சிட்னியின் சிறந்த Sri Lankan சாப்பாட்டுக்கடை


(By நட்சத்திரன் செவ்விந்தியன்)
சிட்னியின் மிகச்சிறந்த Sri Lankan சாப்பாட்டுக்கடை எது? சந்தேகமில்லை. பிளமிங்ரனிலுள்ள Rams Take Away தான்.

 ராசவள்ளிக்கிழங்கு களி, வாட்டிலப்பம் சொல்லிவேலையில்லை. சிட்னியில் உழுந்து போட்டு உழுந்துவடை செய்யும் ஒரே கடை. றோல்ஸ், பற்றிஸ், சூசியம், கடலை வடை, மீன் ரொட்டி, மரக்கறி ரொட்டி முதலியவை இன்று யாழ்ப்பாணத்திலும் இவ்வளவு சிறப்பாக கிடைக்க வாய்ப்பில்லை.

 மண்ணெண்ணை மகேஸ்வரன் போல இக்கடையை தொடங்கியவருக்கு இடியப்ப சிவா என்கிற பெயர் கிடைத்தது. வல்லிபுரம் சிவா என்கிற ஓரு யாழ் பல்கலைக்கழக வணிகவியல் பட்டதாரியின் தளராத commitment. இக்கடையின் Signature dish யாழ்ப்பாண தோசையும் இடிச்ச சம்பலும் மற்ற தோசை வகைகளும்தான்.

இந்த தோசையின் Flavour, Aroma and Texture அராபிய குடாநாடுவரை எட்டியது. ஒருதடவை ஐக்கிய அரபு முடியரசு இளவரசர் ஒருவர் சிட்னி குதிரைப்பந்தயத்துக்கு வந்தபின் இரவு தோசை சாப்பிட ஆசை என்று தன் சிப்பந்திகளிடம் சொன்னார். தனது இராச்சியத்தில் கேரள தோசையப்பம், பாலப்பம் புசித்த அவர் கோபம் பொல்லாதது. சுவை பிழைத்தால் தன் உறைவாளை உருவியெடுக்க தயங்கமாட்டாதவர். சிப்பந்திகள் தீரவிசாரித்து கடைசியில் Peter Kuruvita என்ற சிங்கள Chef இடம் ஆலோசனை கேட்டார்கள். அவர் சரவணபவன், Dosa Hut முதலிய எல்லா இந்திய Restaurant களையும் காறித்துப்பியபின் Rams ஐ சிபாரிசு செய்தார். அவ்விரவு Rams ன் தோசைகளை Micro wave ல் சூடுகாட்டி பரிமாற இளவரசன் அனுபவித்துண்டான். பின்னொருதடவை Oil Tycoon ஆன அவ்விளவரசர் Peter Kurivitaவை சந்தித்தபோது யாரந்த chef என்று விசாரிக்க குருவிற்றா " அதுவோரு சிறிலங்கன் String Hopper Tycoon a certain இடியப்ப சிவா என்று பதிலளித்தாராம்.

சிட்னியில் தரமான இடியப்பங்களை விற்று பணக்காரனானவர் இடியப்ப சிவா. தோசையைப்போலவே ராம்ஸின் இட்லியும் அப்பமும் சிறப்பானது.

 இருந்து சாப்பிட இடமில்லை. ரேக் எவே தான். 1999 ம் ஆண்டு சிவா அண்ணை இதனை தொடங்கும்போது பிளமிங்ரனிலிருந்து நடைதூரத்திலிருந்த சிற்றூர் Homebush தான் சிறி லங்கா தமிழரின் சேரியாக இருந்தது. அப்போது நீணட நெடிய வரிசை உணவு வாங்க காத்திருக்கும். 21 ஆண்டுகளின் பின் இப்போது ரூங்காபி, பெண்டில் கில் என்கிற ஊர்கள் தமிழர் "சேரி" யானபின் இப்போது காத்திருக்கும் வரிசை சிறியது. ஆனால் அது சர்வதேச வரிசையாகிவிட்டது. நல்ல தமிழ் உணவுகளைச்சுவைத்த சிங்கபூரிய மலேசிய இந்தோனேசியர்களும் இப்போது கியூவில் நிற்கிறார்கள்.

