சர்மிளா சையித்: Me Too எதிர்ப்புரட்சிக்காரி

 


நட்சத்திரன் செவ்விந்தியன் 

சர்மிளா சையித் தன் முகநூல் பதிவில் புதிய சனநாயகக்கட்சி தன் உற்ப்பினரான மு.மயூரனை தற்காலிகமாக கட்சியிலின்று நீக்கியிருப்பதாக அறிவித்தமை பற்றி வெளியிட்ட பதிவு மிக்க சர்ச்சைக்குரியது.

 7 பந்திகளைக்கொண்ட அப்பதிவில் 6 பந்திகளில் குறித்த ஒழுக்காற்று  நடவடிக்கை எடுத்த கட்சியை கண்டித்து குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சியை குறிவைத்து தாக்கிய அவரது முக்கியமான வசனங்கள் பின்வருவன. 

1. "புதிய மார்க்சிச லெனினிசக் கட்சி உறுப்பினர் மு.மயூரன் பெண்களுடன் முறைகேடாக நடந்துகொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கள் கவனச் சிதறலாக மட்டுமே அமைந்துள்ளது."

2. "....குறிப்பிட்ட நபரைக் களையெடுத்துவிட்டால் இயக்கம்/ கட்சி தூய்மை பெற்றுவிடும் என்பதோ மிகவும் குறைபாடான, தூர சிந்தனையற்ற தீர்மானங்கள்."

3." இவரை நீக்கிவிட்டால் கட்சியின் மீதும் அதன் பொறிமுறைகளின் மீதும் மக்களுக்கு குறிப்பாகப் பெண்களுக்கு நம்பிக்கை வந்துவிடும் போன்று கட்டமைப்படும் விம்பங்கள் மருட்சியானது."

4. " பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராகத் தெளிவான, உடனடி நடவடிக்கைகள் தேவை. இந்த நடவடிக்கையை எடுப்பதில் குறிப்பிட்ட கட்சி தவறியிருக்கிறது." 

5. "விசாரணைகளை நேர்மையாக நடாத்தி கட்சியின் ஒழுங்குக் கோவைக்கு அல்லது யாப்புக்கு அமைய தெளிவான நடவடிக்கை எடுத்த பிறகே கட்சியின் அறிக்கை சமூக வலைத்தளங்களுக்கு வந்திருக்கவேண்டும். விசாரணைகள் முடிவடையாத ஒரு பகிரங்க அறிவிப்பினால் கட்சிக்கு மறைமுக எதிர்பார்ப்புகள் இருக்கலாம் என்ற சந்தேகமும், முடிவெடுப்பதற்குக் கட்சி தடுமாறுகிறது  என்பதும் தெளிவாகத் தெரிகிறது" 

6. "பாலியல் துஷ்பிரயோகம் பற்றிப் பேசுகின்ற குரல் எழுப்புகின்ற அதே கட்சியில் உறுப்பினர்களாக உள்ள, இல்லாத பெண்கள் நகைச்சுவைப் பாத்திரங்களாக சமூக வலைத்தளங்களில் சித்தரிக்கப்படுவதற்கு கட்சியே காரணம்."

7. "போலியான அதிர்ச்சி வெளிப்பாடுகளும், கட்சியைத் தூய்மைப்படுத்துவதாகக் கருதி தங்களின் தனிப்பட்ட தூய்மைப்பாட்டை நிரூபிக்கச் சில தனிநபர்களும் அமைப்புகளும் எடுக்கும் எத்தனங்களும் விநோதம்."  


