சர்மிளா சையித்/ ஹரி ராசலெட்சுமி கபட நாடகம்

 மயூரன் என்கிற ஒரு குற்றவாளியை பாதுகாக்க லாபியிஸ்டுகளாக தொழிற்படும் சர்மிளா சையித், ஹரி ராசலெட்சுமி முதலியோர் அம்பலமாகிறார்கள்


நட்சத்திரன் செவ்விந்தியன்

15 வருடங்களுக்கு மேலாக மு.மயூரன் ஒரு இடதுசாரிக்கட்சியில் தனக்கிருக்கிற பதவியையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி பல  பெண்களை மூளைச்சலவை செய்து(Indoctrination),  Grooming  செய்து  தன்னுடைய பாலுறவாளர்களாக மாற்றி அதிகாரத் துர்ப்பிரயோகம், பாலியல் துர்ப்பிரயோகம் செய்திருக்கிறார்.  இவ்வாண்டு கட்சி சம்பந்தப்பட்ட பெண்கள்  உசாராகி மயூரனுக்கெதிராக கட்சி நடவடிக்கை எடுக்க மயூரனால் துர்ப்பிரயோகம் செய்யப்பட்ட, மயூரனுடன் உறவிலிருந்த பெண்களின் வாக்கு மூலங்களை சாட்சியமாக சேகரிக்க தொடங்கினர்.  பத்திற்கு மேற்பட்ட பெண்கள் பூரண சம்மதத்தோடு சாட்சியங்களை வழங்கினார்கள். மிகச்சிலர் வாக்குமூலம் வழங்கவில்லை. வழங்காமலிருப்பது அவர்களது சனநாயக உரிமை. சில பெண்களுக்கு இந்த விசாரணை தமது தற்கால உறவுகளை பாதிக்கக்கூடாது , தமது Privacy பற்றிய கரிசனம் இருந்திருக்கும். அது நியாயமானது.  

இந்த விசாரணை ஒரு  நீதிமன்ற முறையான சட்ட நடவடிக்கை அல்ல.  கரிசனம் கொண்ட கட்சியோடு சம்பந்தப்பட்ட பெண்கள் தான் இங்கு கட்சிதான் இது சம்பந்தமான நீதி வழங்கலாம் என்பதால் விசாரணையாளர்களாக "பொலீசாராக" சாட்சிகளை தெரிவுசெய்து விசாரணையை முன்னெடுத்தார்கள். 

இப்போது இந்த நியாயமான விசாரணை நடவடிக்கையை குற்றஞ்சாட்டி குற்றவாளியான மயூரனை பாதுகாப்பதை தமது Agenda ஆகக்கொண்ட சர்மிளா சையித், ஹரி ராசலெட்சுமி முதலியவர்கள்தாம்  சாட்சியம் அளிக்க மறுத்த சில பெண்களின் விபரங்களை சமூக வலைத்தளங்களூடாக பகிரங்கப்படுத்துகிறார்கள். இது மிகப்பெரிய முரண் நகை. மயூரனைப் பாதுகாக்க சையித், ராசலெட்சுமி முதலியவர்கள் கையிலெடுத்த பாதுகாப்பு வாதம்  "விசாரணையில், நீதி நடைமுறையில் பாதிக்கப்பட்ட பெண்களின் Privacy(தனிப்பட்ட தகவல்கள்) பொதுவெளிக்கு சமூக வலைத்தளங்களுக்கு வருகிறது.  ஆகவே விசாரணை பிழை. கட்சி பிழை" என்பதுதான். 

விசாரணைக்குழுவோ கட்சியோ சாட்சி வழங்கியவர்களதோ, வழங்க மறுத்தவர்களதோ விபரங்களை வெளியிடவில்லை. குறித்த நபர்கள் பற்றிய விபரங்களை சங்கேதமாகவோ, மறுதலையாகவோ வெளியில் விட்டவர்கள் (தமது முகநால் நடவடிக்கைகளால்)  சர்மிளா சையிட் ஹரி ராசலெட்சுமி முதலியவர்கள்தாம். 

