இலக்கிய திருடன் சாரு நிவேதிதா

 


இணையத்தில் வளைய வரும் நண்பர்கள் இந்தத் தலைப்பை பார்த்து அதிர்ச்சியடையக் கூடும்அல்லது எதிர்மறையாக தலைப்பை வைத்து இந்தப் பதிவு புகழ் அடைய நினைப்பதாக கருதவும் கூடும்அப்படியெல்லாம் எதுவுமில்லைஇது அக்மார்க் உண்மைதகவல் பிழைகளுடன் தப்பும் தவறுமாக சாருவுக்கு ‘பத்தி(?)’ எழுத வருமே தவிர புதினத்துக்கும் அவருக்கும் 7 கடல், 7 மலை தூரம்.

உதாரணத்துக்கு அவரது சிறுகதை தொகுப்பை எடுத்துக் கொள்வோம்இந்த 2009ம் ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை எதுவென்றால்அது சாரு நிவேதிதாவின் ‘முழு(?)’ சிறுகதைகள் அடங்கிய தொகுப்பான ‘மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள்‘ தொகுப்புதான் (உயிர்மை வெளியீடு). ‘சாரு நிவேதிதா எழுதிய‘ சிறுகதைகளின் முழு தொகுதி இது என தொகுப்பின் பின் அட்டை சொல்கிறதுஉண்மையிலேயே சாருவின் முழு சிறுகதைகளும் அடங்கிய தொகுப்பா இது?



சத்தியமாக இல்லைஅந்த தொகுப்பில்‘ குறிப்பிட்டு சொல்லும்படியாக இருகதைகள் மிஸ்ஸிங்ஒன்று ‘இந்தியா டுடே‘ இதழில் வெளியாகி இலக்கிய சிந்தனை‘ பரிசு பெற்றதுஇன்னொன்று ‘குமுதம்‘ குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுநாவல்இத்தனைக்கும் இந்த இரண்டும் 70களிலோ அல்லது 80களிலோ பிரசுரமாகவில்லை. ‘புகழ்‘ ஏணியில் அவர் ஏற ஆரம்பித்த 90களில் பிரசுரமானதுஅந்த இரண்டையும் அவர் ஏன் தன் தொகுப்பில் சேர்க்கவில்லைஅங்குதான் இருக்கிறது விஷயமே.

சஃபர்‘ என்னும் அந்தச் சிறுகதை ‘இந்தியா டுடேவில் வெளியாகி அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக இராமுருகனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1995ம் ஆண்டு வெளியான இலக்கிய சிந்தனைகள் தொகுதியிலும் இடம்பெற்றதுபரவலாக சிலாகிக்கப்பட்ட அந்த சிறுகதையை சாரு இந்த ‘முழு‘ தொகுப்பில் சேர்க்கவில்லைஏன்?அதேபோல் ‘குமுதம்‘ இதழில் ‘தஸ்தகீர் நெய்தல் நிலக் குறிப்புகள்‘. இதற்கு பின்னால் ‘குசு‘ (நன்றிசாருவிட்டு சிரிக்கும் அளவுக்கு சில விஷயங்கள் இருக்கின்றன. ‘குமுதம்‘ இதழில் முதலில் சாரு நிவேதிதா எழுதிய ‘கொடிக் கப்பல்‘ குறுநாவல் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதுஆனால்பிரசுரமானபோது ‘தஸ்தகீர் – நெய்தல் நிலக் குறிப்புகள்‘ வந்ததுஇதற்கும் பலத்த பாராட்டுவரவேற்புஆனால்அந்தோ பரிதாபம்இதுவும் சாருவின் முழு தொகுப்பில் இடம் பெறவில்லைஎன்ன காரணம்மறந்துவிட்டாராஅல்லது பிரசுரமான இதழ்கள் தொலைந்து போயிற்றாஅப்படியே ‘காணாமல்‘ போனாலும் சம்மந்தப்பட்ட இதழ்களை தொடர்பு கொண்டு குறைந்தபட்சம் அந்த குறிப்பிட்ட இதழ்களின் நகல்களையாவது வாங்கியிருக்கலாமே? 15 ஆண்டுகளுக்குள் பிரசுரமானவைதானே அவைகள்?

