அஞ்சலி: திரு வேலுப்பிள்ளை பிரபாகரன்
By நட்சத்திரன் செவ்விந்தியன் “ துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்” என்றிருக்கிறேன். பிரபாகரன் இறந்து பதினாறு வருடங்களின் பின் இந்தப்பெரும் பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது. இது பிரபாகரனுக்கான அஞ்சலி எழுதும் நாள். சட்டப்படி. இந்நாள் ஆகஸ்ற் இரண்டு 2025. பிரபாகரன் இறந்தபோது நான் துயரப்படவில்லை. சந்தோசப்பட்டேன். எனது என் தலைமுறையினரது அழகிய இளமையை, இளமைக்காலத்தைக் காவு கொண்டவர் அவர். துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதக்காரணம் அவரது மரணக்கதையை அவரது விசுவாசிகளே புனைந்து விற்கத் துணிந்தமைதான். எல்லோருக்கும் நஞ்சுமாலை அணிவித்த தலைவர் தான் நஞ்சுமாலை கடிக்காமல் எதிரிகளிடம் சரணடைந்தார் என்கிற புனைகதையை அவரின் எதிரிகளை விட விசுவாசிகளே ஆக்ரோசமாகப் பரப்புகிறார்கள். சுயநலன் சார்ந்த அவரகளின் எதிர்கால அரசியலுக்கான சூது அது. அதுதான் இன்றைய என்னிரவு துயர்மிகு வரிகளுக்கான காரணம். இரண்டாவது என் இளமையைப்போல தம் மகத்தான போராட்ட இளமைக்கால போராட்டப் பங்களிப்பை பிரபாகரன் அண்ணையிடம் காவுகொடுத்த என் மாற்றுக் குலத்தவர்களான மாற்றுக் கர...