பேராதனைப் பல்கலைக் கழகத்தில் ஒரு காமக்குற்றவாளி
செல்லத்துரை சுதர்சன்
பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளரான செல்லத்துரை சுதர்சன் மீது இரண்டு முதுகலைமாணிப் பட்ட மாணவிகள் மூன்று மாதங்களுக்கு முன்னர் தம்மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதையடுத்து ஒரு விசாரணையை பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. விசாரணைக் காலத்தில் குறித்த விரிவுரையாளரின் முதுகலைமாணிப் பட்டப்படிப்பு பொறுப்புக்களும் பறிக்கப்பட்டுள்ளது. அவர் முதுகலைமாணி மாணவர்களுக்கு விரைவுரை செய்வதும் இப்போது தடைசெய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக தமிழ் மாணவர் சமூகத்திடம் நன்கு அறியப்பட்ட இத்தகவலை எந்த ஈழப்பத்திரிகையும் இன்னமும் வெளியிடவில்லை. முதல்முறையாக Jaffnafashion.com இதனை அம்பலப்படுத்துகிறது.
கடந்த ஐந்தாண்டுகளாக கலாநிதி சுதர்சன் செல்லத்துரை மீதான குற்றச்சாட்டுக்கள் நமது புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்தவண்ணமே இருந்தன. இதையடுத்து 2020ம் ஆண்டிலிருந்தே அவர் மீதான கோப்பு ஒன்று தயாரிக்கப்பட்டு பேணப்பட்டு வந்தது. முறையான ஆளணி வளங்கள் இல்லாத படியினால் நம்மால் இப்போதுதான் முழுமையாக வெளிப்படுத்த முடிகிறது.
2015 காலப்பகுதியில் இக்கட்டுரையாளரிடம் முகநூல் வழியாக அறிமுகமான சுதர்சன் தன்னைப் பாதிக்கப்பட்டவராகக் காட்டி அனுதாபம் தேடினார். முதலாவதாக அவர் சொன்ன பச்சைப் பொய் தான் ஒரு யாழ்ப்பாணத் தலித் என்பதால் தனக்கு கிடைக்கவேண்டிய பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவி பிரசாந்தன் சிறிவரதராஜனுக்கு வழங்கப்பட்டதாம். இதையெதிர்த்து தான் நீதிமன்றில் வழக்குத் தொடுத்து வென்றாராம். இதையடுத்தே தனக்கு நீதிமன்ற தீர்ப்பை அடுத்து விரிவுரையாளர் பதவி கிடைத்ததாம். இது ஒரு பச்சைப் பொய். இதை 2020 வரை இக்கட்டுரையாசிரியரான நான் உண்மை என்று நம்பினேன். 2020ல் சுதர்சனின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் நான் விசாரித்தேன். அப்போது தெரியவந்த உண்மைகள் என்னைத் தூக்கிப்போட்டன.
உண்மையில் நடந்தது மறுதலையானது. நுஃமானும் துரை மனோகரனும் 2009 ல் சுதர்சனையே,நிரந்தர விரிவுரையாளராகத் தேர்ந்தெடுத்தனர். அதையெதிர்த்து வழக்குத் தொடர்ந்ததவரே பிரசாந்தன். 1975 ம் ஆண்டில் பிறந்தவர் பிரசாந்தன். 1979ல் பிறந்தவர் சுதர்சன். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பிரசாந்தன் ஒரு தற்காலிக விரிவுரையாளராக இருந்தபோது அவரிடம் மாணவராகப் பயின்றவர் சுதர்சன். பிரசாந்தன் கம்பன் கழக ஜெயராஜின் சீடன் என்பதால் அவருக்கு நவீன இலக்கியம் தெரியாது என்கிற பிழையான எடுகோளின் அடிப்படையில் அப்போது பேராதனைப் பல்கலைக் கழகத்தில் செல்வாக்காக இருந்த எம் ஏ நுஃமானின் செல்லப்பிள்ளையாக முடியவில்லை. சுதர்சனோ தான் ஒரு தலித் என்றும் நவீன இலக்கியம் தெரியும் என்றும் நுஃமானின் செல்லப்பிள்ளையானார். சாதி என்கிற துரும்புச் சீட்டைப் பயன்படுத்தி நுஃமானிடம் மட்டுமல்ல அர்ஜூனா பராக்கிரம முதலிய சிங்களப் பேராசிரியர்களிடமும் தன்னை ஒரு பாதிக்கப்பட்டவராகக் காட்டி அனுதாபம் தேடினார்.
