பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் வாக்குமூலம்

 

 "உன்னைக் கட்டுவேன்" ஆதிகால     மந்திரமோதி மாணவிகளை மடக்கும்     முனைவர் சுதர்சன் செல்லத்துரை


Jaffnafashion.com பிரசுரித்த முன்னைய கட்டுரையைப் படித்து சுதர்சன் செல்லத்துரையால் பாதிக்கப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவி ஒருவர்  நமக்கு வழங்கிய வாக்குமூலம் பின்வருவது. பாதிக்கப்பட்ட மாணவியின் வேண்டுகோளுக்கேற்ப அவரின் பெயரை நாம் வெளியிடவில்லை. ஒரு Serial Killer போல, சீரியல் காமக்குற்றவாளி ஆக தொடர்ச்சியாக சுதர்சன் பல  பேராதனைப் பல்கலைக்கழக மாணவிகளை தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி வேட்டையாட முயன்றது,  வேட்டையாடியது  இப்போது நமது நமது புலனாய்வுப் பிரிவுக்கு தொடர்ச்சியாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளாகக் கிடைத்திருக்கிறது. தொடர்ந்தும் கிடைத்து வருகிறது. தொடர்ந்தும் பத்திரிகா தர்மத்திற்கேற்ப எமக்குக்கிடைத்த  எம்மால் முடிந்த அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்தவுள்ளோம். 

"உன்னைத் திருமணஞ்செய்வேன்" என்கிற  ஒரு பழங்கால "ரெக்னிக்கே" இவர் மாணவிகளை விழுந்த பயன்படுத்தும் தூண்டில். இதில் ஒரு மாணவி விழுந்தால் உறவு கொண்டுவிட்டு 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படக் கதாநாயகன் போல் தானே ஒரு மொட்டைக்கடிதம் தமிழ்த்துறைக்கு எழுதுவார். மொட்டைக் கடிதம் விசாரணைக்கு வருகிறபோது "அப்படி உறவு எதுவுமிருந்ததில்லை" என்று சாதிப்பார். வலையில் விழுந்த பெண் அவமானத்தாலும் துரோகத்தாலும் தானே விலகிவிடுவாள். இந்த வலையில் விழாத மாணவிகளை தன் அதிகாரத்தை பயன்படுத்தி " உனது வரவு காணாது. பரீட்சை எழுத விடமாட்டேன்" " உன்னை பெயில் ஆக்குவேன்" என்று மிரட்டுவார்.

பின்வரும் வாக்குமூலம் இவரின் வலையில் விழாத  ஒரு வீரப் பெண் மாணவியின் வாக்குமூலம். நமது முன்னைய கட்டுரையில் குறிப்பிட்டப்பட்டுள்ள இவர்மீது புகார் கொடுத்துள்ள இரண்டு மாணவிகளும் கூட இப்பெண்ணைப் போன்ற துணிந்த மாணவிகளே. இவரால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம் என்பது(பலர் உண்மையை வெளியில் சொல்ல முன்வராவிட்டாலும்) நமது புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த செய்திகளில் இருந்து தெரியவருகிறது. Jaffnafashion.com தொடர்ச்சியாக யாழ் பல்கலைக்கழகத்தில் அக்கடமெக்கிகளால்  நடந்த, நடக்கும் பாலியல் குற்றங்களை அம்பலப்படுத்தி வந்தாலும் அங்கு பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாமே எமக்கு தகவல் தர வந்ததில்லை. ஆனால் இங்கோ பல பாதிக்கப்பட்ட  மாணவிகள் தாமே எம்மைத் தொடர்பு கொண்டு தாம் பாதிக்கப்பட்ட விபரங்களைத் தந்துகொண்டிருக்கிறார்கள். நமக்கு தகவல் தருகிற அனைத்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் அடையாளங்களையும் பத்திரிகா தர்மப்படி நாம் காப்போம்.      

Attention.    1. எம்.ஏ.நுஃமான்.                                              2. துரை மனோகரன்.                                      3. அர்ஜூனா பராக்கிரம                                        

    -பிரதம ஆசிரியர்                 

சுதர்ஷன் சேரின் அறிமுகம் எனக்கு பல்கலை முதலாம் ஆண்டில் தான் கிடைத்தது. நாங்கள் முதலாம் ஆண்டில் கல்வி கற்க வந்த சில மாதங்களிலேயே சுதர்ஷன் சேர் இந்தியாவிற்கு படிக்கச் சென்றுவிட்டார். பிறகு நாங்கள் மூன்றாம் ஆண்டு கல்விகற்றுக்கொண்டிருந்தபோது தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுக்கல்வித்துறை ஊடாக எங்களுக்கு இந்தியா செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

அங்குதான் மீண்டும் நான் சுதர்சன் சேரைப் பார்த்தேன். பல்கலையில் அவர் எனக்கு அறிமுகமானதே ஒரு ஸ்ட்ரிக்டான விரிவுரையாளராகத்தான். எனவே பேசக் கொஞ்சம் பயம் எனக்கு.

இந்தியா சென்றபோது எல்லோருடைய தொலைபேசி எண்களும் எல்லோரும் பகிர்ந்துகொண்டோம். அதில் தான் அவருக்கு என் நம்பர் கிடைத்தது. ஆரம்பத்தில் நல்லபடியாகத்தான் உரையாடினார். படிப்பு சம்பந்தமாகப் பேசுவார். என்னிடம் பேசுவது போல் வேறு யாரிடமும் பேசினாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என்னோடு பேச ஆரம்பிக்கும்போது நன்றாகத்தான் பேசினார். ஒரு விரிவுரையாளர் என்னோடு பேசுகிறாரே என்று எனக்கும் சந்தோசமாக இருந்தது.