 புழுங்கல் அருசியா பச்ச அருசியா என்ற தெரிவு இங்குண்டு. ரசமும் பப்படத்தோடும் வரும் சைவச்சாப்பாடு சிறப்பானது. வெந்தயக்குழம்பை நான் அறிந்தது இங்குதான். அசல் யாழ்ப்பாணக்கண்டுபிடிப்பு. 21 ஆண்டிலும் சோறு கறி தரம் மாறாமல் அதே சிறப்போடிருக்கிறது. யாழ்ப்பாண வட்ட தேங்கா ரொட்டி தரமானது.

 கொத்துரொட்டி பெட்டியில் போட்டு அடைக்காமல் சுடச்சடவே சாப்பிடவேண்டும். இக்கடை கொத்துரொட்டிகள் எப்போதும் தரமாகவே இருக்கும். எல்லா உணவும் 10 டாலர்களுக்குட்பட்டவைதான். இந்த 21 ஆண்டுகளில் சில உணவுகளின் தரம் குறைந்திருக்கிறது. 10 ஆண்டுக்குமுன் அசல் கோதுமையில் செய்த புட்டு சுவையாக இருந்தது. இப்போ அசல் கோதுமை இல்லை. வெள்ளருசி/சிவப்பரிசி/ ஆட்டாப்புட்டுக்கள். ஒப்பீட்டு அடிப்படையில் இப்புட்டுக்கள் தரமானவை. புட்டுக்கு கிடைக்கும் சம்பல் மிகச்சிறப்பானது. இப்போது வட இந்தியர்கள் வசிக்கிற பிளமிங்ரனில் வட இந்திய பாணியில் பிரியாணி மட்டரகமாகியிருக்கிறது. லாம்பிறைஸ் பரவாயில்லை. லாம்றைசும் பிரியாணியும் சனி ஞாயிறு தினங்களிலேயே கிடைக்கும்.

ஆடர் எடுக்கிற பெண்களும் வட இந்தியர்களாகிவிட்டனர். முன் ஒரு சிங்கள தேவதை வேலைசெய்தாள். மிகப் பணிவுடனும் பொறுமையுடனும் அவள் customer service செய்தாள். மிச்சக்காசை அசல் சிறீலங்கன் பாணியில் கையை மடித்து அவள் கொடுக்கும் பாணி அலாதியானது. இப்போதும் கஸ்ரமர் சேவிஸ் Rams இல் பெண்டில் ஹில், ரூங்காபி தமிழ் உணவகங்கள் போல மோசமானதில்லை. அந்த சிங்கள தேவதை போனபின் சர்வீஸ் தரம் தாழ்ந்ததை மொதலாளி (இடியப்ப) சிவா அண்ணையே ஒத்துக்கொள்கிறார். பருவம் முந்தி அவளின் கேசத்தில் தோன்றிய ஒரேயொரு ஒற்றை வெள்ளை மயிரையும் மறந்து நம்மட தமூள் பெடியள் அவளை காதலித்ததை மொதலாளியும் அறிந்தேயிருக்கிறார்.

 ராம்ஸ் பிராண்ட் எள்ளு பாகில் சீனி அதிகம்.தொதல் சிறப்பானது. ராம்ஸ் மிக்சர் குகன் மிக்சர்போல பிரபல்யமடையவில்லை. அவ்வப்போது சிவா அண்ணை புளி சாதம், தயிர் சாதம், இறால் புட்டு போன்ற வித்தியாசமான சாப்பாடுகளையும் செய்கிறார்.

 என்ன இருந்தாலும் ரூங்காபி சக்தி, ராஜ் பவன், பெண்டில் ஹில் மறீனா முதலிய கடைகளை விட ராம்ல் restaurant சிறப்பானது. ஒரேயொரு குறை இருந்து சாப்பிட இடமில்லாததுதான். சிவா அண்ணையிடம் பல தடவை நான் இதையொரு இருந்து சாப்பிடும் கடையாக்குங்கள். இன்னொரு கிளை ருங்காபியில் திறவுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். அவருடைய பதில் பின்வருமாறு இருக்கும். " எங்கட சமையல் கடையிலேயே செய்யப்படுவது. Quality/ Taste சோதனை நான் எப்போதும் செய்வேன். நான் இல்லாத இடத்தில் என்னால் தரத்தை உறுதிப்படுத்த முடியாது."