விளைவாக 2009ல் நுஃமானும் துரை மனோகரனும் சுதர்சனையே பேராதனைப்பல்கலைக்கழக நிரந்தர விரிவுரையாளராகத் தெரிந்தனர்.
இதை எதிர்த்து நியாயமாக விரிவுரையாளர் பதவிக்குத் தகுதியான பிரசாந்தன் இலங்கை நீதிமன்றில் தொடுத்த வழக்கு ஆறு ஆண்டுகளாக இழுபட்டடது. இந்த ஆறாண்டுகளும் விரிவுரையாளராக இருந்தவர் சுதர்சனே. 2015ல் நீதிமன்றம் சுதர்சனுடைய நியமனம் தவறானது என்றும் பிரசாந்தனே நியமிக்கப்படத் தகுதியானவர் என்றும் தீர்ப்பளித்தது. இதையடுத்து நீதிமன்ற தீர்ப்புக்கமைய பிரசாந்தன் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். அதே சமயம் தங்களது செல்லப்பிள்ளையாக தாங்கள் Favouritism பாராட்டிய சுதர்சனைப் பாதுகாக்க விரிவுரையாளருக்கான இன்னொரு Cadre ஐ உருவாக்கி அவரையும் விரிவுரையாளராக்கினார்கள் அர்ஜூனா பராக்கிரமவும் நுஃமானும்.
Arjuna Parakkirama Culture war Hero
2016ம் ஆண்டளவில் சுதர்சன் என்னிடம் அனுதாபம் பெறச் சொன்ன இரண்டாவது பொய் தனது சகோதரிக்கு இன்னமும் திருமணம் ஆகாததால் தான் இன்னமும் திருமணஞ்செய்வில்லை என்பது. விசாரித்தபோது இவருக்கும் ஒரு புலம்பெயர்ந்த பெண்ணுக்கும் 2010 இலேயே திருமணமாகிவிட்டது. மணமாகிய சில நாட்களிலேயே இவரோடு வாழமுடியாது என்று அப்பெண் விவாகரத்து செய்துவிட்டார் என்ற உண்மை தெரியவந்தது.
இப்போதுதான் இரண்டு முதுகலைமாணிப் பட்ட மாணவிகள் துணிகரமாக இவர்மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு முறையீட்டை பகிரங்கமாகச் செய்திருந்தாலும் சுதர்சன் தொடர்ச்சியாகச் செய்துவந்த மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் பற்றிய செய்திகள் எமக்கு கிடைத்தவண்ணமே இருந்தன. இதில் கலைமாணிப் பட்டப்படிப்பு மாணவிகள் மீது செய்த குற்றங்களும் மற்றும் இவர் பாடசாலை மற்றும் தனியார் ஆசிரியராக இருந்தபோது மலையக மாணவிகள் மீது செய்த குற்றங்களும் உள்ளடக்கம். கலைமாணிப் பட்ட மாணவியொருவருக்கு இவர் கொடுத்த பாலியல் தொல்லை சில வருடங்களுக்கு முதல் மாணவர் மத்தியில் அறியப்பட்ட போதிலும் இவரது செல்வாக்கால் விசாரணை ஏதுமின்றி முடக்கப்பட்டது.
இவரது பாலியல் தொல்லை ஈழத்தில் மட்டுமன்றி கடல் கடந்து தமிழ்நாட்டிலும் நடந்தது. தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் சுதர்சன் தன் கலாநிதிப்பட்ட படிப்பை மேற்கொண்டிருந்த போது ஒரு பிராமண வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தார். அந்த வீட்டின் பிராமணத் தம்பதியருக்கு இவரைவிட பலவயது குறைவான மகள் ஒருவர் இருந்தார். அந்த மகளை தனக்கு திருமணஞ்செய்து தருமாறு இவர் அவளது தாய்க்கு தொல்லை கொடுத்திருக்கிறார். கடைசியில் தஞ்சாவூர்ப்பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் பஞ்சாயத்து செய்து இவரைக் காப்பாற்றுமளவுக்கு நிலமை இறுகியது.
