கிந்துசிட்டி மயானமும் செந்தில்வேலும் : வெளிவராத உண்மைகள்By சிவன் சிறுபிட்டி
(இக்கட்டுரையாசிரியரும் செந்தில் வேலின் சாதியைச்சேர்ந்த ஒருவரே)

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”
 சாதியப் பிரச்சனை என்று பொய் பூச்சாண்டி காட்டி எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு வாக்கு வேட்டையாட முற்பட்டு நிற்கும் செந்தில்வேல் ஐயா!! சிறுப்பிட்டி கிந்துசிட்டி


மயானப்பிரச்சனை சுமார் 3 வருடங்களாக தீராப்பிணக்காக தொடர்ந்து இரு பகுதியினரும் நீதவான் நீதிமன்று மற்றும் மேல் நீதிமன்றம் வரை சென்று இரு மன்றுகளிலும் அனைத்து தரப்புக்களின் நியாயபூர்வமான சான்றுகளின் பின் இந்த மயானத்தில் எரியூட்டலாம் என நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியிருந்தது.இந்த தீர்ப்பினை கலைமதி வாழ் கிராம மக்களுக்கு பிழையாக விளங்கவைத்து செந்தில் ஐயாவும் அவர் சார்ந்த கட்சியின் குழுவினரும் வான வேடிக்கைகள் செய்து வெற்றி தங்களுக்கே என்று பொய்கூறி மக்களை ஏமாற்றி விழா எடுத்தனர்.குடும்பத்திற்கு தலா ஆயிரம் ரூபாய் வரை நிதியை வசூல் செய்து பின்னர் நீதிமன்றுகளின் தீர்ப்பின் பிரகாரம் மயானத்தைச்சுற்றி மதிலை அமைத்து எரியூட்டும்படி தெரிவித்து இதனையே சிறுப்பிட்டி ஜனசக்தி மக்களும் கிந்துசிட்டி மயானத்தில் உருத்துடைய 4 சமூகத்தை சேர்ந்த அயல்கிராம மக்களும் எரிக்க முற்பட்டனர் . உங்கள் வட பகுதி செயலாளர்(காணி வியாபாரி) உட்பட குழு இதனை தடுக்க முற்பட்டபோதே நீதிமன்றத் தலையீடும் பொலிஸ் தலையீடும் ஏற்பட்டது. அப்பாவி மக்களையும் பொலிசாரையும் முரண்பட வைத்தார் செந்தில்வேல் ஐயா.

 மேலும் இந்த விடயம் தொடர்பாக முகநூல் நண்பர்களும் பத்தி எழுத்தாளர்களும் உண்மையை புரிந்துகொள்ள விரும்புவபர்களும் இதில் உள்ள உண்மைத்தன்மையை புரிந்துகொள்ள வேண்டும். இந்த சுடலைப் பிரச்சனையில் சாதி பிரச்சனை என்ற ஒன்று இல்லை.செந்தில் ஐயா தனது அரசியல் இலாபத்துக்காகவே சாதி பிரச்சனை என்று பூச்சாண்டி காட்டி கட்சிக்கு அனுதாபம் தேட முற்படுகிறார்.


 மேலும் இந்த மயானத்தை 4 சமூகத்தை சேர்ந்த 3 பகுதியினர் பயன்படுத்தி வருகின்றனர்.அதிலும் தற்போது எரியூட்டுவதற்கு பிரச்சனைப்பட்டு நிற்கும் கலைமதி கிராமத்தை சேர்ந்தவர்களும் ஜனசக்தி கிராமத்தைச் சேர்ந்தவர்களும் ஒரே சமூகத்தைச்சேர்ந்த உறவினர்களே ஆகும். செந்தில் ஐயா சாதிவெறியர்கள், ஆதிக்க சாதியினர் என்றும் யாரோ பின்னணியில் தூண்டிவிடுவதாகவும் கதை விட்டு அனைவரையும் ஏமாற்றுகிறார். இந்த ஒரே ஒரு உண்மையை அனைவரும் புரிந்துகொண்டு ஏனய விடையங்களைப் பார்க்கவேண்டும்

 சுமார் 30 வருடங்களுக்கு முன்பு அதாவது செந்தில் ஐயாவும் அவரது கட்சியினரும் இந்த கிராமத்திற்கு வருவதற்கு முன்பு கலைமதி கிராமமும் ஜனசக்தி கிராமமும் மிகவும் அன்னியோன்னியமாக உறவுக்காறர்களாக திருமண பந்தங்களுடனும் வாழ்ந்து வந்தனர். செந்தில் ஐயா வந்ததன் பின்னரே இங்கு பிரச்சனை ஆரம்பித்து இக்கிராமங்கள் மோதலில் ஈடுபட ஆரம்பித்தனர். ஜனசக்தி கிராமத்துடன் மட்டும் முரன்பாடுகள் நிற்கவில்லை சுற்றியுள்ள கிராமங்களையும் கலைமதி கிராமத்தினர் முரன்பட ஆரம்பித்தனர்.இது தொடர்ந்த வண்ணமே இருந்தது. பேசித்தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் எல்லாம் அடித்து உதைத்தே முரண்பட்டனர் இந்த உண்மையை அயல் கிராமங்களை கேட்டுத்தெரிந்துகொள்ளலாம் இப்படி ஆரம்பிக்கப்பட்டதே இந்த மயான பிரச்சனை நீதிமன்றம் கட்டளையின்படி கட்டிட வேலை பார்க்க செல்பவர்களை தாக்குவது உணவு கொண்டு செல்பவர்களை தாக்குவது,விறகு கொண்டுசெல்பவர்களை தாக்குவது மதில் வேலை செய்பவர்களை தாக்கி கை கால்களை முறிப்பது இந்த விடையங்களை முன்னைய பதிவுகளில் இடப்பட்டிருந்து.இதன் பின்னரே ஜனசக்தி மக்கள் நீதிமன்றத்தையும் பொலிசாரையும் நாடினர்.