விசாரணை நடைமுறையின்போது பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொள்ளவேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க சம்மதமா என்று கேட்கவேண்டும். அப்போது ஒரு சாட்சி தனது முகநூல் பதிவில்  தான் அப்போது உறவிலிருக்கும் குறித்த மயூரனுக்காக மயூரனை பாதுகாக்க தற்கொலை செய்துகொள்ளுவேன் என்று முகநூல் பதிவிட்டால் என்ன செய்யலாம்? பொலிஸ் இந்த விசாரணையை முன்னெடுத்தால் அவர்மீது குற்ற  வழக்கு தாக்கல் செய்யலாம். கட்சி விசாரணைக்குழு பெண்கள் விசாரணை செய்தால் என்ன செய்யலாம். இதனை ஒரு பொலிஸ்/நீதிமன்ற விசாரணையாக்கி குறித்த பெண்ணை குற்றவாளி ஆக்காமல் முடிந்தவரை பிரச்சனையை சுமூகமாகத் தீர்க்கத்தானே முயலும்? சாட்சியங்களைச் சேகரிக்கும்   ஒரு விசாரணைக்குழுவை மிரட்டி விசாரணையை முடக்க தான் உறவிலிருக்கும் பெண்ணை தூண்டி அவர் மூலமாக ஒரு பகிரங்க தற்கொலை மிரட்டலை விடத்தூண்டியவர் மயூரன்தான். குறித்த பெண் பகிரங்கமான தற்கொலை மிரட்டலை விட்டதால்தான் அந்த பகிரங்க மிரட்டலால் ஆடிப்போன விசாரணைக்குழு அவரை தற்கொலைசெய்யவேண்டாம் என்று அறிவுறுத்தி விசாரணையைப்பற்றிய ஒரு பகிரங்க பதிவை குறித்த பெண்ணுக்கு எழுதினார்கள். பின்னர் குறித்த பெண் தனது பகிரங்க தற்கொலை மிரட்டல் அறிவிப்பை நீக்கியதும் விசாரணைக்குழுவும் தனது பகிரங்க கடிதத்தை அகற்றியது. குறித்த பெண் விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் விடுவது அவரது சனநாயக உரிமை. மறுதலையாக விசாரணைக்குழுவுக்கு தற்கொலை மிரட்டல் விடுவது பாரதூரமான குற்றம். 

குற்றவாளியான மயூரனைக்காப்பாற்ற Disinformation உத்திகளை பயன்படுத்தி முகநூலில் கபடநாடகங்கள் ஆடும் சையித் விசாரணைக் குழுதான் குறித்த பெண்ணை தற்கொலைக்கு முயலத்தூண்டியது  என்று அபாண்டமாகக் குற்றஞ்சாட்டுகிறார். 


குறித்த பெண் உண்மையில் தற்கொலைக்கு முயலவில்லை. விசாரணைக்குழுவை மிரட்ட பகிரங்க தற்கொலை மிரட்டலை முதலில் விடுத்தது குறித்த பெண்தான். இந்த பாரதூரமான தற்கொலை மிரட்டல் குற்றத்தை செய்தவருக்காக பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் நீதி கிடைக்காமல் விசாரணையே பிழை என்று குற்றஞ்சாட்டி மயூரன் என்கிற குற்றவாளியைப்பாதுகாப்பதுதான் So Called பெண்ணியல்வாதியான சையித்தினதும் LGBT சமூக உரிமைகளுக்காகப்போராடுகிறவர் என்று படங்காட்டும் ஹரி ராசலெட்சுமியினதும் நோக்கம். 