சர்மிளா சையித்தின் பதிவில் மயூரன் விடயத்தில்  சட்டப்படி முறையான நடவடிக்கை எடுத்த கட்சி  அபாண்டமாக ஆதாரமற்று குறிவைத்து தாக்கப்பட்டுள்ளது. சையித் இங்கு Victim Blaming செய்யவில்லை. ஒரேயொரு வசனத்தில்  தான் மயூரனுக்கு ஆதரவாக இதனை எழுதவில்லை என்பதைக்காட்ட      " அத்துடன், இது குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கும், சமூக வலைத்தளங்களில் ஆதரவு அணியைத் திரட்டுவதற்கும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தித் தந்துள்ளது."  என்று எழுதியுள்ளார். ஆனால் தன் பதிவில் சையித் செய்வது Victim Blaming க்கு ஒப்பான அல்லது அதைவிடப் பாரதூரமான ஒரு குற்றம். அதாவது நீதி, சட்ட, கட்சி ஒழுக்காற்று நடவடிக்கைகளையே Blame பண்ணுகிற குற்றம். 

ஒரு பதிவுசெய்யப்பட்ட இலங்கைக் கட்சி தன் உறுப்பினர் மீது அவரது ஒழுக்காற்றம் சம்பந்தமாக தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ நடவடிக்கை எடுக்கலாம். அது பற்றிய Press Release ஐ வெளியிடலாம். நீதிமன்றமொன்று ஒருவருடைய குற்றத்தின் பாரதூரத்திற்கேற்ப அவருக்கு Bail வழங்கலாம் அல்லது தொடர்ந்தும் பொலிஸ் காவலில் வைத்திருக்கலாம். அதுபோல ஒரு கட்சியும் குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் குற்றத்தின் பாரதூரம் கருதி அவரை தற்காலிகமாக நீக்கலாம். நீதி மன்றங்கள் மட்டுமே நீதி வழங்க உரித்துடையன அல்ல. குடும்பத்தில் குழந்தைகளுக்கு  பெற்றோரும் கட்சியில் கட்சியால் அதிகாரமளிக்கப்பட்ட விசாரணைக்குழு தமது உறுப்பினருக்கு தமக்கான அங்கீகரிக்கப்பட்ட அதிகாரங்களின் படி நீதி வழங்கலாம். தண்டனை வழங்கலாம். 

விசாரணை செய்வது, நீதி வழங்குவது எல்லாம் நேரமெடுக்கும் ஒரு தொடர் நடைமுறை(Process). சட்டுப்புட்டென காரியத்தை முடிக்கும் ஒரு அதிரடி நடவடிக்கை( Event) அல்ல. 

சையித் சொல்வது போல பாலியல் துஷ்பிரயோகத்திற்கெதிராக உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு புதிய சனநாயகக்கட்சி அரசியல் குழு/விசாரணைக்குழு ஒரு இராணுவம் அல்ல. அது இராணுவ நீதிமன்ற(Court Martial) நடைமுறைகளையோ அல்லது புலிகளின் பாணியில் கங்காரு நீதிமன்றத்தையோ நடாத்த முடியாது. இலங்கைக் கட்சிகளுக்கு அனுமதிக்கப்பட்ட சனநாயக நடமுறைகளையே அது பின்பற்றலாம். 

கட்சி மயூரனை தற்காலிகமாக நீக்கி  வெளியிட்ட அறிக்கை ஒரு கவனச்சிதறல் என்று சையித் சொல்வது அவருக்கு நீதி வழங்கும் நடைமுறைகள் தெரியவில்லை என்பதை மட்டும் சொல்லவில்லை. அவர் ஒரு தனிப்பட்ட Agenda- நிகழ்ச்சி நிரலுக்கேற்ப இதனை எழுதியுள்ளாரா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. சனநாயக நடைமுறை நேரமெடுக்கும் Process  மட்டுமல்ல அது Transparent - வெளிப்படைத்தன்மையானதாக இருக்கவேண்டும்.  அதனால்தான் கட்சி அன்று எடுத்த தற்காலிக கட்சி நீக்கத்தை காரணங்களுடன் அறிவித்தது. அறிவிக்க கடமைப்பட்டது. 