ஆனால்அப்படி எதுவும் சாரு செய்திருக்கமாட்டார்தன் பெயரில் பிரசுரமான அவை இரண்டையும் ஒரு போதும் இனி அது, தான் எழுதியதுதான் என சொல்லவேமாட்டார்காரணம்அந்த இரண்டு கதைகளும் எழுத்தாளர் ஆபிதீனால் எழுதப்பட்டவைஅந்த விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்ததும் சம்மந்தப்பட்டவர்களின் கை கால்களில் விழுந்து தன் ‘புகழை‘ காப்பாற்றிக் கொண்டார். அப்படியானால் மற்றவை எல்லாம் சாரு எழுதியதுதானே… என அவசரப்படாதீர்கள்ஆபிதீன் துணிந்து முறையிட்டதால் அவை இரண்டும் வெளிச்சத்துக்கு வந்ததுமற்றவர்கள் மவுனமாக இருப்பதால்இன்று வரை அவை சாரு எழுதியதாகவே‘ கருதப்பட்டு வருகின்றன.

                                  ஆப்தீன் 



ஏதோ போகிற போக்கில் சாருவின் மீது சேற்றை வீசுவதாக நினைக்காதீர்கள்சிறு பத்திரிகை அன்பர்கள் அனைவருக்கும் இந்த ‘விஷயம்‘ தெரியும்ஆபிதீன் நாகூரை சேர்ந்த எழுத்தாளர்சாருவின் நண்பர்அதாவது நண்பராக இருந்தவர்பல ஆண்டுகளாக துபாயில் வாழ்ந்து வருகிறார்அவர் சாருவுக்கு நட்பின் அடிப்படையில் எழுதிய கடிதங்களும்அதில் இருந்த விவரணைகளையும்ரத்தம் கக்கக் கக்க உத்வேகத்துடன் எழுதிய படைப்புகளையும் சாருவிடம் கொடுத்திருந்தார்அதைதான் சாரு தன் பெயரில் பயன்படுத்திக் கொண்டார்‘.

இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் ஆபிதீன் எழுதிய சிறுகதை தொகுப்பான ‘இடம்‘ (ஸ்நேகா வெளியீடு, 348, டிடிகேசாலைஇராயப்பேட்டைசென்னை 14, ஜூலை 2003ல் வெளிவந்ததுதொகுப்பில் பக்கம்: 177 முதல் 200 வரை வெளியாகியிருக்கும் கடிதங்களை பாருங்கள்இப்போது இந்தப் புத்தகம் அச்சிலோவிற்பனையிலோ இல்லை. ‘மொத்தமாக யாரோ வாங்கி விட்டதாக‘ காற்றில் ஒரு செய்தி கரைந்துவிட்டது..! நண்பர்களிடம் இருந்தால் அவசியம் வாங்கி படியுங்கள்சாருவின் திருட்டுத்தனம் தெளிவாக தெரியும்அவரது ‘எல்லா‘ புதினங்களுமே எந்தளவுக்கு களவாடப்பட்டவை என்பதை உணரலாம்.

அப்படியும் இல்லாவிட்டால் இணையத்தில் இப்போதும் எழுதிவரும் நாகூர் ருமிஆபிதீன் (அதே அதே ஆபிதீன்தான்) ஆகியோருக்கு இ மெயில் அனுப்பி விசாரித்துப் பாருங்கள்உண்மை புரியும்.

