பொக்ஸ் நாவல்: ஒரு மலின இலக்கியம்

Pornography of Literature

மதிப்புரை 
நட்சத்திரன் செவ்விந்தியன்

2009ல் ஈழப்போர் முடிந்தபின் தமிழ் உணர்வை சனரஞ்சகமான கச்சாப்பொருளாக்கி சுமாரான மற்றும் மோசமான ஈழப்போர் சம்பந்தமான நாவல்கள் வெளிவந்தன. ஆனந்த விகடன் போன்ற வியாபார நிறுவனங்கள் ஊக்குவித்த இந்த போக்கின்படி தமிழ்க்கவி, தமிழ்நதி, சயந்தன், குணா கவியழகன், தீபச்செல்வன் முதலியோர் எழுதிய நாவல்கள் வெளிவந்து சனரஞ்சக மதிப்பைபெற்று பிரபல்யமாகின்றன. இந்த நாவல்களை எழுதியவர்களுக்கு தமிழகத்தில் கிடைக்கும் பிரபல்யத்தால் மனங்குமைந்து "ரென்சனான" ஷோபாசக்தி தனக்கு இருக்கும் தெரிவுகளை ஆராய்கிறார். ஷோபாசக்திக்கு தனது சரக்கும் இலக்கிய திறமைகளும் தீர்ந்துபோனது தெரியும். புலி எதிர்ப்பாளன், புலி விமர்சகன் போன்ற தனக்கு எதிராக இருக்கிற வணிக சாபங்களையும் சமரசம் செய்து குத்துக்கரணமடித்து புலியாதரவு நாவலாகவே எழுதுவதைத்தவிர தன்னிடம் திராணி இல்லை என்பதை உணர்ந்த ஷோபாசக்தி தீட்டியதுதான் "ஒப்பரேஷன் Box" 
 
                           மோசடி இதழ்: 7-11-2012

1. முன்னாள் பெண்புலி தளபதி விபச்சாரம் செய்வதாக புனைவது. இது ஆனந்த விகடன்(7-11-2012) பேட்டியாக ம. அருளினியன் செய்த மோசடி. இதை சிறிது மாற்றி மெருகூட்டி Box இல் காலி விபச்சார விடுதியாக்குகிறார். 

              மோசடிப் பேட்டியின்  பக்கமொன்று


 2. சரணடைந்த பெண்புலித் தளபதிகளை இலங்கை ராணுவம் புனர்வாழ்வு முகாமிலோ முகாமுக்கு கொண்டு செல்லமுதலோ Gang rape பண்ணுவதாக புனைவது. இது அகர முதல்வன் செய்த "சாகாள்" மோசடிக்கு ஒப்பானது.  இறுதி யுத்தத்தில் சில Rape கள் நடந்ததில் உண்மையுண்டு. ஆனால் ஷோபாசக்தி 90 களில் சில ஆபிரிக்க நாடுகளிலும் பொஸ்னியாவிலும் நடந்தமாதிரியாக Ritual and organised mass rape ஆக புனைவது மலின வியாபார உத்தி. இவைகள் fiction கலைப்படைப்பாகவோ non fiction உண்மை அறிக்கைகளாகவோ தேற வக்கில்லாத மலின ஆபாசங்களே. அருளினியன், ஆகரமுதல்வன் முதலியவர்கள் பயன்படுத்துகிற இந்த 
வகையான  வணிகமயமான மலின பாலியல் "சீன்" களைத்தான் பொக்சிலும் ஷோபாசக்தி படைக்கிறார். 

