பூட்டினின் Make or Break Date with Ukraine

 


By நட்சத்திரன் செவ்விந்தியன்

கிரெம்ளின் ஒரு யுத்தத்தில் தோற்றால் ஆட்சி கவிழுவது வரலாறு. இது புட்டினுக்கு நன்கு தெரியும். 

 1. ஓராம் உலக யுத்தத்தில் ரூசிய பேரரசு தோற்றபின்  சார் மன்னனின் சாம்ராஜ்யம் கவிண்டது

2. பத்தாண்டு ஆப்கானிஸ்தான் யுத்தத்தில்  சோவியத் ஒன்றியம் தோற்றபின் சோவியத் ஒன்றியம் சிதறியது. 

அமெரிக்கா இரண்டு இருபதாண்டு போர்களில்( வியட்னாம், ஆப்கானிஸ்தான்) தோற்றாலும் சிதறவில்லை. இந்தியா இரண்டாண்டு ஈழப்போரில் தோற்றாலும் சிதறவில்லை. உலகின் மிகப்பழமையானதும் மிகப்பெரியயதுமான முறையே அமெரிக்கா, இந்தியா ஆகிய மக்களாட்சி நாடுகளின் வலிமை அது. 

இந்த உண்மையை நன்கறிந்த புட்டின் உக்ரேனில் செய்யப்போவது 

1. உக்ரேனின் கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதிகளையும் தலைநகரையும் கைப்பற்றுவது. உக்ரேனில் ஒரு பொம்மை ஆட்சியை நிறுவுவது. அதன்பின் அதிகபட்சம் ஒரு வருடத்திற்கு ரூசிய படைகளை வைத்து தன் பொம்மை ஆட்சியை பலப்படுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறுவது. 

தற்காலத்தில் அமெரிக்காவுக்கு ஒன்றல்ல இரண்டு வல்லரசு எதிரிகள். 

1. சீனா

2. ரூசியா

அமெரிக்காவின் நண்பர் கூட்டான ஐரோப்பா/ நேட்டோ தம் பொருளாதார நலன்களுக்காக பிளவுபட்டிருக்கிறது. பொருளாதாரப் பணபலம் மிக்க நாடான ஜேர்மனி உக்ரேன் யுத்தத்தில் மதில்மேல் பூனையாக இருக்கிறது. 

இதனைவிட உக்ரேன் யுத்தத்தில் அமெரிக்கா நேரடியாக தன் படைகளை உக்ரேனுக்கு அனுப்பினால் தருணம் பார்த்திருக்கிற சீனா தாய்வானுக்கு தன் படைகளை அனுப்பி தாய்வானை கைப்பற்றும்( சீனாவின் ஆசியோடு நடக்கிற ருசியாவின் உக்ரேனிப் படையெடுப்பின் Plan B சீனாவின் தாய்வான் படையெடுப்புத்தான்)

ஆக அமெரிக்கா நேரடியாக இந்த உக்ரேன் போரில் இறங்காது. அமெரிக்காவின் ஒரேயொரு நம்பிக்கை உக்ரேனில் அமைக்கப்படப்போகிற ருசியாவின் பொம்மை ஆட்சியை உக்ரேனிய தேசியவாதிகள்  ஆப்கானிஸ்தானில் முஜாகிதீன்கள் சோவியத்தின் பொம்மை ஆட்சியை வீழ்த்தியமாதிரி வீழ்த்துவார்கள் என்பதுதான். 

அமெரிக்காவின் இந்த நம்பிக்கை/ கனவு நனவாவதற்கு நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. 

இன்றைய உக்ரேனிய தேசியவாதம் மிகப்பலமானது. பல நூற்றாண்டுகளாக சார் மன்னர்களின் ரூசிய சாம்ராஜ்யங்களின் கீழ் இருந்ததை இன்றைய உக்ரேனியர்கள் மறக்கவும் மன்னிக்கவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் உக்ரேனியர்களால் ஒரு போதும் மன்னிக்கமுடியாதது  69 வருடங்களாக சோவியத் ஒன்றியம் தம்மை அடிமைகளாக நடத்தியதை. குறிப்பாக 1931- 1933 காலப்பகுதியில் ஜோசப் ஸ்ராலின் டிசைன் பண்ணிய பஞ்சத்தால் 3.9 மில்லியன் உக்ரேனிய மக்கள் கொல்லப்பட்டதை. 



மேலதிக விபரங்களுக்கு

தொடர்பான கட்டுரைகள்

1. பிரபாகரன் வாழ்க்கை வரலாறு


Comments

Popular posts from this blog

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

 யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களின்   கல்வி அறிவு மோசடிகள்

அவந்திகா: ஓர் அவல மனைவியின் வாக்குமூலம்