Posts

Showing posts from August, 2025

பிரபாகரனின் பிரேத பரிசோதனை

Image
  By நட்சத்திரன் செவ்விந்தியன் அடிப்படையில் நான் ஒரு பத்திரிகையாளன். நான் ஒரு பிரேத பரிசோதனை அதிகாரி அல்ல. ஒரு பத்திரிகையாளராக எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அத்தகவல்கள் நம்பகத்தன்மை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு உரிய விசாரணை, ஆய்வு, அறம் திறமைகளின் அடிப்படையில் பிரபாகரனின் மரணம் பின்வருமாறுதான் நடந்திருக்கும் என்கிற முடிவுக்கு வருகிறேன். அதனை மறுத்து முறையான விஞ்ஞான விவாதத்திற்கு வருவதும் ஆய்வு விசாரணை மரபுகளில் படி ஏற்கக்கூடியதே. இன்றைய சியோனிச இஸ்ரேலில் இருக்கிற குறைந்தபட்ச சனநாயக, உடற் கூறியல் – பிரேதபரிசோதனை- நீதி நடைமுறைகளைக்கூட விழுமியங்களைக்கூட ஈழப்போரின் இறுதியுத்தத்தில் மகிந்த அரசு பேணவில்லை. மகிந்த அரசு இன்றைய இஸ்ரேல் காசா மக்களை பட்டினி போட்டுக் கொல்வது போல கொல்லவில்லை. அதற்கான தேவையும் இருக்கவில்லை. ஆனால் மகிந்த அரசு முறையான சட்டரீதியான மரண விசாரணைகளை ஸ்ரீலங்கா அரசியலமைப்பில் சொல்லப்பட்டது போல் செய்யவில்லை. மே 19ல் கைப்பற்றப்பட்ட பிரபாகரனின் இறந்த உடல் சட்டப்படி ஒரு வைத்தியசாலை சவக்கிடங்குக்குக்கு(Mortuary) கொண்டுசெல்லப்பட்டிருக்கவேண்டும். அங்கு ஒரு மரணவிசார...

அஞ்சலி: திரு வேலுப்பிள்ளை பிரபாகரன்

Image
                   By   நட்சத்திரன் செவ்விந்தியன் “ துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்” என்றிருக்கிறேன். பிரபாகரன் இறந்து பதினாறு வருடங்களின் பின் இந்தப்பெரும் பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது. இது பிரபாகரனுக்கான அஞ்சலி எழுதும் நாள். சட்டப்படி. இந்நாள் ஆகஸ்ற் இரண்டு 2025. பிரபாகரன் இறந்தபோது நான் துயரப்படவில்லை. சந்தோசப்பட்டேன். எனது என் தலைமுறையினரது அழகிய இளமையை, இளமைக்காலத்தைக் காவு கொண்டவர் அவர். துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதக்காரணம் அவரது மரணக்கதையை அவரது விசுவாசிகளே புனைந்து விற்கத் துணிந்தமைதான். எல்லோருக்கும் நஞ்சுமாலை அணிவித்த தலைவர் தான் நஞ்சுமாலை கடிக்காமல் எதிரிகளிடம் சரணடைந்தார் என்கிற புனைகதையை அவரின் எதிரிகளை விட விசுவாசிகளே ஆக்ரோசமாகப் பரப்புகிறார்கள். சுயநலன் சார்ந்த அவரகளின் எதிர்கால அரசியலுக்கான சூது அது. அதுதான் இன்றைய என்னிரவு துயர்மிகு வரிகளுக்கான காரணம். இரண்டாவது என் இளமையைப்போல தம் மகத்தான போராட்ட இளமைக்கால போராட்டப் பங்களிப்பை பிரபாகரன் அண்ணையிடம் காவுகொடுத்த என் மாற்றுக் குலத்தவர்களான மாற்றுக் கர...