 3, இறுதியுத்த நாட்களில் புலிகள் பிரயோகித்த பொய்ப்பிரச்சாரங்களையும் யுத்தத்தின் பின் புலியாதரவாளர்கள் வெளிநாட்டில் சொன்ன யுத்தம் பற்றிய பொய்ப்பிரச்சாரங்களையும் முழுமையாக பயன்படுத்த தீர்மானிக்கிறார். இதன்படி Cluster குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள் இறுதி யுத்தத்தில் இலங்கைப்படைகளால் பயன்படுதப்பட்டதாக பொய்ப் பிரச்சாரப்புனைவை நாவலுக்குள் கொணர்கிறார்.  தீபா போன்ற சிரேஷ்ட பெண் தளபதிகள் புனர்வாழ்வின்பின் பிரான்ஸ் தேசத்துக்கு கணவரோடு சென்றதை மறைத்து திரும்பி வந்த பெண் தளபதியொருவர் இலங்கை படைகளால் கைது செய்யப்பட்டதாக புனைகிறார். 

                    Pornography of Violence



 4. நாவலின் முதல் சொல்லே "நிர்வாணம்" என்று தொடங்குகிறது. முதல் அத்தியாயத்தில் மிகச்சிறிய சதுரவடிவத்துள் தரையில் இரு இளைஞர்களை நிர்வாணமாக்கி நிற்க வைக்கின்ற பகுதி வன்முறை அதிர்ச்சி ஏற்படுத்த எழுதப்பட்ட மிக மலினமான வியாபார உத்தி.  2019ல் வந்த Simon Cottee எழுதிய புனைவு சாரா புத்தகத்தின் தலைப்பு ISIS and the Pornography of Violence. ISIS எவ்வாறு பத்திரிகையாளர்களை/தங்களது எதிரிகளாக காபிர்களாக கருதுகிறவர்களை கொல்வதை pornography படங்களைப்போல விலாவாரியாக காட்சிப்படுத்தி வீடியோக்களாக்கி பரப்பியதற்காக தலைப்பை அப்படி வைத்தார்கள். இந்நாவலில் ஷோபாசக்தி பயன்படுத்துகிற மலின வியாபார உத்திகள் Pornography of Violence மட்டுமல்ல Pornography of Literature(கவனிக்கவும் pornographic literature அல்ல) ஆகவும் இருக்கிறது. இலக்கிய மதிப்பு, கலை மதிப்பு எதுவுமில்லாமல் வெறும் மலின எழுத்தாகவே இருக்கிறது. காலியில் புலி சீருடைகளில் விபச்சாரம் நடப்பதும் இதே மலினம்தான். 

 5. நல்ல நாவல் தனக்கான வடிவத்தையும் மொழியையும் தானே உருவாக்கிக் கொள்ளும். அசலான பலமான ஒரு கதைப்பின்னல், அசலான பாத்திர உருவாக்கம், ஒழுங்கமைதியான முன்னகர்வு இருக்கும். கொரில்லா இப்படியான நல்ல நாவல். Box ல் மொழி மட்டுமே இருக்கிறது. அசலற்ற பலவீனமான கதைப்பின்னல். நல்ல எழுத்தாளன் சுய அனுபவ பாத்திரங்களை மட்டுமன்றி மற்றப் பாத்திரங்களையும் அதுவாக வாழ்ந்து படைக்கக்கூடியவன். ஷோபாசக்தியால் அது முடியவில்லை. அவரது கொரில்லாவில் வரும் சில இயக்க பாத்திரங்கள்(கதை சொல்லி பாத்திரம் உட்பட) இங்கு Recycle செய்யப்படுகிறது. கார்த்திகை என்ற சிறுவன் பாத்திரம் புலி ஆதரவாளர்களுக்காக படைக்கப்பட்ட ஒரு செயற்கையான Fake பாத்திரம். பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சிய கதைகளாக வருபவை வெறும் non fiction பதிவுகள்போல இருக்கிறதே தவிர ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நாவலின் பாத்திரங்களாக அல்ல. பண்டார வன்னியன் கதை, டைட்டஸ் லெமுவேல் கதை, நிர்வாணச் சங்கம் இவைகளெல்லாம் இலக்கிய விமர்சகர்களை பயமுறுத்தி/குழப்பவைத்து பொக்ஸ் நாவலை தரமானது என்று ஏமாற்றுவதற்கான முயற்சிகளே. தரமான இலக்கிய வாசகன்/ள் பொக்ஸ் ஒரு போலி நாவல் என்பதை இலகுவில் அடையாளம் காண்பான்/ள்

