பேராதனைப் பல்கலைக் கழகத்தில் ஒரு காமக்குற்றவாளி

செல்லத்துரை சுதர்சன் By நட்சத்திரன் செவ்விந்தியன் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளரான செல்லத்துரை சுதர்சன் மீது இரண்டு முதுகலைமாணிப் பட்ட மாணவிகள் மூன்று மாதங்களுக்கு முன்னர் தம்மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதையடுத்து ஒரு விசாரணையை பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. விசாரணைக் காலத்தில் குறித்த விரிவுரையாளரின் முதுகலைமாணிப் பட்டப்படிப்பு பொறுப்புக்களும் பறிக்கப்பட்டுள்ளது. அவர் முதுகலைமாணி மாணவர்களுக்கு விரைவுரை செய்வதும் இப்போது தடைசெய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக தமிழ் மாணவர் சமூகத்திடம் நன்கு அறியப்பட்ட இத்தகவலை எந்த ஈழப்பத்திரிகையும் இன்னமும் வெளியிடவில்லை. முதல்முறையாக Jaffnafashion.com இதனை அம்பலப்படுத்துகிறது. கடந்த ஐந்தாண்டுகளாக கலாநிதி சுதர்சன் செல்லத்துரை மீதான குற்றச்சாட்டுக்கள் நமது புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்தவண்ணமே இருந்தன. இதையடுத்து 2020ம் ஆண்டிலிருந்தே அவர் மீதான கோப்பு ஒன்று தயாரிக்கப்பட்டு பேணப்பட்டு வந்தது. முறையான ஆளணி வளங்கள் இல்லாத படியினால் நம்மால் இப்போதுதான் முழு...