திலீபன் : பிரபாகரனின் நரபலி
By நட்சத்திரன் செவ்விந்தியன்
செப்டம்பர் 15ல் நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் சிலை
அவர் இறந்த நாளுக்கு அடுத்த நாளான செப்டம்பர் 27ல் ஸ்ரீலங்கா பொலீசாரால் அகற்றப்பட்டது.
அதாகப்பட்டது திலீபன் உண்ணாவிரதமிருந்த பதினொரு நாட்களும் அச்சிலையை
வைத்திருக்க JVP அரசாங்கம் அனுமதித்துள்ளது. ஆட்சியிலுள்ள இன்றைய JVP அரசாங்க தலைவர்கள்
எவருக்குமே இலங்கையில் சிலை இல்லை. அப்படியிருக்க திலீபனின் சிலையை
11 நாட்கள் அனுமதித்த இந்த அரசாங்கத்தை அதற்கான நன்றியின்றி இன்று புலித்தேசியவாதிகள்
சாடுகிறார்கள்.
புலிகள்
இலங்கையில் இன்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பு.
அவ்வமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு சிலை வைப்பது சட்டவிரோதமானது.
இதில் புலித்தேசியவாதிகள் திலீபன் புலிகளில் விதிவிலக்காக இருந்தார்.
அகிம்சை வழியில் போராடி இறந்தார். அதனால் அவர்
விதிவிலக்கு என்கிற தந்திரமான கதையாடலை(Narrative) வைத்து அவருக்கு
விதிவிலக்கு கேட்கிறார்கள். இந்த மாயதந்திரக் கதையாடலை ஆங்கிலத்தில்
எழுதிய சந்தர்ப்பவாத சனரஞ்சக தமிழ்ப்பத்திரிகையாளரான DBS. ஜெயராஜும்
பரப்பினார். உண்மை வரலாறு இடியாப்பச் சிக்கலானது.
உண்மையில் 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தை
அடுத்து வந்த சிக்கலான வரலாறுகளை மிகத்தெளிவாகப் படித்தாலே அறியலாம்.
1987 இலங்கை
இந்திய ஒப்பந்தப்படி வடக்கு கிழக்கு தற்காலிகமான இணைந்த மாகாணமாக இருக்கும். 1987 டிசம்பர் 31 க்கு முதல் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும். பிரபாகரன்
உட்பட்ட அனைத்து இயக்ககாரர்கள் போராட்டக்காலத்தில் செய்த வன்முறைகள், கொலைகளுக்கும் பொது மன்னிப்பு. அனைத்து இயக்கங்களும்
இயக்க உறுப்பினர்களும் மக்களும் தேர்தலில் எக்கட்சியிலிருந்தும் மாகாணசபைத் தேர்தலில்
போட்டியிடலாம். 1988 டிசம்பர் 31 க்கு முதல்
வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்ந்து இணைந்திருப்பதா இல்லையா என்பதற்கு வடக்கு கிழக்கு
மாகாண மக்கள் வாக்களிக்கும் Referundum தேர்தல் நடத்தப்படும்.
இந்த மகத்தான சர்வதேச விதிகளுக்கமைந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மகா
பாசிஸ்டான பிரபாகரன் ஏற்காததால் அவரால் கொடுக்கப்பட்ட நரபலியே திலீபன்.
1986ல் இருந்தே
பிரபாகரன் ஒரு பாசிஸ்ட். அப்போது அவரது அதிகாரம் யாழ் குடாநாட்டில் மட்டுமே இருந்தது. குடாநாட்டில் 1986 ஏப்ரலில் ரெலோவையும் 1986 டிசம்பரில் EPRLF மற்றும் PLOTE இயக்கத்தையும் அழித்ததோடு அவரது பாசிசம் ஆரம்பமாகியது. அப்போது வெறும் யாழ் குடாநாட்டையே வைத்திருந்த பிரபாகரன் முழுத் தமிழீழமும்
தனக்கே தேர்தல்கள் இன்றி தரப்படவேண்டும் என்று எதிர்பார்த்ததாலேயே மகத்தான இலங்கை இந்திய
ஒப்பந்தத்தை எதிர்த்தார். 1987 கால பிரபாகரனின் புலிகள் இயக்கம்
வெறுமனே ஒரு கரையார் இயக்கம்.அதிலும் குறிப்பாக வல்வெட்டித்துறை
கரையார்களின் இயக்கம்.
ஈழ சுதந்திரத்திற்கு
பிற்பட்ட யாழ் குடாநாட்டில் வெள்ளாளர்கள் ஐம்பது சதவீதம். கரையார்கள். பத்து சதவீதம்.