சமூக வலைத்தளங்கள் உலக நீதித்துறைக்கு மிகப்பெரிய சவால்/பிரச்சனை. குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட  Juri/ஜுரிகள் குற்றஞ்சாட்டப்பட்டவர் பற்றிய முகநூல் பதிவுகளை படிக்கவேண்டாம் என்று நீதிபதிகளால் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த சமூக வலைத்தளங்களின் தாக்கத்தால் எந்த ஒரு நீதியான மனுசனும் மனுசியும் நீதிறையை நீதி மன்றங்களை குற்றஞ்சாட்டமாட்டார்கள். சமூக வலைத்தளங்களையே குற்றஞ்சாட்டுவார்கள். மயூரன் ஒழுக்காற்று விடயத்தில் கட்சி விசாரணைக்குழுதான் De Facto நீதிமன்றமாக தொழிற்படுகிறது. கட்சி தவறிழைத்தால் மயூரன் அதனை இலங்கை நீதிமன்றுகளுக்கு எடுத்துச் செல்ல உரித்துடையவர்.  ஆனால் இங்கு சமூக வலைத்தளங்களை குற்றஞ்சாட்டவேண்டிய சையித் கட்சியை குற்றஞ்சாட்டுகிறார். சையித் இங்கு தருக்கம் தரவுகளின் அடிப்படையில் நியாயமாக குற்றஞ்சாட்டுகிறாரா? அல்லது தனது Agenda அடிப்படையில் குற்றஞ்சாட்டுகிறாரா? 

முக்கியமாக சையித்தின் பதிவு Me Too இயக்க எதிர்ப்பு பதிவு . சமூக வலைத்தளங்களில் பிறந்த இயக்கம் Me Too. புதிய சனநாயகக்கட்சி மயூரனை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதாக  வெளியிட்ட Press Release Me Too இயக்கத்தின் பொறிமுறைகளின் படியும் வரவேற்கத்தக்க பதிவு. இதன் மூலம் இம்மாதிரி பாதிக்கப்பட்ட பெண்கள் துணிவுபெற்று குற்றச்சாட்டுக்களை முன்வைப்பார்கள். ஆனால் சையித் அந்த தற்காலிக இடைநிறுத்தம் பற்றிய Transparent பதிவைக் கண்டித்து                       " மு.மயூரன் பெண்களுடன் முறைகேடாக நடந்துகொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கள் கவனச் சிதறலாக மட்டுமே அமைந்துள்ளது"  என்கிறார்.            " "கவனச்சிதறல்" (Deviation) என்கிற பதம் சையித் திட்டமிட்டு பாவித்தது.  Me Too இயக்கம் பாவிப்பது "கவன ஈர்ப்பு" என்ற பதம்.  உண்மையில் இந்த மகத்தான Me Too ஈழப் பெண்டிர் புரட்சியை கவனச்சிதறல் செய்பவர் Madam சையித் தான். 

சையித் நமக்கு தரும் ஆலோசனை  " பாலினம், பால்நிலை சமத்துவம், பாலின அடையாளம்" பற்றித் தெரிந்து கட்சிகளில் இணைந்து கொண்டால் மயூரன் போன்றவர்கள் உங்களை ஏமாற்றமுடியாது என்பதே. சையித்தின் குறித்த ஆலோசனையைவிட மிகப் பரந்ததும் மிக விலாசமானதும் மேலைத்தேயங்களில் பாலியல் கல்விக்கூடாக சிறுவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுவது. இவ்வளவு இருந்தும் மயூரன் போன்ற Sexual Predators களை மேலைத்தேயங்களில் இல்லாமலாக்க முடியவில்லை. 

மயூரன் சம்பவத்தால்  முதல் தடவையாக ஈழத்தமிழர்களிடையே நடக்கும் Me Too பெண்டிர் புரட்சி மெச்சத்தக்கது. இப்புரட்சியை கடத்தி சமூக வலைத்தள Algorithm களில் குளிர்காய்பவர்களும் தனிப்பட்ட Agenda களுக்காக இயங்குபவர்களும் எல்லோரும் எதிர்ப்புரட்சியாளர்களே. 