மயூரனைப்பாதுகாக்க ஒரு Agenda உடன் இயங்குபவர்கள் வாதங்களில் தருக்கம் தரவுகள் அடிப்படையிலான நியாய வாதம் இருக்காது. பிரச்சனையை சமூக வலைத்தளங்களில் திசை திருப்பும்  Disinformation உத்தி  இருக்கும். அவைதான் சையித், ராசலெட்சுமி பதிவுகளிலிருக்கிறது. 

 இப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய  தகவல்கள் கிடைப்பது சர்மிளா சையித், ஹரி ராசலெட்சுமி முதலியவர்களின் முகநூல் பதிவுகள், அதற்கான பின்னூட்டங்கள் ஊடாகத்தான். ஆக "விக்டிம்களை" தமது அஜெண்டாவுக்கேற்ப  அம்பலப்படுத்துவதை செய்துகொண்டிருப்பவர்கள் சையித், ராசலெட்சுமி போன்றவர்கள்தாம். 

                        Hari the Dilettante                                  A person who cultivates an area of     interest, such as the arts, without real     COMMITMENT or knowledge

ஹரி ராசலெட்சுமி ஆண் ஒருபாலியலாளராக(Gay) இருந்து பின்னாளில் பெண்ணாக மாறியவர்.  சட்டப்படி அவர் LGBT சமூகத்தை சேர்ந்தவர். தனது சமூகத்துக்காக குரல்கொடுப்பவர். ஒருவர் பாதிக்கப்பட்ட LGBT சமூகத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் என்பதற்காக அவர் எப்போதும்  அறவானாக நீதியின் பக்கம் நிற்பவர் என்று கருதவேண்டியதில்லை. ராசலெட்சுமி ஆங்கிலத்தில் புலமை மிக்கவர். Heterosexual சமூகங்களில் இருப்பவர்களைப் போல  LGBT சமூகத்திலும் தனிப்பட்ட சுயநலன்களுக்காக இயங்குபவர்கள், கிரிமினல்கள், மோசடிக்காரர்கள் உண்டு. ராசலெட்சுமி தன் ஆங்கிலப் புலமையால் ஒரு பிரச்சனையில் தருக்கம் தரவுகள் அடிப்படையில் நியாயமான வாதம் செய்யாது நீதியின் பக்கம் நில்லாது தனது தனிப்பட்ட நலன்களுக்காக, காழ்ப்பு, முன்விரோதம்களின் அடிப்படையில் நீதிக்கு எதிரான பக்கம் நின்று வாதாடக்கூடியவர். தனது Benefactors, எஜமான்கள், நண்பர்களுக்காக உண்மையை அடகு வைக்கக்கூடியவர்.  குழு மனப்பான்மையோடு(Tribalistic)  தனது நண்பர்களைத் தூண்டி சமூக வலைத்தளங்களில் Lobbying, Disinformation திட்டங்களை செய்யக்கூடியவர்.  கட்சி மயூரனை தற்காலிகமாக விலக்குகிறது என்று அறிவித்த நாளிலிருந்து ராசலெட்சுமி மயூரன் பக்கமே நின்றிருக்கிறார். அன்றைய தினம் மயூரன் போட்ட முகநூல் பதிவுக்கு லைக் போட்டவர் ராசலெட்சுமி. 

இரு தினங்களுக்கு முன் ராசலெட்சுமி மயூரனை அம்பலப்படுத்துவதற்காக பாதிக்கப்பட்ட பெண்களின் சாட்சிய வாக்குமூலங்களைப்பெற்ற விசாரணைக்குழுவின் பொறிமுறையைக் கண்டித்து மயூரனை மறைமுகமாகப் பாதுகாக்கும் பதிவு போட்டிருந்தார்.  அப்பதிவை ஒரே நாளில் தனது Benefactors முதலியவர்களின் அழுத்தத்தால்  அகற்றியும் விட்டார். 

தனது குறித்த முகநூல் பதிவின் முதல் பந்தியில் ராசலெட்சுமி பின்வருமாறு எழுதியிருக்கிறார். 