 மேலும் இந்த மயானத்தில் நீண்டகாலமாக எரியூட்டப்படவில்லை என்ற அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடுகின்றனர். அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.செந்தில் ஐயாவின் தாய்,தந்தை இருவரையும் இந்த மயானத்திலெயே தகனம் செய்தனர். அவருக்கு இப்போது அந்த மயானம் தேவையில்லை ஏனெனில் அவர் இப்போது colombo grandpass இல் வீடுகட்டி வசதியாக வாழ்கின்றார். அவர் தனது குடும்பத்தாரை கொழும்பு கனத்தை மயானத்தில் தகனம் செய்வார். அவரது உறவினர்கள் மற்றும் அவரது சமுகத்தினருக்கே இம் மயானம் தேவை அவர்களும் கிந்துசிட்டி மயான அபிவிருத்திக்கும் மதில் அமைப்பதற்கும் பல லட்சங்களுக்கு மேல் தந்து உதவி புரிந்தனர். இவ்விபரம் மயான அபிவிருத்தி கணக்கறிக்கையில் உண்டு. (இந்த வரிசையில் செந்தில் ஐயாவின் சகோதரியும் உள்ளடக்கம் ) மேலும் செந்தில் ஐயா ஜனசக்தி கிராம மக்களின் பின்னால் யாரோ தூண்டிவிடுகிறார்கள் என்று தன் பதிவில் அப்பட்டமான பொய்யை எழுதியுள்ளார். 

இங்கு ஒரு விடையத்தை புரிந்துகொள்ள வேண்டும் சிறுப்பிட்டி ஜனசக்தி கிராமத்துக்கென்று ஒரு வரலாறு உண்டு இது பல அரசியல் போரளிகளை தாங்கி நின்ற மண் பல அரசியல் செயற்பாடுகளுக்கு சாட்சியம நிற்கும் பூமி. இது தற்போது பல அரசியல் தளங்களில் உள்ளவர்களுக்கும் புலம்பெரர் நாடுகளில் உள்ளவர்களுக்கும் இது புரியும் ஜனசக்தி கிராம மக்களை யாரும் பின்னாலிருந்து தூண்டிவிட தேவையில்லை அவர்களும் சொந்தத்தில் சிந்திக்கக்கூடியவர்கள்.ஜனநாயக வழியிலும் நீதி வழியிலும் பிரச்சனையை தீர்க்க விரும்புவபர்கள் பல வருடங்களாக ஒரே சமூகத்தினை சேர்ந்த உறவினர்களான கலைமதி மக்களில் ஒரு சிலரின் அராஜகம் அடாவடிதனங்களையும் விரும்பாமலே ஜனசக்தி மக்கள் நீதிமன்றம் பொலிசாரை நாடினர். இந்த விடையங்கள் ஒளிப்படமாகவும் இறுவட்டாகவும் ஆதாராமகா உண்டு.இவை அனைத்திற்கும் செந்தில் ஐயாவும் அவரது கட்சியுமே காரணம்.

 கடந்த காலங்களில் தீண்டாமைக்கு எதிராக போராடிய முன்னோடிப்போராளிகளான M.C .சுப்பிரயணியம் ஐயா,S.T.நாகரத்தினம் ஐயா,V.A. கந்தசாமி ஐயா,K.A.சுப்பிரமணியம் ஐயா,டானியல் ஐயா போன்ற முன்னோடி போராளித்தலைவர்கள் வரிசையில் தானும் இடம்பிடித்துவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்.  அவர்களின் புனிதமான போராட்டங்களுடன் மக்களை பிழையாக வழி நடத்தும் இவரின் சுயநல போராட்டங்களை ஒப்பிட முடியாது.  அப்பாவி கலைமதி மக்களை பொலிசாருடனும் நீதி மன்றத்துடனும் மோத வைத்து பொலிசார் அம்மக்களை சுட வேண்டுமென்றும் அதன்மூலம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்குவேட்டையாடலாம் என மனப்பால் குடிக்கிறார். தனது அரசியல் இலாபத்திற்காக அப்பாவி மக்களை உசுப்பேற்றி எங்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.  இவருடன் இணைந்து சில கழுதைப்புலிகளும் அரசியல் இலாபத்திற்காக அலைகின்றனர். இது காணிவியாபாரம் இதில் சாதி சாயம் பூசி கோடிக்கணக்கான ரூபாய் கட்சி நிதி என ஏப்பம் விட்டதை அந்த மக்களை கொண்டு மறைக்க முற்படும் மேலும் பல உண்மைகளுடன் பதிவு தொடரும்.

தொடர்பான கட்டுரைகள்


Comments

Popular posts from this blog

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

யார் இந்த யதார்த்தன்

யாழ்ப்பாணம் தோற்ற கதை