இப்போது குற்றவாளியான மயூரனுடைய ஆதரவாள பெண்களும் உளவு நிறுவனங்களும் Lobby நிறுவனங்களும் பயன்படுத்துகிற ஒரு கனகச்சிதமான பின்வரும் (Disinformation) திறமுறைகளை உபயோகிக்கிறார்கள்.

1. மயூரனுடைய குற்றங்கள் நன்கு அறியப்பட்டவை என்பதால் மயூரனை தற்பாதுகாப்பதை விட்டு மயூரனையும் கண்டிக்கிறமாதிரி விமர்சிக்கிறமாதிரி காட்டிக்கொண்டு  கட்சிக்குள் கட்டற்ற பாலுறவுகள் எண்ணற்று நடக்கிறது என்ற பொய்ப் பிரச்சாரங்களை  போலி முகநூல்கள் மூலமாகவும் தமக்கு ஆதரவான பெண்கள் மூலமும் முன்னெடுப்பது. இவ்விடயத்தில் கட்சியை அபாண்டமாக குற்றஞ்சாட்டுவது. கட்சியை குற்றவாளியாக்குவது. 

2. இந்த Me Too புரட்சியின் சிற்பிகளான சுவாஸ்திகா அருளிங்கம், மோகனா தர்சினி, ஹரி கீர்த்தனா முதலியவர்களும் மயூரனை போல கட்சிக்குள்ளோ வெளியேயோ முறைகேடான பாலுறவுகளில் ஈடுபட்டவர்கள் என்ற பொய்ப்பிரச்சாரங்களை முன்னெடுப்பது. 

3. இவைமூலம் குற்றவாளியான மயூரனை பாதிக்கப்பட்டவர்(Victim) என்று கட்டமைப்பது.

இந்த திறமுறையின் படியே சையித் கட்சியை குறிவைத்து தாக்குகிறார். ஆக தனது குறிப்பை எழுத முதல் சையித் மயூரனோடு கலந்துரையாடியிருக்கிறார். இது ஒரு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட  திட்டமிட்ட Lobbying ன் பகுதி.  "கட்சி முடிவெடுக்க தடுமாறுகிறது. தன் பலத்தை வேவு பார்க்கிறது" என்று சையித் எழுதுவது மயூரனுக்கான  கட்சியைப்பற்றி புனைகிற Disinformation. பெண்ணியல்வாதி என்றும் ஆணாதிக்கத்தாலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளாலும் தான் பாதிக்கப்பட்டவர் என்றும் சொல்கிற சையித் இங்கு Me Too ஈழப்பெண்டிர் புரட்சிக்கெதிராக Lobbying செய்வது அம்பலப்படுத்தப்பட வேண்டியது.  கடுமையான சொற்களால் கண்டிக்கப்பட வேண்டியது. 

கட்சிக்குள் கட்டற்ற பாலுறவு கடைப்பிடிக்கப்பட்டது என்பது அப்பட்டமான பொய்.  இப்போது கட்சிக்குள் மயூரனைப்போன்ற Sexual Predator யாரும் இல்லை.  மீனிங்கோ Sexual Predator அல்லது Womanizer அல்லர். 

 இப்புரட்சியின் சிற்பிகளிலொருவரான சுவாஸ்திகா அருளிங்கத்துக்கு தனக்கும் உறவு இருந்ததாக  ஒரு அப்பட்டமான பொய்யை, வதந்தியை வெகுநாட்களுக்கு முன்னிருந்தே மயூரன்  பரப்பி வந்திருக்கிறார். இப்போது மயூரன் போலி முகநூல்களில் அவ்வதந்தியை மேலும் மெருகூட்டுகிறார். 