"தன்னுடைய இயங்கு தளங்களைப் பகுத்தறிந்து கொள்ள முடியாத, விக்டிம்களை கண்டபாட்டுக்கு அம்பலப்படுத்துகிற பெண்ணியம் – என்னைப்பொறுத்தவரை அபாயகரமான பெண்ணியம். அதேபோலவே பெறப்படவேமுடியாத நீதியை (அது சமூகநீதியாக இருந்தாலுமே கூட) பெற்றுத்தரமுடியும் என்று விக்டிம்களை ஏய்த்து, இந்தக் கேஸை வைத்து let’s make an example out of this, let’s kick start a Sri Lankan #MeToo, let’s use this opportunity to clean out leftist spaces போன்ற அஜெண்டாக்களைத் திணிப்பது (அவற்றின் தேவை எவ்வளவுதான் இருந்தாலுமே கூட) விக்டிம் சொலிடாரிட்டி அல்ல. "                                                                        - ஹரி ராசலெட்சுமி 

இது ஹரியின் திட்டமிட்ட Lobbying/Disinformation என்பதை விளக்கும் நமது  பதில்.👇

" மயூரன் என்கிற குற்றஞ்சாட்டப்பட்டவர் மீதான நடவடிக்கை எடுக்க இயங்கிய பெண்கள் "விக்டிம்களை"(பாதிக்கப்பட்டவர்கள்) அம்பலப்படுத்தவில்லை. அவர்கள் கட்சிக்கு சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையை சட்ட நீதி நடமுறைகளுக்கேற்ப பகிரங்கப்படுத்தாமல் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களே யாரென்று தெரியாதபோது அவர்கள் "இயங்குதளங்கள் தெரியாத விக்டிம்கள்" என்ற "தகவலை" ஹரி ராசலெட்சுமி எங்கிருந்து பெற்றார்? ராசலெட்சுமி தன்னுடைய தனிப்பட்ட உளவு/நட்பு வலையமைவு/பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய அவரது முன்னறிந்த புலனாய்வு வளங்கள் மூலம் பெற்றிருந்தால் அது ராசலெட்சுமியினுடைய புலனாய்வுத்தகவல்/ஊகம். பகிரங்கமாகாத அத்தகவல்கள் வெளியே வராதபோது மேற்கூறியவாறு ராசலெட்சுமி எழுதுவது அபாண்டமான பொய். "விக்டிம்கள் ஏய்க்கப்படுகிறார்கள்" என்பதும் ராசலெட்சுமியின் ஆதாரமற்ற அவரது வசதியான திட்டமிட்ட பொய். "

பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டப்பட்ட ஒரு Rapist தனது தற்பாதுகாப்பு வாதமாக எடுப்பது " குறித்த பெண்ணின் சமமதத்தோடேயே(Consensual Sex) தான் உறவு கொண்டதாக வாதிடுவது. இப்போது குற்றவாளியான மயூரன் தனது தற்பாதுகாப்பு வாதமாக எடுத்துக்கொண்டிருப்பது தான் உறவு கொண்ட எல்லாப் பெண்களுடனும் Open Relationship ல் இருந்தேன் என்பதுதான். இந்த மயூரனின் பலவீனமான தற்பாதுகாப்பு வாதம் நமக்கு  தெரியவந்தது மயூரனின் தலமைச்சீடனும் மயூரனைப்பாதுகாக்க விரும்புகிறவருமான சத்தியதேவன் சர்குணம் இடமிருந்துதான். சத்தியதேவன்  மயூரனின் தலமைச்சீடன் என்று போட்ட  செவ்விந்தியனின்  ஒரு முகநூல் பதிவை கண்டித்த சத்தியதேவன் பல உண்மைகளை செவ்விந்தியனிடம்  உளறினார். அதில் முக்கியமான ஒன்று         " மயூரன் தான் உறவு கொண்ட பெண்கள் எல்லோருடனும் Open Relationship இல் தான் இருந்தார்"  என்பது. அப்போதுதான் இதுதான் மயூரனின் தற்பாதுகாப்பு வாதம் என்பது நமக்கு புரிந்தது. 