ஆபிதீன் யார் என்றே தனக்கு தெரியாது என சாரு ஒருவேளை புளுகக் கூடும்பொய் சொல்வதும் சாரு பேசுவதும் எழுதுவதும் ஒன்றுதான் என்னும்போது இப்படியான ‘கருத்தை‘ அவசியம் எதிர்பார்க்கலாம்ஆனால், ‘கவனமாக‘ சாரு தனது ‘முழு‘ சிறுகதைகள் அடங்கிய தொகுப்பாக தொகுத்திருக்கும் ‘மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள்‘ தொகுப்பிலேயே ஆபிதீன் குறித்த குறிப்புகளும்விவரங்களும் இருக்கின்றனஅதுபோக சாருவின் முதல் நாவலான – அதாவது அவரது பெயரில் வெளிவந்த – ‘எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்‘ நாவலின் முதல் பதிப்பை பாருங்கள்அட்டையிலுள்ள அந்த எழுத்துக்களை எழுதியது ஆபிதீன்தான்மட்டுமல்லஅதில் முன்னுரையாக பிரேமின் முக்கியமான கட்டுரை வெளியாகியிருக்கும்நாகார்ஜுனனும்ஜமாலனும் அந்த கட்டுரையை முன்வைத்துதான் நாவலை விமர்சனம் செய்திருப்பார்கள்அந்த கட்டுரையும் சரிஆபிதீன் எழுதிய எழுத்தும் சரிஅதன் பின் வந்த எந்த பதிப்பிலும் இல்லை!

இதோ ‘இடம்‘ சிறுகதை தொகுப்பின் பின் இணைப்பாக பிரசுரமாகியிருக்கும் சில கடிதங்கள்

சாரு நிவேதிதாவின் முதல் மனைவியான விசாலாட்சியின் (சம்யுக்தாஅமரந்தா என்ற பெயர்களில் குறிப்பிடும்படியான மொழிபெயர்ப்புகளை சிறு பத்திரிகைகளில் செய்து வருபவர்) 1. 10. 2002 தேதியிட்ட கடிதம்  
                               
                                  அமரந்தா



டியர் மிஸ்டர் ரஃபி (நாகூர் ருமி)

சாரு நிவேதிதா ஆபிதீனிடமிருந்து மட்டும் திருடவில்லைஎன் மகள் எழுதியதிலிருந்தும் திருடியுள்ளார்ஆமாம்அவள் தனது பள்ளி தாளாளரின் மோசமான நடவடிகையைப் பற்றி ஒரு கடிதம் போல் எழுதியிருந்தாள்அதிலிருந்து அவர் திருடி அதை ஒரு கதையாக்கிவிட்டார்அவருடைய ‘திருவிளையாடல்கள்‘ பற்றி குறிப்பில் இதையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்எந்த அளவுகு சாரு நிவேதிதா கீழே இறங்குவார் என்பதை இது விளக்கப் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

(இந்தக் கடிதத்தை விசாலாட்சி எனக்கு ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்சாரு நிவேதிதாவை ‘அவர்‘ என்று குறிப்பிட்டாரா அல்லது ‘அவன்‘ என்று குறிப்பிட்டாரா என்று தெரிந்து கொள்ள முடியவில்லை: நாகூர் ருமி) 

 

‘இடம்’ பக்கம் : 180

காலச்சுவடு‘ இதழில் பிரேம் ரமேஷ் எழுதிய கடிதம்



இப்போது ‘காலச்சுவடில்‘ இந்த வம்புஅடிதடியில் அவர் (சாரு நிவேதிதாஇறங்கியதற்கு காரணம் ஆபிதீன்ஆபிதீன் என்பவரை சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் அறிவார்கள். ‘யாத்ராவில் கவிதைகள் எழுதியிருக்கிறார்அவருடைய மூன்று நாவல்கள் 1. பழைய வீடு, 2. அறிந்தவர்களைக் குறித்து அறியாதவர்களுக்கு, 3. மூலம்இந்தப் படைப்புகள் இப்போது சாரு நிவேதிதாவிடம் உள்ளனஅவற்றை முறையே ‘நதியின் சரிதம்‘, ‘108 கதைகளும் 108 கனவுகளும்‘, ‘Skiing and Buddhism’ என்று தலைப்புகளை மாற்றி தனது பெயரில் வெளியிட முயற்சிப்பதை பிரேம் ரமேஷ் (ஆகிய நாங்கள்எதிர்த்ததால் எங்கள் மீது கோபம் கொண்டு இப்படி சாணி வாரி வீசுகிறார்.



