இலக்கிய ரவுடி சாரு நிவேதிதா
"கட்சி மாறுவதால் என்னை கோழையென்று நினைத்து விடாதீர்கள், இருக்கின்ற கட்சியிலேயே இருக்கின்ற மேடையிலேயே இன்னொரு கட்சிக்குத் தாவும் தைரியம் இந்தியாவிலேயே எனக்கொருவனுக்குத்தான் உண்டு" -சாரு நிவேதிதா நட்சத்திரன் செவ்விந்தியன் " இலக்கிய விமர்சனத்திலோ இலக்கிய மதிப்பீட்டிலோ சாருவுக்கு எந்த இடமும் கிடையாது' - சோபாசக்தி Zoom இப்போது பூர்வஜென்ம பாவங்களை கழுவும் காசியாகி இருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முதல் கொரில்லா நாவல் வந்தபோது சாரு நிவேதிதா அதனை வன்மத்தோடு கிழித்தார். யமுனா ராஜேந்திரனும் அதனை மிக வன்மத்தோடு கிழித்தார். சாருவும் யமுனாவும் தீர்மானிப்பதல்லவே தமிழ் செவ்வி...