 15 ஆண்டுகளுக்குமுதல் Flavour of Ceylon என்றொருதரமான சிங்கள restaurant பரமட்டாவில் இயங்கிவந்தது. இப்போது அதை மூடிவிட்டு இப்போது பெண்டில் கில்லில் ஒரு ரேக் எவே கடையாக நடத்துகிறார். தரம் சிறிது குறைந்திருக்கிறது. மொதலாளி ஒரு தடவை என்னிடம் சொன்னார். தான் பரமட்டாவில் அதிகம் வாடகை செலுத்தி உழைத்த வருமானத்தைவிட இப்போ Take away ல் உழைக்கிறேன் என்றார். Flavour of Ceylon இன் நீண்டகால மனேச்சர் a certain "பாண் முரளி" என்கிற ஒரு தமிழன்தான். சிங்கள முதலாளி எப்போதும் தன் கடையின் வெற்றிக்கு பாண் முரளிதான் காரணமென்பதை குறிப்பிடத் தவறுவதில்லை.

 லாபம் என்கிற இந்த வணிக சூத்திரம்தான் இந்திய ஈழ restaurant களை பாழாக்குகிறது. நான் ராம்ஸ் சிவா அண்ணையிடம் சொன்னேன். அண்ணை இதை ஒரு முறையான இருந்து சாப்பிடும் Restaurant ஆக்குங்கள். உணவு பல படங்கு இன்னும் தரமாக்கி விலையையும் அதிகரிக்கலாம். நீங்கள் தமிழர்களுக்கு மட்டும் கடை நடத்தவேண்டியதில்லை. தரமான உணவைத்தேடி ஆஸ்திரேலியர்கள் படையெடுப்பார்கள். இடியப்ப சிவா கேட்க தயாரில்லை. தரமான றெஸ்ரோறன்ற் ஒரு தவம். Passion. ஒரு கலை. தமிழில் இதனை சமையற்கலை என்று சொல்வது இதனால்தான். சிட்னியில் தரமான மலிவான உணழவைத்தந்து எங்களை சந்தோசப்படுத்தும் சிவா அண்ணைக்கு அடுத்த கட்டத்துக்கு பறக்க நேரமில்லை. ஆர்வமும் இல்லை.

 Ram’s Indian and Sri Lankan Food Shop 17C, 16–20 Henley Road, Homebush West (02) 9763 1456 Hours: Tue to Sun 11am–8.30pm

Comments

  1. I only buy SriLankan/Indian food from Rams at Flemington since 2005. I used to buy from other SriLankan/Indian shops. But I only found high quality and cleanliness in Rams at Flemington.
    This is the reason I switched to Rams food for last 15 years.


    தரமான உணவு ராம்ஸ் உணவகத்தில் மட்டுமே சிட்னியில் கிடைக்கிறது.

    உதாரணத்துக்கு, இடியப்பத்தில் பழைய சமைத்த எண்ணையை கலந்து இடியப்பம் பிழிய லேசாக இருக்கவும் காயாமல் இருக்கவும் பல இடங்களில் விற்கிறார்கள்.
    அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
    ஆனால் ராம்ஸ் உணவகத்தில் மட்டுமே சுத்தமாக இடியப்பம் அவித்து விற்கிறார்கள்.

    இது ஒரு உதாரணம் மட்டுமே.

    எல்லா உணவுகளும் கலப்படம் இல்லாமல் ராம்ஸ் உணவகத்தில் கிடைக்கிறது.

    இதுவே நான் இந்த உணவகத்தில் எப்போதும் உணவு வாங்க காரணம்.

    நன்றி சிவா அண்ணா.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

யாழ்ப்பாணம் தோற்ற கதை