சாரு நிவேதிதாவின் முதல் நாவலான ‘எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்‘ என்ற படைப்பு பிரேம் எழுதித் தர அதை தன் பெயரில் சாரு நிவேதிதா போட்டுக் கொண்டார்அதே போல் ‘ஸீரோ டிகிரி‘ நாவல் ரமேஷ் எழுதித் தந்ததுஅதையும் தன் பெயரில் போட்டுக் கொண்டார்மேற்குறித்த இரு நாவல்களிலும் தமது குடும்பம் மற்றும் மனைவிமார்களைப் பற்றிய குறிப்புகள் தவிர மற்றவை அனைத்தும் பிரேம் ரமேஷ் உடைய எழுத்துக்களாகும்இதை எம்.டிமுத்துக் குமாரசாமிராஜன் குறைதீகண்ணான்ரஃபி (நாகூர் ருமி), கெளதம சித்தார்த்தன் போன்றவர்கள் அறிவார்கள்.  

பிரேம் ரமேஷ் (காலச்சுவடு 29, ஏப்ரல் ஜூன் 2000)

இடம்‘ பக்கம் : 198
சாரு நிவேதிதாவின் 14. 6. 1987 கடிதத்தின் பகுதி  

உங்கள் நாவல் அறிந்தவர்களைக் குறித்து அறியாதவர்களுக்கு  தயார்பணமிருந்தால் வெளியிடலாம்உங்கள் நாவல் ‘பழய வீடுவை ஜெராக்ஸ் காபி எடுத்து வைத்திருக்கிறேன்என் அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் இருப்பதால் எடுக்க முடிந்ததுஎன் லார்ஜ் செய்து பெரிய சைஸ் தாளில் எடுத்திருக்கிறேன்.

அன்புடன்

ரவி 

‘இடம்‘ பக்கம் : 182



சாரு நிவேதிதாவுக்கு ஆபீதீனின் முதல் கடிதம் 

துபாய் 10.15 20. 5. 1995

 

அஸ்ஸலாமு அலைக்கும் ரவி மரைக்கார்..!