 6. சில தமிழக விமர்சகர்கள் ஈழத்தமிழரின் "துன்பத்தை" உணர்ந்து இந்நாவலை அணுகவேண்டும் என்கிறார்கள். நாவல் படிப்பது ஒரு தர்மம் போடும் வேலை அல்ல. இலக்கியம் முதலில் ஒரு கலைப்படைப்பாக இருக்கவேண்டும். பொக்ஸ் ஒரு இலக்கியமாக கலைப்படைப்பாகவும் இல்லை. ஈழத்தமிழரின் துன்பத்தை உணரவைக்கிற ஒரு உண்மை சாட்சியமும் இல்லை. இது ஒரு போலி நாவல். மோசடி. ஈழப்போர்களின் உண்மை நிலவரம் தெரியாத தமிழக உணர்வாளர்கள், புலி ஆதரவு வெறியர்கள் என்கிற இரண்டு பிரிவினர்களுக்காக எழுதப்பட்ட Pornography of Literature.(இது pornographic literature - ஆபாச கதையல்ல. நீலப்பட வாசகர்கள் 😜ஏமாறாதீர்கள். ஷோபாசக்தி அப்படிச்சொல்லி ஏமாற்றியும் தன் புத்தகத்தை விற்குமளவு கேப்மாறிதான்)

பொக்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டால் அதன் வண்டவாளங்கள் துல்லியமாக தெரியவரும். ஏற்கெனவே ஒரு பிரெஞ்சுப்பதிப்பகம் இதனுடைய ஆங்கில மொழிபெயர்ப்பு பிரதியொன்றைப் பார்த்து இதனை 
பிரசுரிக்க மறுத்துள்ளது.  

 பொக்ஸ் பல இலக்கிய வாசகர்களை கவரவேயில்லை. கொரில்லா என்ற சிறப்பான குறுநாவலை எழுதியவரா இந்த குப்பையையும் எழுதினார் என்ற குழப்பம் அவர்களுக்கு. அவர்கள் உண்மையை சொல்ல முடியாதளவுக்கு சமூக வலைத்தளங்கள் முலமாக கன கச்சிதமாக தன்னைப்பற்றிய Public Relations செயற்பாட்டை ஷோபாசக்தி முன்னெடுத்தார். டீபன் படத்தில் நடித்த பிரபல்யத்தை பயன்படுத்தியும் தன்னுடைய முகநூல் நண்பர்களிடம் நூல் வருவதற்க்கு முதலே வருவதான அறிவிப்பை வெளியிடுமாறு வாய்விட்டு கேட்பதிலிருந்து பல தமிழக எழுத்தாளர்கள் மற்றும் நிர்மலா, ராகவன் போன்றவர்களை தன்னுடைய PR ஏஜண்டுகளாக பயன்படுத்துவது வரை அவரது சமூக வலை விளம்பர உத்திகள் இருக்கின்றன.

தமிழ்ச்சூழலில் இலக்கிய விமர்சனம் எவ்வளவு மோசமான நிலையிலிருக்கிறது என்பதற்கு பொக்ஸ் நல்ல சான்று. 5 ஆண்டுகள் கழித்தும் பொக்ஸ் நாவலின் போலித்தனத்தை எந்த விமர்சனமுமே அம்பலப்படுத்தவில்லை.

தொடர்பான கட்டுரைகள்






Comments

  1. நல்ல நாவல் தனக்கான வடிவத்தையும் மொழியையும் தானே உருவாக்கிக் கொள்ளும்…//

    You’re good.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

 யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களின்   கல்வி அறிவு மோசடிகள்

அவந்திகா: ஓர் அவல மனைவியின் வாக்குமூலம்