 02: பாலு மகேந்திரா


Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

💥கள நிலவரம்💣 ஈழப்போரின் இறுதிக்காட்சிகள்