படிப்பு தொடர்பாக, புத்தகங்கள் தொடர்பாக பேச ஆரம்பித்தவர் பிறகு எனது கவிதை ஒன்றை செப்பனிட்டுத்தந்தார். தொடர்ச்சியாகப் பேசுகின்றபோது விரக்தி நிலையில் பேசுவது போல் பேசினார்.

என்ன என்று கேட்டதற்கு தனக்கு திருமணமாகவில்லை, வீட்டில் பார்த்த பெண் தன் சகோதரியின் திருமணம் பிந்தியதால் வேறு ஒருவருடன் திருமணம் முடித்து விட்டு சென்றுவிட்டார்.காதல் தோல்வி என்று சொன்னார். என்னோடு பேசும்போது தான் ஆறுதலாக இருப்பதாகவும் தொடர்ந்து பேசுமாறும் கேட்டுக்கொண்டார். பிறகு சில குடும்ப விடயங்கள் சொல்வார். போகப்போக பேச்சு கொஞ்சம் மாறியது.

நானும் என் வாழ்வில் நடந்த சில விடயங்கள் அதாவது என் காதல் தோல்வி பற்றி சொல்லியிருக்கிறேன். அவர் அவரது குடும்ப விடயமெல்லாம் கூறுகிறாரே என்ற நம்பிக்கையில் தான் நானும் எனது கதையைச் சொன்னேன்.

ஆனால், பிறகு அவர் என்னை மிகவும் பிடிக்கும் என்றும் என்னை விரும்புவதாகவும், திருமணம் செய்துகொள்கிறாயா என்றும் கேட்டார். தனது மதத்தில்/ சாதியில் இஸ்லாமியப்பெண்ணை திருமணம் முடிக்க விடமாட்டார்கள் ஆனாலும், உனக்காக நான் எந்த ரிஸ்கும் எடுப்பேன் என்றும் கூறினார். வீட்டுக்குப் பேச வரவா என்றெல்லாம் கேட்டார்.

எனக்குப் பயம் வந்துவிட்டது. எங்கே வீட்டிற்கெல்லாம் வந்தால் என்னைத் தப்பாக நினைப்பார்களே என்று இல்லை சேர் எனக்கு அப்படி எதுவும் நடக்கும் என்று தோன்றவில்லை. இத்தோடு எந்தக் கதையை நிறுத்திவிடுவோம் என்று சொன்னேன்.

அதன் பிறகு அவரோடு நான் பேசவில்லை. அவர் என்னைத் தொடர்புகொள்ள முயற்சித்தார். எதற்கு வீண்வம்பு என்று நான் பேசாமல் விட்டுவிட்டேன்.

நான் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது தான் அவர் மீண்டும் பேராதனைக்கு வந்தார்.

இறுதியாண்டு நான் படித்துக்கொண்டிருந்த போது அவர் இந்தியாவிலிருந்து வந்திருந்தார். அப்போது அவர் என்னுடன் கோபத்தில் இருந்தார். இறுதியாண்டு எனக்கு எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடியால் விரிவுரைகளுக்குச் சரியாக செல்லமுடியாது இருந்தது.

இறுதி செமெஸ்டர் பரீட்சை நெருங்கியபோது அட்டென்டென்ஸ் போதாமல் இருந்தது. தன்னுடன் ஓரிரவைத் தான் சொன்னபடி கழித்தால் (உங்களுக்குப் புரியும்) பரீட்சை எழுத விடுவதாகச் சொன்னார். மன உளைச்சலில் இருந்த எனக்கு அது மேலும் கஸ்டத்தை ஏற்படுத்தியது. வாயில் என்னென்ன வார்த்தைகள் வந்தது என்று இப்போது நினைவில் இல்லை.. அந்தமாதிரி நன்றாக ஏசிவிட்டு உன்னோடு படுத்துதான் எக்ஸாம் எழுத வேண்டிய தேவை எனக்கில்லை. அடுத்த வருடம் எழுதிக்கொள்கிறேன் என்று வந்துவிட்டேன். ஆனால் எனக்கு அட்மிஷன் வந்திருந்தது. அவர் இதற்கு பொறுப்பில்லை என்பதும் எனக்குப் பிறகு தான் தெரிந்தது.

இந்த சம்பவம் பற்றி நான் எனது சில நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் மட்டுமே பகிரந்துகொண்டேன். அப்போது எனக்கு இருந்த தனிப்பட்ட பிரச்சினை ஒன்று இதனைப் பற்றி மேலும் சிந்திக்க விடாமல் செய்தது.

அதன்பிறகு அவரை நான் காணவும் இல்லை. பேசவும் இல்லை. 2023 முதுகலைமானி படிப்பில் செமெஸ்டர் முடித்துவிட்டேன். அப்போது அவர் அங்கு ஒருங்கிணைப்பாளராக இருந்தார். என்னுடன் நடந்த எந்த சம்பவமும் நடக்காதது போலவே நடந்துகொண்டார். எனக்கு கருக்கலைந்த காரணத்தால் என்னால் தொடர்ச்சியாக மாஸ்டர்ஸ் செய்ய முடியவில்லை. பட்டப்படிப்பை Postpone பண்ணிவிட்டேன்.

தொடர்பான கட்டுரைகள்

1. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஒரு காமக்குற்றவாளி

2. யாழ்.பல்கலைக்கழக காமக் குற்றவாளி இளங்குமரன்

3. மலையகச் சிறுமியை 40 தடவை றேப் பண்ணிய யாழ்ப்பாணப் பேராசிரியர்


Comments

Popular posts from this blog

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்