விஜிதரன்: பொய்யாய் பழங்கதையாய்ப் போன கடைசி யாழ்ப்பாணப் பகல்கனவு

 




35 ஆண்டுகளுக்குமுதல் விஜிதரன் என்ற 21 வயது யாழ் பல்கலைக்கழக மாணவனை "கேணல்" கிட்டுவின் உத்தரவில் புலிகள்  இரவொன்றில் கடத்திச்சென்று அடித்தே கொன்றார். புலிகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இவரின் சடலம் இன்றுவரை மீட்கப்படவில்லை.  

இந்த 35 ஆண்டுகளும் யாழ்ப்பாணம் சனநாயக விழுமியங்களை மறந்த 35 ஆண்டுகளும் கூட. விஜிதரன் கடத்தப்பட்ட நவம்பர் 4  தமிழுக்கு கூதிர் காலம். ஈழத்தமிழ் சனநாயகத்தின் கூதிர் காலம் கூட. ஈழப்போராட்ட வரலாற்றில் கடைசியாக பல்கலைக்கழக மாணவர்களும் பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் இணைந்து நம்மிடமிருந்தே முகிழ்த்து வந்துகொண்டிருந்த புலிகளின் பாசிசத்தை எதிர்த்துப் போராடிய மகத்தான போராட்டம் அது. 



 முன்கதைச்சுருக்கம் 

 1985/6 முன்பனிக்காலம் (டிச 14 - பெப் 13) யாழ்ப்பாண வரலாற்றில் முக்கியமான காலம். ஸ்ரீலங்கா ராணுவம் நகருக்குள் வரமுடியாதவாறு ஈழப்போராளிகள் யாழ் நகரை காத்த முதல் முன்பனிக்காலம். அந்த சந்தோசம் அந்த இளவேனில் காலத்தில் புலிகள் சகபோராளிக்குழுவான ரெலோவை அழித்தபோது பாதிக்கனவில் மறைந்தது.   ராங்கில் ஈடுபட்டார்கள் என்ற எவ்வித ஆதாரமுமற்ற கூற்றின் அடிப்படையில் மலையக மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் விசாரணைகள் எதுவுமின்றி தமிழீழ விடுதலைப் புலிகளால் மிக மோசமாகத் தாக்கப்பட்டனர். (கிட்டுவின் 'உத்தியோகபூர்வ' காதலியும் யாழ் பல்கலைக்கழ மாணவியுமான சிந்தியா ராக்கிங் செய்யப்பட்டதையிட்டு கிட்டு கோபமுற்றிருந்தார் என்ற தகவலும் வெளிவந்திருந்தது. யாழ்மையவாத யாழ் மேலாதிக்க சித்தாந்தமுடைய புலிகள் 6 மாதங்களுக்கு முதல் ரெலோ இயக்கத்தை அழித்தபோதும் அவ்வியக்கத்திலிருந்த கிழக்கு மாகாண போராளிகளையே அதிகளவில் வெறிகொண்டு கொன்றிருந்தனர் என்ற தகவலும் இங்கு குறிப்பிடத்தக்கது)

 த்தாக்குதலுக்குள்ளான மலையக மற்றும் கிழக்கு மாகாண மாணவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத இவ்வாறான சூழலில் கல்வியைத் தொடர முடியாது என்று அஞ்சி, அவர்கள் தாங்கள் வேறு தென்னிலங்கை வளாகங்களுக்கு மாறிச் செல்வதே பாதுகாப்பானது என மற்றைய மாணவர்களோடு தங்களுக்கு நேர்ந்த கதி பற்றி தெரிவித்தனர். குறிப்பிட்ட மலையக மற்றும் கிழக்கிலங்கை மாணவர்களின் மேல் நடாத்தப்பட்ட இத்தாக்குதலின் விளைவாய் மலையக கிழக்கிலங்கை மாணவர்கள் இடம்மாறி செல்ல வேண்டியதில்லை. அவர்களது கல்வியை அவர்கள் எந்த அச்சமுமின்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலேயே தொடர வேண்டும். அது அவர்களது உரிமை. இந்த உரிமைக்காக போராடுவோம் என்று ஏனைய சக மாணவர்கள் அமைத்த குழுவுக்கு தலைமை தாங்கியவர் விஜிதரன். 