ஆபீதீன்சென்ற மாதம் 13ம் தேதி என் சீதேவி வாப்பா மெளத்தானார்கள்இம்மாதம் மெளாத்தாக நீங்கள்என்ன ஆயிற்று உங்களுக்குஎதேச்சையாக சென்ற வார குமுதத்தை ஓசியில் பார்க்க நேர்ந்தபோது பரிசு பெறாத – ஆனால்பிரசுரிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட – சிறுகதைகளுள் சாரு நிவேதிதாவின் ‘கொடிக் கப்பலும்‘ ஒன்று என்று பார்த்து சற்றே முகம் சுளித்தேன்பத்து வருடங்களுக்கு முன்பு எழுதி உங்களுக்கு கொடுத்த எத்தனையோ குப்பைகளுள் அது ஒன்று என்று நினைவிற்கு வந்தாலும் அந்தத் தலைப்பு – நாகூராள் மட்டுமே உபயோகப்படுத்த முடிகிற அந்தத் தலைப்பு – என்னைக் கவர்ந்த ஒன்றுஊரின் சாபக்கேடான ‘சஃபர்ஐச் சொல்லஅவ்வப் போது அங்கங்கே கிறுக்கி வைத்தவற்றை ஒன்றாகக் கூட்டி வரும் ஒன்றிற்கு (என்ன அது?) பெயராக வைக்கலாம் பின்னால் ஏதாவது (என்ன அது?) பண்ண என்று ஒரு ஆசை இருந்ததுஎன்னைக் கேட்காமலேயே அந்தப் பெயரை நீங்கள் எடுத்துக் கொண்டதில் வந்த அந்த முகச் சுளிப்புநட்சத்திர எழுத்தாளரான உங்கள் ஆக்கத்தில் அந்தப் பெயர் இன்னும் ஆழமான எழுத்திற்கு வித்திட்டிருக்கக் கூடும் என்ற நினைப்பில் தணிந்ததுஅது அப்படியே இருந்திருக்கலாம்நேற்று ஒருவன் இந்தியா டுடேவைக் கொண்டு வந்து ஓசியில்  அவன் யாரிடம் ஓசி வாங்கினானோபடிக்கக் கொடுத்தான்சந்திரிகா மாமியை ரசித்துக் கொண்டே உள்ளே போனால்அங்கேயும் தலைவர் ரவி மரைக்கார்அடஅண்ணன் இப்ப ரொம்ப பிரபலம்தான் போலும் என்ற ‘சஃபர்ஐ வாசித்தால்.

அப்படியென்றால் கொடிக் கப்பலும் தலைப்பு மட்டுமல்லாமல் உள்ளே உள்ளதும் வார்த்தைக்கு வார்த்தை என் கிறுக்கலாசஃபரில் நீங்கள் அநேகமாக மாற்றியிருக்கிற ஒரு வார்த்தை ‘அம்மாவாகத்தான் இருக்கும் என்று ஒரு யூகம்வாப்பா இருக்கிற ஊர்ல ‘உம்மாதான் வருவாஹா நானாஅது போகட்டும்உங்கள் பெயரில் அதை வெளியிட என்ன காரணம் இருக்கக் கூடும்உங்களிடம் சொல்ல பிரச்னைகள் ஏதுமில்லையாஇல்லாவிட்டால் புதிதாக அதை நீங்களே உருவாக்கும் ரகம் என்பதால் ‘சரக்கு‘ பற்றி சந்தேகமில்லைஉங்களின் உதவியால் ‘யாத்ராவிலும்கணையாழியிலும் வெளியான கதைகுறுநாவல்களைப் பாராட்டிய நாலைந்து பேரைத் தவிரநல்ல எழுத்தை பார்க்காதவர்களாய் நான் நினைக்குமளவு என் எழுத்தின் மேல் எனக்கு மதிப்புஅந்த மதிப்போடுஎன் கடிதங்கள் உட்பட ‘பழய வீடு‘ நாவலையும் சேர்த்து புத்தகமாய் போடுவது பற்றி நீங்கள் என்னிடம் பேசும்போதுஎழுதும்போது, ‘போய் குப்பையில் கொட்டுங்கள்‘ என்று கடுப்படித்திருக்கிறேன்அதனால்தான் இப்படி கொட்டியிருக்கிறீர்களோஅல்லது மறந்து போய் நீங்கள் எழுதிய கதையை கொடுப்பதற்கு பதிலாக அதை நகலெடுத்து கொடுத்துவிட்டீர்களாஅப்படியானால் முன்பு வந்த சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் யார் மறந்து போய் உங்களிடம் கொடுத்து வைத்தவைபணக் கஷ்டமாஏற்கனவே வெளியான கதையை ஆதவன்ஆனந்த விகடனுக்குக் கொடுத்து வாங்கிக் கொண்டதை ‘நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு‘ என்று நக்கல் பண்ணிய நீங்கள் அதற்கும் செய்திருக்கமாட்டீர்கள்வெளிநாடு சுற்றிப் பார்க்க காசில்லாத ஒரு முறைஊஹூம்அடபுரிந்துவிட்டதுஎழுத்தின் வித வித வடிவங்களை வளர்ச்சியைப் பற்றி மூச்சு முட்ட என்னிடம் பேசி கவலைப்பட்ட நீங்கள்நான் இப்போது வெறும் விலும்லும் மட்டுமே நிற்பதில் கவலை கொண்டு அடுத்த நூற்றாண்டை ஆளப்போகும் எழுத்தின் நவீன வடிவத்தை இனம் காட்டியிருக்கிறீர்கள்வாழ்க அத்வைத எழுத்துரொம்ப நன்றி அண்ணேஉங்கள் நட்பு ஒரு பாக்கியம்தான்.