சாதியை வைத்து சுதர்சன் செய்த மிகப்பெரிய அறிவு மோசடி 2020ல் மீள விவாதத்திற்கு வந்த முதல் தலித் யாழ் நகரபிதா செல்லன் கந்தையன் விவகாரத்தின் போதுதான்.
2003ம் ஆண்டில் நோர்வே மத்தியஸ்த சமாதான ஒப்பந்த காலத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்தவர் ஒரு தலித் ஆன தமிழ்ச்செல்வன். 1984ல் புலிகளில் ஒரு சாதாரண போராளியாக இணைந்து பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலராக இருந்து படிப்படியாகப் பதவி உயர்வுகள் பெற்று கடைசியில் அதியுச்ச அரசியல் பொறுப்பாளரானவர். அதே காலத்தில் யாழ் நகர பிதாவாக இருந்தவரும் ஒரு தலித்தான செல்லன் கந்தையன். தமிழரசுக் கட்சியின் விசுவாசமான தொண்டராக இணைந்து பல தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்று கடைசியில் வடமாகாண தமிழரசுக் கட்சியின் தலைவரான ஆனந்த சங்கரியின் விசுவாசியாகி யாழ் நகர நகரபிதா ஆனவர். ஈழத்திலேயே வரலாற்றில் மிகச் சாதி வெறிகொண்ட நகரமாகச் சித்தரிக்கப்படும் யாழ்ப்பாணத்தில் வேற்றுமையான அரசியல் அமைப்புக்களில் இருந்து வந்த இரண்டு தலித் தலைவர்கள் முக்கியமான பொறுப்புக்களில் சமகாலத்தில் அமர்ந்தது மகத்தாகக் கொண்டாடப்படவேண்டிய நிகழ்வு.
ஆனால் நியாயமான அரசியல் விவாதங்களை Culture War [அடையாள அரசியலின்(Identity Politics) இன் விளைவாக தளைக்கும் வன்முறை அரசியல் போராட்டம்] ஆக அணுகும் ஒரு கேடுகெட்ட குழுமம் இதனை அநியாயத்துக்கு கடத்தியது. இந்த Culture war க்கு தலமை தாங்கியவர் தமிழகத்தில் பெண்களை வேட்டையாட தன்னை ஒரு ஈழத் தலித் முன்னாள் புலிப்போராளியாக வேடம் போட்ட ஷோபாசக்தி எனகிற யாழ்பாண வெள்ளாளன். இவன்தான் புலிகள் யாழ் நூலகத்தை திறக்க தடைவிதித்தது ஒரு தலித் நகரபிதாவாக இருப்பதால்தான் என்கிற பச்சைப் பொய்யை முதலில் அடிச்சு விட்டவன்.
எழுத்தாளர் சயந்தன் இதன் உண்மைத் தன்மையை அறிய முன்னாள் யாழ் நகரபிதாவை இது சம்பந்தமாக பேட்டி காண முடிவெடுத்தார். ஆனால் ஆளணி வசதியின்மையால் தனது யழ்ப்பாணத் துணைவியான வைதேகி நரேந்திரனிடம் இப்பொறுப்பைக் கொடுத்தார். வைதேகி நகரபிதாவை 3 நிமிட வீடியோப் பேட்டி எடுத்தார். பெண் குரலை மறைக்க ஆண்குரலாக்கி அப்பேட்டி வெளிவந்தது. இது என்ன 3 நிமிடப் பேட்டி? யார் எடுத்த பேட்டி இது என்று சோபாசக்தி/நிர்மலா ராகவன்/ நித்தியானந்தன் கூட்டுக் களவாணிக்குழு இதனைச்சாடியது. தன் திருமணத்தைக் காக்க சயந்தன் அதற்குமேல் துணியவில்லை.