அந்த இயக்கம்தான்
இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்தபோது யாழ் குடாநாட்டில் ஆதிக்கத்திலிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு நியாயமான
பிரதிநிதித்துவ அடையாளச் சிக்கலிருந்தது.. ஆயுதங்களால் அடைந்த
அடைந்த அதிகாரம் நியாயமான தேர்தல்களில் கிடைக்காது என்பது பிரபாகரனுக்கு மிகத் தெளிவாகத்
தெரியும். இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் பிரபாகரன் அப்போது
சாதி அடிப்படையில்தான் தன் தளபதிகளைத் தெரிவுசெய்தார். கேணல்
கிட்டுவைவிட மூத்தவர் பொன்னம்மான்(1956). வரலாற்று முக்கியத்துவம்
மிக்க 1983 திருநெல்வேலி
தபால்பெட்டிச் சந்தி கண்ணிவெடித் தாக்குதலில் பங்கேற்றவர். ஆதிக்கம்
பெற்ற யாழ் இந்துவின் மைந்தன்.
பண்டிதருக்கு
அடுத்தபடியாக யாழ்ப்பாணத்தின் புலிகள் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டியவர் வெள்ளாளரான பொன்னம்மானே. அனால் பிரபாகரன் நியமித்ததோ
ஜூனியரான கரையார மற்றும் தன் உறவினரான கிட்டுவையே(1960) இதிலிருந்துதான் அனைத்துப் பிரச்சனைகளும்
ஆரம்பித்தன.
கர்னல் கிட்டு
புராதன சாதி/Mafia சண்டைகள் போலவே ஈழப்போராட்டத்தைத்
தொடங்கினார். அக்காலத்தில் அதிக எண்ணிக்கையான
உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம் PLOTE. அதன் தலைவர் வெள்ளாளரான
உமா மகேஸ்வரன். அவ்வியக்கத்தின் உண்மையான ஆயுதப் பலம் என்ன என்பது
கிட்டுவுக் தெரியாது. ஆனால் சாதியப் பலம் தெரியும். கிட்டு முதலில்,அழிக்கத் தெரிவுசெய்த இயக்கம் வல்வெட்டித்துறையில்
கடத்தல் தொழிலுக்கு பங்காளிகளாக இருந்த ரெலொவை. அவ்வியக்கத்தின்
ஆரம்பத் தலைவர்களான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குட்டிமணியும் தங்கத்துரையும் தொழில்ரீதியான
கள்ளக்கடத்தல் காரர்கள். அதன் அடுத்தகட்ட தலைவர்களாக வந்த சிறீசபாரத்தினமும் செல்வம் அடைக்கலநாதனும்
கூட கள்ளக்கடத்தல் காரர்கள்.
பின் 1986 டிசம்பரில் புளட்,
EPRLF இயக்கங்களில் உடைவு வந்தபோது அந்த வசதியைப்பயன்படுத்தி அவ்வியக்க
உறுப்பினர்களைக் கொன்று குடாநாட்டில் அவ்வியக்கங்களைத் தடை செய்தார்கள் புலிகள்.
1987 ஜூலையில்
இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தனது பாசிச அதிகாரத்தை இவ்வொப்பந்தத்தால் தான் இழக்கவேண்டிவரும் என்பதால்
பிரபாகரன் இவ்வொப்பந்தத்தை விரும்பவில்லை. எனினும் நிர்ப்பந்தத்தால்
இதனை ஏற்றுக்கொண்டார்.
பிரபாகரனின்
சுதுமலை உரை
(1987 ல் புலிகள் ஒரு வல்வைக் கரையார இயக்கம் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் தேவை? பிரதித்தலைவர் மாத்தையா, முன்னாள் யாழ் தளபதி கிட்டு, தலைவர், யாழ் தளபதி குமரப்பா)
ஆகஸ்ட் 4, 1987ல் சுதுமலை அம்மன் கோவிலில்
பிரபாகரன் உரையாற்றும் நிகழ்வுக்கு புலிகள் யாழ் குடாநாட்டிலுள்ள அனைத்து ஊர்களிலிருந்து
இலவச பஸ்களில் மக்களை அழைத்துவந்தனர். இந்தப் பொன்னான வாய்ப்பை
புலிகள் ஏற்கவேண்டும் என்பதே மக்கள் விருப்பமாக இருந்தது. அந்த
விழாவுக்கு இந்திய ராணுவத் தளபதிகளும் விருந்தினராக வந்திருந்தனர். இந்தியாவுக்கு மக்கள் மத்தியில் புலிகளுக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதைக்காட்டவே
பெருமளவு மக்களை இலவசபோக்குவரத்து கொடுத்து அழைத்துவந்திருந்தார்கள். ஆனால் மக்களுக்கு புலிகளில் அதிருப்தியும் சந்தேகமும் இருந்தது. ஓராண்டுக்கு முதல் மூன்று சக தமிழ் இயக்க உறுப்பினர்களை புலிகள் வேட்டையாடியிருந்தார்கள்.
