Posts

Showing posts from January, 2026

முகாமுகம் சிறுகதைத் தொகுப்பு முன்னுரை

Image
இத்தொகுப்பிலுள்ள ஆறு சிறுகதைகளும் ஈழப்போருக்குப் பின்னைய காலத்தில் எழுதப்பட்டாலும் ஈழப்போரைப்பற்றிய கதைகள். உண்மைக்கதைகளை மையமாகக் கொண்ட சிறுகதைகள். ஒவ்வொரு கதையிலும் குறைந்தது ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் பாத்திரமாக வருகிறார். புலிகளின் தலைவர் பிரபாகரன், பிரதித்தலைவரான புலனாய்வுத் தளபதி பொட்டம்மான், புலிகளின் சிறந்த இராணுவத் தளபதியாக அறியப்பட்ட கருணா அம்மான், புலிகளில் முதல் கேணல் பட்டம்பெற்ற கிட்டு, புலிகளில் முதல் பிரிகேடியர் பட்டம் பெற்ற தமிழ்ச்செல்வன் ஆகியோர் பாத்திரங்களாக வருகிறார்கள். இது எப்படி நடந்திருக்க முடியும்? ஈழப்போரின் தலைமுறையைச் சேர்ந்தவன் நான். போர் என் தலைமுறையின் இளமையைக் காவு கொண்டது. விளையாட்டு வியூகங்களை விட போர் வியூகங்களையே எம் பள்ளிக்காலத்தில் கேட்டு வளர்ந்தோம். எங்களுக்கு துடுப்பு மட்டையையை விட கால்பந்தாட்ட பந்தை விட ஆடுகள மைதானங்களை விட ஏ.கே 47 துப்பாக்கி, கிரனேட், போர்க்களங்கள் பற்றியே அதிகம் தெரியும். விளையாட்டு வீரர்களை விட ஈழப்போராளிகளைப் பற்றியே அதிகம் தெரியும். ஈழ யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் நான் படித்துக்கொண்டிருந்த புத்தகம் நெப்போலியன் காலத்து...