"புலிகளின் நூலகத்திறப்பு தடைக்கு. சாதி காரணமில்லை " - நகர பிதாவின் பேட்டி
இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாசகாரக் களவாணிக் குழு சுதர்சன் செல்லத்துரையை ஏவி விட்டது. சுதர்சன் நானும் உங்க ஆளுதான் என்று நகரபிதாவை அணுகினார். அவரை இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் பேட்டி கண்டு தான் கேட்க விரும்பியவற்றையும் விரும்பாதவற்றையும் அவரது குரலிலேயே பதிவு செய்தார். பின் மிகக் கவனமாக தனது சாதி அஜெண்டாவுக்கேற்ப வெட்டி ஒட்டி ஒரு மணித்தியால யூரியூப் வீடியோவாக அதனைத் தயாரித்து யூரியுப்பில் வெளியிட்டார்.
அந்த மோசடியான youtube காணொளியை சமூக வலைத்தளங்களில் புறமோட் பண்ணியது அதே பல்கலைக்கழக அக்கடமிக் ஆன சிவமோகன் சுமதி. இது மோசடியான வீடியோ என்று முற்போக்காக அப்போது முகநூலில் குறிப்பிட்ட விதை குழுமத்தின் (விதை குழுமமும் பின்னாளில் ஒரு மோசடியான அமைப்பாகச் சிதைந்தது வேறு வரலாறு) பதிவிலும் சென்று யார் நீங்கள் என்று பதிவிட்டு மிரட்டியவர் பேராசிரியர் சிவமோகன் சுமதி. தனது கருத்துக்கு முரண்படுகிற தன் மாணவர்களையே முகநூல் பின்னூட்டங்களில் மிரட்டி Bullying செய்பவர் டாக்டர் சுமதி.
சுமதி : Culture war Heroine
Permanent Bully. Part time Academic
2003ல் திறக்கப்படவிருந்த புனரமைக்கப்பட்ட யாழ் பொதுநூலகம் திறக்கப்படுவதை புலிகள் எதிர்த்ததற்கு அரசியல் காரணங்களே உண்டன்றி சாதியக் காரணங்களில்லை. புலிகளால் துப்பாக்கி முனையில் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஆரம்பத்தில் ஆனந்தசங்கரி ஏற்றுக்கொண்டார். பிற்பாடு புலிகளின் ஏகபோகத்தை ஏற்காது முரண்பட்டார். அக்காலத்தில் ஆனந்த சங்கரியின் செல்வாக்குட்பட்டே யாழ் மாநகரசபை இயங்கியது. அதற்காகவே புலிகள் நூலகத்திறப்பை எதிர்த்தார்கள். இந்த விவகாரங்களை விடுதலைப்புலிகளின் சார்பாகக் கையாண்டவர் விடுதலைப்புலிகளின் தலைவரின் மிக நன்மதிப்பைப் பெற்ற தலித்தான தமிழ்செல்வன். ஒரு சக தலித்தான தமிழ்செல்வனை வைத்தே இன்னொரு தலித் மேயர் என்கிற காரணத்துக்காக தலைவர் பிரபாகரன் இதனைத் தடுத்தாராம். எத்தனை அபத்தமான ஆர்கியூமென்ற் – நியாயம் இது?
2018ல் ஒரு பேராதனைப்பல்கலைக்கழக முதுகலைமாணி பல்மருத்துவத்துறை சிங்கள மாணவி விரிவுரையாளரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டார். அவர் பல்கலைக்கழகத்தில் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை. பிறகு உயர் நீதிமன்றில் முறையிட்டார். அதைப்பற்றி இந்த Academic Bully சுமதி Kuppi Collective என்கிற இயக்கம் சார்பாக The Island கட்டுரையில் எழுதியுள்ளார்.
இப்போது இந்த சுமதி சிலமோகன் Tribe புல்லுப் போட்டு வளர்த்த கடாவான சுதர்சன் இவர்கள் மார்பிலேயே பாய்ந்து.ள்ளது. இனி என்ன சொலவார்கள் பார்ப்போம்.
நுஃமான் : Culture War Hero
எல்லாவற்றையும் விடுவோம். இப்போது, சுதர்சனை முன்னிலைப்படுத்தி, தம் செல்லப்பிள்ளையாக்கி, அவரை ஒரு விரிவுரையாளராக்கிய சுதர்சனின் இக்குற்றங்களில் ஒரு பங்கேனும், பொறுப்பேனும் எடுக்க எம்.ஏ. நுஃமானும் துரை மனோகரனும் அர்ஜூனா பராக்கிரமவும் தயாரா?