இத்தகைய சம்பவங்களால் மக்கள் அதிருப்தி அடைந்திருந்தார்கள். இது பிரபாகரனுக்கு நன்கு தெரியும். பிரபாகரனுக்காக பலத்த
பாதுகாப்பு புலிகளால் வழங்கப்பட்டிருந்தது. கோயில் கோபுர உச்சி,
கட்டட உச்சிக் கூரைகளிலெல்லாம் ஆயுதத்தால் புலிகள் நின்றார்கள்.
அவர்கள் துப்பாக்கிகளில் குண்டுகள் இருந்தன. ஆனால்
மக்களுக்கு முன்னால் நின்ற பல புலிகளின் ஆயுதங்களில் குண்டுகள் இருக்கவில்லை.
இத்தகவலை எனக்குச்சொன்னது அக்காலத்தில் புலிகளின் உறுப்பினராக இருந்த
ஒருவர். புலிகளைவிட பலமடங்கு அதிகளவான மக்கள் அங்கிருந்தார்கள். இதற்கு முதல் பிரபாகரன் இவ்வளவு மக்கள் முன் தோன்றியதில்லை. பிரபாகரனின் உரையால் அதிர்ச்சியடைந்த மக்கள் புலிகளின் ஆயுதங்களைப் பறித்தே
புலிகளைத் தாக்கலாம் என்ற அச்சம் புலிகளிடமிருந்தது. (அப்போது
நமக்கு உதவவந்த இந்திய ராணுவமும் அங்கிருந்தது) அதற்காகவே குண்டுகள்
இல்லாத துப்பாக்கிகளோடும் புலிகள் அங்கிருந்தார்கள்.
பிரபாகரன்
தனது உரையின் பெரும்பகுதியை ஒப்பந்தத்தை காரசாரமாக விமர்சிக்கவே பயன்படுத்தினார். தனக்கு அதிலிருக்கிற அதிருப்தியை
வெளியிட்டார். கடைசியில் தான் வேறு வழியின்றி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாகச்
சொன்னார். அப்போது மக்கள் பலத்த கரகோசம் செய்தார்கள்.
அப்போது பிரபாகரனின் முகம் ஒரு கணம் அதிருப்தியில் வழிந்தது.
அடுத்தநாள்
ஆகஸ்ட் 5 புலிகள்
பலாலியில் உத்தியோகபூர்வமாக ஆயுதங்களை ஒப்படைக்கும் சடங்கு செய்தார்கள். அவர்களிடமிருந்த ஆயுதங்களின் மிகச்சிறிய வீதத்தையே அப்போது ஒப்படைத்தார்கள்.
அதில் பெருமளவு ஆயுதங்கள் வீரியம் குறைந்த பழைய ஆயுதங்கள். பல ஆயுதங்களை அப்போதே மண்ணில் புதைத்து வைக்கத்தொடங்கினார்கள். புதைக்கும் போது பயன்படுத்தும் பொலித்தீன் பிளாஸ்திரிகளுக்கு அக்காலத்தில்
பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது இதனால்தான்.
ஒப்பந்தத்தை
அமுல் படுத்துவதற்கு புலிகள் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. முக்கியமாக முழுமையாக ஆயுதங்களை
ஒப்படைப்பதை இழுத்தடித்து வந்தார்கள். புதிய முட்டுக்கட்டைகளைப்
போட்டார்கள். புதிய நிபந்தனைகளை, வேண்டுகோள்களை
இந்திய அரசிடம் போட்டுக்கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் குடாநாட்டுக்கு
வெளியே இருந்த மாற்று தமிழ் இயக்கங்களை புலிகள் தாக்கத்தொடங்கினார்கள். ஆகஸ்ட் 24 ல் புலிகள் மன்னாரில் ஒரு புளட் உறுப்பினரை
சுட்டுக்கொன்றார்கள்.ஆக ஒப்பந்தத்திற்குப் பிறகும் முதல் வேட்டை
வைத்தது புலிகளே. புளட்டும் இதற்குப் பதிலடி கொடுத்தது.