இந்த தாக்குதலுக்குள்ளான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் அதனை எதிர்த்து நிற்பதற்கு அப்போதிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் மன்றம் மறுத்தபடியால் அதற்கு வெளியே கூட்டப்பட்ட மாணவர் போராட்டக் குழுவுக்கு தலைமை தாங்கிய வர்த்தகபீட மாணவனான மட்டக்களப்பைச் சேர்ந்த அருணகிரிநாதன் விஜிதரன் எவருக்கும் தெரியாதவாறு கடத்திச் செல்லப்பட்டிருந்தார். 



 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரன் கடத்திச் செல்லப்பட்டமையை எதிர்த்துக் கிளம்பிய வெகுஜனப் போராட்டங்கள் எழுச்சி கொண்டு யாழ்ப்பாண குடாநாடெங்கும் பரவின. பொதுமக்கள் கண்டன ஊர்வலங்கள், மறியல் போராட்டங்கள் என தமது எதிர்ப்புக்களை காட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக அணிதிரண்டனர். பாடசாலை மாணவர்கள் மறியல் போராட்டம், ஊர்வலம், வகுப்புக்களைப் பகிஸ்கரித்தல் போன்ற போராட்ட வடிவங்களினூடு தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் போராட்ட முன்னெடுப்புக்கு மிகுந்த எழுச்சியோடு ஆதரவளித்தனர். பொதுமக்கள், மாணவர்கள், பொதுநிறுவனங்கள், சங்கங்கள் என திரண்ட ஆதரவினால் எழுச்சிபெற்ற இப்போராட்டங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் (LTTE) ஏனைய ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்ளினதும் படுகொலைகள், ஜனநாயக மறுப்புக்கள், கடத்தல், கொள்ளைச் சம்பவங்கள், இயக்க அழிப்புக்கள் போன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராகவே அமைந்திருந்தன. 



மக்களின் எழுச்சி கண்டு அச்சம் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஆத்திரம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் முன்னணியில் இருந்த மாணவர்கள் மரணதண்டனைக்குரியவர்கள் என்ற மிரட்டலை நோக்கி சென்றிருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட பகிரங்கக் கூட்டத்தில் மட்டக்களப்பிலிருந்து வந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரனுடைய பெற்றோர் அனைத்து மாணவர்கள் மத்தியிலும் தமது மகனை விடுவித்துத் தரும்படி மிகவும் தாழ்மையுடனும் மன்றாட்டமாகவும் வேண்டிக் கொண்டனர். யாழ்ப்பாண குடாநாடு முழுவதும் இராணுவப் பிரசன்னமே இல்லாது ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களின் முற்றுமுழுதான கட்டுப்பாட்டில் இருந்தவேளை அருணகிரிநாதன் விஜிதரன் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களில் ஏதோ ஒன்றினால்தான் கடத்தப்பட்டிருக்க முடியும். அருணகிரிநாதன் விஜிதரன், பகிடிவதையில் ஈடுபட்டார்கள் என்ற எவ்வித ஆதாரமுமற்ற கூற்றின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு குரல் கொடுக்கும் முகமாக உருவாக்கப்பட்ட மாணவர் குழுவிற்கு தலைமை தாங்கினார் என்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளே (LTTE) அருணகிரிநாதன் விஜிதரனை கடத்தியிருக்கலாம் என பலத்த சந்தேகம் நிலவியது. எனினும் அருணகிரிநாதன் விஜிதரனை விடுவித்துத் தரும்படி பொதுமக்களினதும் மாணவர்களினதும் கோரிக்கை எல்லா இயக்கங்களையும் நோக்கியே முன்வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட்டாலும் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் மீதான பொதுமக்களின் அதிருப்திகளையும் வெளிப்படுத்தியதோடு மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கானதாகவே இருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விசாரிக்கப்படுவதாகவிருப்பின் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியின் அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டும், அவர்கள் மேலுள்ள குற்றங்கள் என்னவென்பது அறிவிக்கப்பட வேண்டும் என்பது போன்ற மாணவர்களின் உரிமைகளையும் உள்ளடக்கியிருந்தது. இவைகளை மக்களுக்கும் மாணவர்களுக்கும் உறுதிப்படுத்துமாறு அனைத்து ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கும் விடுக்கப்பட்ட கோரிக்கையானது தழிழீழ விடுதலைப் புலிகளைப் (LTTE) பொறுத்தவரை சாவுமணியாகவே ஒலித்தது. இதனால் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரன் கடத்திச் செல்லப்பட்டமை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் முறுகல் நிலையைத் தோற்றுவித்துவிட்டிருந்தது. 



யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரனை விடுதலை செய்யக்கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரனை விடுதலை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது. பூநகரியைச் சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் விமலேஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தில் குகன்,செல்வநாயகம், அவ்வை, விஜயகுமாரி உட்பட ஜனநாயகத்துக்காகக் குரல்கொடுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் இணைந்து கொண்டிருந்தனர். 

விமலேஸ்வரன்: புலிகள் தருணம் பார்த்து இந்தியப்படைக்காலத்தில் இவரையும் கொன்றனர் 



யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஜனநாயகத்திற்கான மாணவர் போராட்டம் முல்லைத்தீவு உட்பட ஏனைய மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கியது. இலங்கை அரசின் ஜனநாயக மறுப்புக்கும் இனவொடுக்குமுறைக்குமெதிரான போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் எப்படி முன்னணிப்பாத்திரம் வகித்திருந்தனரோ அதேபோல் இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளினதும் (LTTE) அனைத்து ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களினதும் ஜனநாயக மறுப்புக்கும் எதிரான போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னணிப் பாத்திரம் வகிக்கலானார்கள்.

இன்றைக்கு புலிகள் அழிந்து 12 வருடமாகிறது. இன்றைய யாழ் பல்கலைக்கழகம் எப்படியிருக்கிறது? சனநாயகத்திற்கும் சமூகநீதிக்கும் சமாதானத்திற்கும் போராடிய எத்தனை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் புலிகளால் கொல்லப்பட்டார்கள் என்கிற வரலாறு இன்றைய யாழ் பல்கலைக்கழக மாணவனுக்கு தெரியாது. தெரிந்தாலும் அதனை மறந்து வாழ விரும்புபவனே அவன்/ள். புலிகளால் கொல்லப்பட்ட விஜிதரன், செல்வி, சிவரமணி, விமலேஸ்வரன், தில்லை முதலிய யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கோ விரிவுரையாளர் ராஜினி திராணகமவுக்கோ ஒரு நினைவுச்சின்னமோ யாழ் பல்கலைக்கழகத்திலில்லை. 

அன்றைய விஜிதரன் கடத்தலுக்கெதிரான மாணவர்களின்  போராட்டத்திற்கு முழு ஆதரவளித்த EPRLF இயக்கத்தின் சார்பில் துணிகரமாக இயங்கியவர் அதன் முன்னணி உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். பின்னாளில் IPKF காலத்தில் புலிகள் என்ற சந்தேகத்தில் பல அப்பாவி இளைஞர்களினதும் பல புலிகளினதும் சித்திரவதைக்கொலைகளுக்கு காரணமான இவர் புலிப்பாசிஸத்தின் அடிமையானது இன்றைய வரலாறு. (தற்கால யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இவரை கொண்டாடினாலும் யாழ் மக்கள் இவரை தேர்தலில்களில் நிராகரித்தது யாப் மக்களிடம் இப்போதும் கொஞ்சநஞ்ச சனநாயகம் இருப்பதற்கான சாட்சியம்)

இன்றைய யாழ் பல்கலைக்கழகம் ஒரு தமிழ்த்தேசிய வேஸை வீடு. தமிழ்ப்பாசிஸ வேஸை வீடு.  பாசிஸம் ஒரு கான்சர் என்று சும்மாவா சொன்னார்கள்? நிசம். 

விஜிதரனைக் கொன்ற கிட்டு கடலில் இறந்தபோது பின்னாளில் யாழ் பல்கலைக்கழ துணைவேந்தரான சடையன் சண்முகலிங்கன் கவிதை எழுதினான். பல்கலைக்கழக மொட்டைமாடியில் மாணவி ஒருவரை வல்லுறவுகொண்டு பிடிபட்டான். அதன்பிறகும் அவன் துணை வேந்தரானான். 

மாற்றுக்கருத்தாளர்களின் இணையங்களிலிருந்து சுட்டு எடுத்து மெய்ப்புபார்த்து எழுதிய  கட்டுரையே இது. சிறிய மாற்றங்கள் இருந்தாலும் சுட்ட எழுத்துக்களுக்கு நன்றிகள். மன்னிக்க

தொடர்பான கட்டுரைகள்

1. யாழ் பல்கலைக்கழகம் சீரழிவின் வரலாறு

2. புலிகளால் கொல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழ பெண் கவிஞைகள்

3. அன்ரன் பாலசிங்கத்தின் பாணபத்திர ஓணாண்டிகள்

Comments

Popular posts from this blog

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

 யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களின்   கல்வி அறிவு மோசடிகள்

அவந்திகா: ஓர் அவல மனைவியின் வாக்குமூலம்