இப்போது இரண்டு தமிழ் முதுகலை மாணவிகள் துணிகரமாக கலாநிதி செல்லத்துரை சுதர்சன் மீது செய்த முறைப்பாட்டை பல்கலைக்கழகம் நீதி நியாயமாக விசாரிக்கும் என்று நம்புகிறோம். அவ்வாறின்றி இதனையும் மேற்குறித்த பல்மருத்துவத்துறை சிங்கள மாணவி செய்த முறைப்பாட்டுக்கு நடந்தது போல பல்கலைக்கழகம் சடைந்து சமாளிக்குமாயின் விளைவுகள் பாரதூரமான இருக்கும். எமக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்கள் அந்த இரண்டு தமிழ் மாணவிகளும் பல்கலைக்கழகத்தில் தமக்கு நீதி கிடைக்கா விட்டால் இலங்கை உயர் நீதி மன்ற வரை போகத் தயாராகவே இருக்கிறார்கள்.
இன்றைய ஈழத்தின் பிரதமர் ஒரு பெண் மட்டுமல்ல, ஒரு அக்கடமிக்கும் என்பது மட்டுமல்ல இங்கு முக்கியம். உலகத்தில் முதல் முறையாக முறையான நீதியான சனநாயக அரசியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் மிக்க அரசியல் தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்கா என்பதும் இங்கும் முக்கியமல்ல. இங்கு முக்கியம் ஈழத்தின் இன்றைய பெண் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு ஈழப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர் பேராசிரியர்களால் பெண், ஆண் மாணவர்கள் மீது இழைக்கப்படும் பாலியல் வன்முறை நன்கு தெரியும். அது மட்டுமல்ல பாதிக்கப்பட்ட மாணவிகள் மாணவர்களை அவர் நேரடியாகச் சந்திக்கவும் தயாராக இருக்கிறார் என்பதுதான்.
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவிகள் மீது காமக் குற்றங்கள் நடப்பது இப்போது முதல் முறையாக அல்ல. 2022 ல் த. தர்சினி என்கிற என் ஊரைச்சேர்ந்த பொருளாதாரத்துறை சிறப்பு மாணவி தற்கொலை செய்து இறந்தார். அவா ஒரு கவிஞரும் கூட. 'அது ஒரு நிலாக்காலம்' என்கிற ஒரு நல்ல கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருந்தார். தர்சினி, பேராசிரியர் சிவத்தம்பியின் அயலவர் மட்டுமல்ல பேராசிரியரின் உறவினர் ஆகக் கூட இருக்கலாம். பேராசிரியர் படித்த அதே பாடசாலையான விக்னேஸ்வராக் கல்லூரியிலும் அதே பல்கலைக்கழகமான பேராதனையிலும் படித்துச் சிறந்தவர். பேராசிரியர் உயிரோடிரிந்திருந்தால் தர்சினியும் இன்று உயிரோடு இருந்திருப்பாள். அவள் தற்கொலை செய்ததற்கு பல்கலைக் கழக விரிவுரையாளர் மற்றும் மார்சல் ஆசாமிகளே காரணம் என்பது எனக்கு நன்கு தெரியவந்தது. அதைப்பற்றி விசாரித்து எழுதுவது பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தை இன்னமும் வதைக்கும் என்பதால் அதை எழுத எனக்கு துணிவு வரவில்லை.
ஒரு தடவை எழுதத்தொடங்கினேன். ஒரு பந்தி எழுதியிருப்பேன். பாதிக்கப்பட்ட பெண்கள் மீதான விசாரணை/புலனாய்வுக் கட்டுரைகள் எப்படி இருக்கும் என்பது உங்களுக்கு நன்கு தெரியும். இதை ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கிற தர்சினியின் குடும்பம் படித்தால் எப்படி வதைபடும் என்று உணருகிற தருணங்களில் என் கை நடுங்கச் தொடங்கியது. அதை அப்படியே நிறுத்திவிட்டேன்.
தொடர்பான கட்டுரைகள்
1. யாழ் பல்கலைக்கழக காமக் குற்றவாளி இளங்குமரன்
2. மலையகச் சிறுமியை 40 தடவை றேப் பண்ணிய யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்
3. யாழ் பல்கலைக்கழகம்: சீரழிவின் வரலாறு
Comments
Post a Comment