தமாஷ் இருக்கட்டும்துபாயின் ‘காக்காக்கள் பற்றி இப்போது ரொம்ப சுறுசுறுப்பாக ஒரு வருடமாய் எழுதி வரும் ஒரு குறுநாவலில் (சரியாக இதுவரை பனிரெண்டு பக்கம்மற்றம் என்று எது வந்தாலும் அது நல்லதல்லஇப்போது இருக்கிற அமைப்பே நல்லது என்று நினைக்கிற ஒரு காக்காவிற்கு உதாரணமாக அந்த ‘சுன்னத்‘ சிரிப்பைத்தான் எழுதியிருக்கிறேன்உங்களின் தேவையில்லாத இஸ்லாமிய வேடத்தில் வந்த கதையைப் படித்துவிட்டு என்னை திருடனாக்குவார்கள் படித்தவர்கள்ஏன்இந்தப் புதுக் குப்பையை படித்தால் நீங்களே சொல்லக் கூடும்தேவையா இதுமுதல் வேலையாக உங்களிடம் உள்ள என் எழுத்துக்கள் தாங்கிய பாவங்களைச் செய்த தாள்களைக் கொளுத்துங்கள்ஒரு நட்பை விட எந்த எழுத்தும் உயர்ந்ததல்ல.

என் மேல் தூய்மையான அன்பு காட்டிய ஒரு சிலரில் நீங்களும் ஒருவர்இப்படி ஒரு ‘சஃபர்‘ செய்ய நியாயமான காரணம் இருக்கக் கூடும் (நீங்கள் சுன்னத் செய்திருப்பதால் அல்லஎன்று இன்னும் நம்புகிறேன்இலக்கிய மயிரையெல்லாம் கத்தரித்துவிட்டு சுத்தமாக ஒரு பக்கத்திற்குள் உங்கள் பதிலை எழுதுங்கள். ‘ரெண்டு பேரும் ஒண்ணுதானே ஆபீதீன்‘ என்று குப்பியடிக்காமல்!

ரேஷ்மாவிற்கு முத்தங்களுடன்,

ஆபீதீன்.

குறிப்புகுமுதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதாய் விளம்பரம் செய்யப்பட்ட ‘கொடிக்கப்பல்‘ வராமல்அடுத்த வாரம் ‘தஸ்தகீர் நெய்தல் நிலக் குறிப்புகள்‘ வந்ததுஅதுவும் ஆபிதீனுடையது! ‘பழய வீடு‘ நாவலில் வரும் ஒரு பகுதி.

இடம்‘ பக்கம்: 188.

நன்றி சூனியம் இணையம்

தொடர்பான கட்டுரைகள்

0.  சாரு நிவேதிதா கமெரா, பணம் திருடிய கதை

1. இலக்கிய ரௌடி சாரு நிவேதிதா

2. ஜெயமோகன் செவ்விந்தியனுக்கு எழுதிய காதல் கடிதம்

3. ஜெயமோகன், அ.முத்துலிங்கம் ஆகியோரின் இலக்கிய ஊழல்கள்

4. சுந்தர ராமசாமி: மனிதாபிமான பாசிஸ்டின் ஜனநாயக குரல்

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

யாழ்ப்பாணம் தோற்ற கதை