நேற்று வரையும் தவறான தகவல்களாலும் கிரகிப்புக்களாலும் என்னை ஒரு "பொறுக்கி" என. பல தடவைகள் எண்ணற்ற முகநூல் பின்னூட்டங்களில் பொறுப்பற்று வசையாடிய இப்புரட்சியின் தலைவிகளில் ஒருவரான  மோகனா தர்சினி  அறமற்ற எதிர்ப்புரட்சியாளர்களால் மிலேச்சத்தனமாக தாக்கப்படுகிறார். Blackmail பண்ணப்படுகிறார். என்னுடைய கட்டுரைகள் ஒருபோதுமே முன் விரோதம் காழ்ப்புக்களின் தாக்கத்தால் எழுதப்படுவதில்லை. அதே அடிப்படையில் தான் இக்கட்டுரையும் எழுதப்படுகிறது.  உண்மையில் மோகனா தர்சினியின் விவாகமும் விவாகரத்து வழக்கும் மிகத்துர்ப்பாக்கியமானவை. அவர் ஒரு Domestic Violence Victim.  அதிலிருந்து மீள  இலங்கையின் பழங்கால(Archaic), நெடுநாள் இழுபடும் நீதியும் சட்டங்களும் அவருக்கு உதவவில்லை. 

பின்னிணைப்பு: சயித்தின் பதிவு 

பாலியல் வன்முறைப் பிரச்சினையை எழுப்பும்போது, வலுவான நிலையான சாத்தியமான இயக்கத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டிலிருந்தே அவ்வாறு செய்கிறோம். பாலியல் வன்முறையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வலியுறுத்துவது ஒரு கவனச்சிதறல் அல்ல, அது மையமானது. புதிய மார்க்சிச லெனினிசக் கட்சி உறுப்பினர் மு.மயூரன் பெண்களுடன் முறைகேடாக நடந்துகொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கள் கவனச் சிதறலாக மட்டுமே அமைந்துள்ளது. 

 பொறுப்புமிக்க இடத்தில் ஒரு மனிதனுக்கு பாலியல் வன்முறை அல்லது தவறான நடத்தை பற்றிய வரலாறு உள்ளது என்று வெளிப்படும் பிரச்சாரங்களை நான் மிகவும் ஆபத்தானதாகக் காண்கிறேன். இதனை ஒரு தனிமனித குறைபாடாக மட்டும் சுருங்கிப் பார்த்துக் கடந்து சென்றுவிடுவதாலோ, குறிப்பிட்ட நபரைக் களையெடுத்துவிட்டால் இயக்கம்/ கட்சி தூய்மை பெற்றுவிடும் என்பதோ மிகவும் குறைபாடான, தூர சிந்தனையற்ற தீர்மானங்கள். 

 பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒருவர் இத்தனை காலம் அங்கத்துவம் வகித்த கட்சியின் பொறிமுறை தொடர்பான விமர்சனங்களுக்கும் திறந்த உரையாடல்களுக்குமான கதவுகள் இங்கே தாழிடப்பட்டிருக்கின்றன. இந்த நபரை கட்சியிலிருந்து நீக்குவதோ வைத்துக் கொள்வதோ கட்சியின் தீர்மானங்கள். இவரை நீக்கிவிட்டால் கட்சியின் மீதும் அதன் பொறிமுறைகளின் மீதும் மக்களுக்கு குறிப்பாகப் பெண்களுக்கு நம்பிக்கை வந்துவிடும் போன்று கட்டமைப்படும் விம்பங்கள் மருட்சியானது.

 பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராகத் தெளிவான, உடனடி நடவடிக்கைகள் தேவை. இந்த நடவடிக்கையை எடுப்பதில் குறிப்பிட்ட கட்சி தவறியிருக்கிறது. பாலியல் துஷ்பிரயோகம் பற்றிப் பேசுகின்ற குரல் எழுப்புகின்ற அதே கட்சியில் உறுப்பினர்களாக உள்ள, இல்லாத பெண்கள் நகைச்சுவைப் பாத்திரங்களாக சமூக வலைத்தளங்களில் சித்தரிக்கப்படுவதற்கு கட்சியே காரணம். தற்காலிக இடைநிறுத்தம் பற்றிய அறிவிப்பை சமூக வலைத்தளங்களில் விட்டு, விமர்சனங்களையும், தங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் அணி சேர்வோரையும் வேவுபார்க்கவே கட்சி விரும்பியிருக்கிறது. கட்சிக்குள் நடந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் அல்லது முறைகேடுகள் அல்லது அது பற்றி நடந்த விசாரணைகள் பற்றி எந்தவித முன்னறிவும் இல்லாத பார்வையாளர்களின் அல்லது கட்சிக்கு வெளியில் இருப்போரின் அபிப்பிராயம் கட்சிக்குத் தேவையற்றது. விசாரணைகளை நேர்மையாக நடாத்தி கட்சியின் ஒழுங்குக் கோவைக்கு அல்லது யாப்புக்கு அமைய தெளிவான நடவடிக்கை எடுத்த பிறகே கட்சியின் அறிக்கை சமூக வலைத்தளங்களுக்கு வந்திருக்கவேண்டும். விசாரணைகள் முடிவடையாத ஒரு பகிரங்க அறிவிப்பினால் கட்சிக்கு மறைமுக எதிர்பார்ப்புகள் இருக்கலாம் என்ற சந்தேகமும், முடிவெடுப்பதற்குக் கட்சி தடுமாறுகிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. அத்துடன், இது குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கும், சமூக வலைத்தளங்களில் தனக்கு ஆதரவு அணியைத் திரட்டுவதற்கும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தித் தந்துள்ளது. 

என் அவதானங்களிலிருந்து ஒரேயொரு விடயத்தை அவசியம் குறிப்பிட வேண்டும் என்று கருதுகிறேன். 

 பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் நீங்கள் எந்தவொரு இயக்கத்திலும், கட்சியிலும் இணைந்து கொள்வதற்கு முன்பு பாலினம், பால்நிலை சமத்துவம், பாலின அடையாளம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். இடதுசாரி செற்பாட்டுப் பொறிமுறைகள் கொண்டமைந்த கட்சிக்குள்ளேயே பெண்களுக்குப் பாலியல் துஷ்பிரயோகங்களும், அவதூறுகளும், கௌரவத்திற்கு இழுக்கான நிலைகளும் உருவாகுவதற்கு முதன்மைக் காரணங்களே பாலினம், பாலின அடையாளம், பாலின சமத்துவம் பற்றிய அறிவூட்டல் இல்லாமையே. இது ஆச்சரியப்படுவதற்குரியதோ, அதிர்ச்சி கொள்வதற்குரியதோ இல்லை. இந்த அறிக்கைகளும் செய்திகளும் என்னைத் தனிப்பட்டளவில் எந்த வகையிலும் ஏமாற்றமோ அதிர்ச்சியோ கொள்ளச் செய்யவில்லை. ஆனால், அதனைத் தொடர்ந்து நடைபெறும் உரையாடல்கள் உண்மையில் வேடிக்கையானவை. போலியான அதிர்ச்சி வெளிப்பாடுகளும், கட்சியைத் தூய்மைப்படுத்துவதாகக் கருதி தங்களின் தனிப்பட்ட தூய்மைப்பாட்டை நிரூபிக்கச் சில தனிநபர்களும் அமைப்புகளும் எடுக்கும் எத்தனங்களும் விநோதம். இவற்றையெல்லாம் கண்டு நீங்கள் சோர்வடையாமலும், ஏமாற்றமும் விரக்தியும் அடையாமலும் இருப்பதற்கு பாலினம், பாலின அடையாளம், பாலின சமத்துவம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். எந்தவொரு கட்சியும் இவற்றை உங்களுக்குச் சொல்லித் தராது.

1.தொடர்பான கட்டுரை Me Too ஈழப்பெண்டிர் புரட்சி

2. சர்மிளா சையித்/ஹரி ராசலெட்சுமி கபட நாடகம்

3. யாழ்ப்பாணக் காமக்குற்றவாளி இளங்குமரன்

4. பெண் பொறுக்கி: சைக்கோ: உமா வரதராஜன்

Comments

Popular posts from this blog

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

யார் இந்த யதார்த்தன்

யாழ்ப்பாணம் தோற்ற கதை