தனது இதுகாலவரையான
பாசிச ஆட்சியை இழந்துவிடுவேனோ என்கிற அச்சத்தில் பிரபாகரன் கடும் ரென்சனில் இருந்த
காலங்கள் அவை.ஒப்பந்தத்தை
குழப்புவதற்கான வாய்ப்புக்களை உருவாக்க பிரபாகரன் காய் நகர்த்திக்கொண்டிருந்தார்.
இந்தியாவோ தமிழ்மக்களுக்கான சாத்தியமான நியாயமான ஒப்பந்தத்தை அமுல் நடத்த
தன்னால் முடியுமானால் முயன்றுகொண்டிருந்தது. பிரபாகரனோ தன் தனிப்பட்ட
நலன்களுக்காகவே முயன்றுகொண்டிருந்தார். அழிச்சாட்டியம் செய்யும்
புலிகளை வழிக்குக்கொண்டுவர இந்தியா புலிகள் கேட்டதை எல்லாம் கொடுத்தது.
இன்னும்
அதிகமான இந்தியாவிடம் கேட்க புலிகள் கொடுத்த நரபலிதான் திலீபன். இது மிக கனகச்சிதமாக புலிகளால்
அரங்கேற்றப்பட்ட நாடகம். தங்களுக்கு தமிழ் மக்கள் மத்தியில் அதிக
ஆதரவு இருக்கிறது என்பதைக்காட்ட செய்த நாடகம். அதுவும் கரையார்களால்
நடத்தப்படும் இயக்கமான புலிகள் ஒரு வெள்ளாளரான திலீபனைப் நரபலிகொடுக்க முன்வந்தது.
யாழ் குடாநாட்டில் ஐம்பது சதவீதமானவர்கள் வெள்ளாளர்கள். ஒரு வெள்ளாளன் நரபலி கொடுக்கப்பட்டாலே இதை வைத்து மக்களை உசுப்பேத்தலாம் என்று
கனகச்சிதமாக போடப்பட்ட நாடகம்.
செப்டம்பர்
15, 1987 ல் போலியான
ஐந்து அம்சக் கோரிக்கைகளை வைத்து திலீபனை உண்ணாவிரதமிருக்க வைத்தார்கள் புலிகள்.
அதற்கு இரண்டு நாட்களுக்கு முதல் செப்டம்பர் 13 ல் கிழக்கு மாகாணத்தில் மாற்று தமிழ் இயக்கங்களான புளட், EPRLF போராளிகள் 75 பேரைக்கொன்று மிகப்பெரிய மனித வேட்டையாடினார்கள்
புலிகள். அதுவும் புளட் இயக்கத்தின் அரசியல் தலைவரான வாசுதேவாவையும்
இராணுவத் தளபதி கண்ணனையும் கொண்ட புளட் குழுவை வஞ்சகமாக பேச்சுவார்த்தைக்கு புலிகள்
அழைத்துக் கொன்றார்கள். இக்குழுவில் தாரகி சிவராமும் செல்வதாக
இருந்தது. சிவராம் வாசுதேவாவின் சகலன். புலிகளை நம்பாத சிவராம், புலிகளை மிகச்சரியாகவே கணித்த
சிவராம் அக்குழுவில் செல்வதைத் தவிர்த்ததால் தப்பினார். புலிகளின் இப்படுகொலை பற்றி அன்றைய அமெரிக்க Los Angels Times ல் வெளிவந்த செய்தி இது
திலீபனின்
ஐந்து அம்சக்கோரிக்கைகள் பின்வருவது.
1. 1. வடக்கு
மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட
வேண்டும்.
2. 2. Prevention
of Terrorism Act (PTA) மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தடுத்து
வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
3. 3. வடக்கு–கிழக்கு
மாகாணங்களுக்கு இடைக்கால நிர்வாக சபை (Interim
Administrative Council) அமைக்கப்பட வேண்டும்; அதில் LTTE-க்கு முக்கிய இடம் வழங்கப்பட வேண்டும். அந்த நிர்வாக சபையே
வடக்கு–கிழக்கின் புனர்வாழ்வு நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும்.
4. 4. வடக்கு
மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய காவல் நிலையங்களையும் இராணுவ முகாம்களையும்
அமைப்பதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும்; தமிழர் பகுதிகளில் உள்ள பாடசாலைகள்
மற்றும் கல்லூரிகளில் நிலைகொண்டுள்ள இலங்கை பாதுகாப்புப் படையினர் வெளியேற
வேண்டும்.