                       "Open Relationship"                                           மயூரனின் தலமைச்சீடன்               சத்தியதேவன் தன் தேவன் மயூரனுடன்என்ன அதிசயம் இப்போது மயூரனுக்காக Lobby செய்கிற சர்மிளா சையிட்டும் இதே "Open Relationship"  தற்பாதுகாப்பு வாதத்தை பயன்படுத்துகிறார்.  ஆக சையித் மயூரனின் ஊதுகுழல் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்? 

            சையித் முகநூல் ஸ்கிறீன்சொட் 

மயூரனால் தனது பாலுறவாளர்களாக பயன்படுத்தப்பட்ட பெண்கள் அனைவரும் மயூரனுடன் ஒரு Open Relationship ஒப்பத்தந்தில் உடன்பட்டு கூடினார்கள் என்று இதை வாசிக்கிற உங்களில் எவராவது உண்மையில்  நம்புகிறீர்களா?  எல்லா Heterosexual ஆண்பெண் உறவுகளிலும் Sex/Gender சமத்துவமின்மை உலகளாவிய ரீதியில் இருக்கிறது. ஆண் காமம் விளைவுகளை அறியாதது. விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியதில்லை. ஆண் காமம் "சேற்றில் பட்டதை ஆற்றில் கழுவிவிட்டு போகும்" என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு.  பெண்ணால் அப்படிச் செய்யமுடியாது. காமத்தின் தகிப்பில் முறையாக கொண்டம் போடாமல் செய்தால் உயிரியல் விளைவால் கர்ப்பம் தரிக்கும் ஆபத்து பெண்ணுக்குத்தான் உண்டு. அதைவிட ஆணாதிக்க சமூகங்களில் வரும் "வேசை " முதலிய வசவுகளுக்கும் அவள்தான் "பொறுப்பு கூறவேண்டும்"   ஆண்  உணர்வுகள் இல்லாமல் ஓரிரவில் அறிந்த பெண்ணோடு காதல்/Emotion இல்லாமல் பாலுறவை அனுபவிக்கக்கூடியவன். பெண்களால் அப்படி முடியாது. அதனால்தான் உலகின் பலமான நாடான அமெரிக்காவின் தலைநகரில் கூட பெண்கள் வாடிக்கையாளர்களாகப் போகக்கூடிய ஆண் பாலியல் விடுதிகள்  மிக அரிது. ஆனால் உங்களுக்கு தெரியும் உலகம் பூராகவும் ஆண் வாடிக்கையாளராகப்போகக்கூடிய பெண் பாலியல் விடுதிகள் உண்டு. 

                                      ஓப்பிண் 


ஒப்பீட்டடிப்படையில் பெண் பாலியல் சுதந்திரம் அதிகமாக இருக்கிற அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் Open Relationshipல் இருக்கிற பெண்களின் சதவீதம் 5ஐ விட குறைவுதான். அதெப்படி மயூரன் உறவுகொண்ட ஈழப் பெண்கள் எல்லோரும் மயூரனுடன் ஒரு Open Relationshipல் இருந்திருக்க முடியும்.? மயூரனால் பாதிக்கப்பட்ட குறித்த விசாரணைக்குழுவுக்கு சாட்சிய வாக்குமூலம் சொன்ன பெண்கள் யாராவது மயூரனோடு தாம் Open Relationship ஒப்பந்தம் செய்து இருந்தார்கள் என்று சொல்லியிருக்கிறார்களா? ஆக மயூரனோடு உறவிலிருந்து பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரையும் அபாண்டமாக பழி சுமத்துகிற சர்மிளா சையித்தின் கபடம் மகா அயோக்கியத்தனமன்றி வேறுதுவுமல்ல.  

சையித் மயூரன் பிரச்சனை சம்பந்தமாக முதன் முதலில் போட்ட முகநூல் பதிவில் அவர் குற்றவாளியான மயூரனை பாதுகாக்க Lobbying செய்கிறார் என்று நாம் இத்தளத்தில் எழுதிய கட்டுரைக்கு  முகநூலில் பதிலளித்த சையித் பின் அதனை விலக்கிவிட்டார். அதற்கு பதிலளிக்க அவரால் முடியவில்லை என்பதே உண்மை.  

பெண்விடுதலைப் போராட்டங்கள் பெண்களுக்கான ஏகபோகம்(Monopoly) அல்ல. நியாயமான ஆண்களின் ஒத்துழைப்பு இன்றி பெண் விடுதலை சாத்தியமில்லை.  நியாயமான ஆதிக்க சாதியினரின் ஒத்துழைப்பு இன்றி எப்படி சாதி அடக்குமுறையை ஒழிக்கமுடியாதோ, நியாயமான சிங்களவரின் ஒத்துழைப்பின்றி எப்படி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை ஒழிக்க முடியாதோ அதுபோன்றதுதான் இதுவும்.  கட்சி உறுப்பினர்களான கட்சியோடு சம்பந்தப்பட்ட பல ஆண்களின் ஒத்துழைப்பால் தான் ஆண்கள் அதிகமாகவுள்ள குறித்த கட்சி மயூரனுக்கெதிரான துணிகரமான நடவடிக்கையை எடுத்துள்ளது. .  

இப்போது தனது வேடம் அம்பலமாகிறபோது சையித் வேறு வழியின்றி படிப்படியாக மாறி தன் முகநூல் பதிவுகளை போடுகிறார்.  இப்பிரச்சனை சம்பந்தமாக அவர் பதிந்த அனைத்து முகநூல் பதிவுகளையும் படித்தால் அவரது மாறும் வேடங்களை புரிந்து கொள்ளலாம். கடைசியாக அவர் நேற்றுப் போட்ட பதிவில் இந்த மகத்தான ஈழப்பெண்டிர் புரட்சியை  கடத்தி அதற்கு அவர் உரிமை கோரும் எத்தனம் தெரிகிறது. ஆண்களிடமிருந்து பெண் விடுதலையைப் பற்றி அவர் அறியவேண்டி இருப்பதுதான் அவரது அறிவு வறுமை. 

     மயூரனோடு "அறம்" படம்பார்த்த நாள்ஆங்கிலத்தில் புலமையான ஹரி ராசலெட்சுமி சில பல ஆங்கில வார்த்தைகளை போட்டு மயூரனுக்காக வக்காலத்து வாங்கியிருந்தார். ராசலெட்சுமி நீங்கள் ஒரு முக்கியமான விடயத்தை கிரகிக்கவேண்டும். உங்களது LGBT சமூகங்களுக்கும் Heterosexual சமூகங்களுக்கும் பால் சமத்துவமின்மை வேறுபாடுகளை நீங்கள் கிரகிக்கவேண்டும். Debauchery, Lechery ஆகிய சொற்கள் Heterosexual சமூகங்களில் Taboo ஆக இருக்கிற சொற்கள். குறிப்பாக Heterosexual சமூகப்பெண்களுக்கு இச்சொற்கள் "Politically incorrect" ஆன பதங்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும். 

தொடர்புடைய வேறு கட்டுரைகள்

1. Me Too: ஈழப்பெண்டிர் புரட்சி

2.  சர்மாளா சையித்: Me Too எதிர்ப்புரட்சிக்காரி

3. பெண் பொறுக்கி: சைக்கோ: உமா வரதராஜன்

Comments

Popular posts from this blog

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

 யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களின்   கல்வி அறிவு மோசடிகள்

அவந்திகா: ஓர் அவல மனைவியின் வாக்குமூலம்