5. 5. வடக்கு–கிழக்கில்
இலங்கை அரசால் Home Guards-க்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்; அந்த ஆயுதங்களைத்
திரும்பப் பெறும் நடவடிக்கை இந்திய இராணுவத்தின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.
இதில் இருக்கிற
வேடிக்கை,என்ன
வென்றால் இலங்கை இந்திய
ஒப்பந்தப்படி இடைக்கால நிர்வாக சபை ஒன்றுக்கு இடமில்லை. திலீபனின்
மூன்றாவது கோரிக்கை அதனைக் கேட்கிறது. அதாகப்பட்டது சனநாயக வழியில்
இல்லாமல் மிரட்டல் மூலம் ஒரு அநியாயமான கோரிக்கைகையை புலிகள் கேட்கிறார்கள்.
மற்ற அனைத்து கோரிக்கைகளும் ஒப்பந்தத்திலேயே உள்ளது. ஆக புலிகள் தாமதிக்காமல் ஆயுதங்களை ஒப்படைத்து மாற்று இயக்கக்காரர்களை கொல்லாமல்
விட்டிருந்தால் அனைத்தும் சாத்தியமாகி இருக்கும்.
ஆக புலிகள்
திலீபனை நரபலி இட்டது ஒரு இடைக்கால நிர்வாக சபை அமைக்கவும்
அதனை தங்கள் அதிகாரத்தில் வைத்திருக்கவுமே. மற்றது மாற்று இயக்கங்கள்
மீது தாம் செய்த, செய்கிற தாக்குதல்களை மறைக்க, திசை திருப்ப.
இதைவிட முக்கியமானது, திலீபன் உண்ணாவிரதமிருந்த
காலத்தில் பிரபாகரனுக்கும் இந்தியத்தூதுவர் தீக்சித்துக்கும் இடையில் நேரடிப் பேச்சுவார்த்தை
நடந்தது. அநியாயமான கோரிக்கைகள் இவை எனினும் இவற்றை தீக்சித்
ஏற்றுக்கொண்டார். ஆகவே தீக்சித் தனிப்படவந்து உண்ணாவிரத மேடையில்
குளிர்பானம் கொடுத்து திலீபனின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க முன்வந்தார்.
ஆனால் பிரபாகரன்
அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தீக்சித் வருவதை பிரபாகரன் சாட்டும் சொல்லி புறக்கணித்தார். இது பற்றி தீக்சித் தன் Assignment Colombo நூலில் பின்வருமாறு
எழுதுகிறார்.
“இந்த நேரத்தில், நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இருந்த LTTE தலைவர் திலீபனின் உடல்நிலை மோசமடைந்திருந்தது. திலீபன் உண்ணாவிரதம் இருந்த கோயிலுக்கு, அவரைச் சூழ்ந்திருந்த பெரும் மக்கள் கூட்டத்தினிடையே நான் நேரடியாகச் சென்று, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவரைக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று பிரபாகரன் என்னிடம் கூறியிருந்தார். அவர் உண்ணாவிரதத்தை கைவிடுவார் என்பதற்கான உத்தரவாதம் எனக்குக் கிடைத்திருந்தால், அவ்வாறு செல்வதற்கு நான் தயாராக இருந்தேன். ஆனால், அத்தகைய உத்தரவாதத்தை பிரபாகரனால் வழங்க முடியவில்லை; ஏனெனில் திலீபன் ஒரு கொள்கைப் பற்றுள்ள இலட்சியவாதியும், விடுதலைப் போராட்டத்தில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட போராளியும் ஆவார்.”
“அந்தச்
சமயத்தில், என்னை (தீட்சித்தை) நல்லூர் கந்தசுவாமி கோயிலில் திலீபனிடம் அழைத்துச்
சென்று, இந்திய–இலங்கை ஒப்பந்தத்துக்கும் இந்தியாவுக்கும் எதிரான மாபெரும்
ஆர்ப்பாட்டங்களுக்கு என்னை உட்படுத்தி, பின்னர் நான் விடுக்கும் வேண்டுகோளை
நிராகரிப்பதும், இந்திய உயர் ஸ்தானிகரின் முயற்சி நிராகரிக்கப்பட்டது என்பதைப்
பெரும் பிரசாரமாக வெளியிடுவதும் திட்டமாக இருந்ததாக IPKF-உம் எமது உளவுத்துறைத்
தகவல் மூலங்களும் எனக்குத் தெரிவித்திருந்தன. இந்திய அரசை அத்தகைய அவமானகரமான
நிலைக்கு உட்படுத்த நான் தயாராக இல்லை என்பதில் என் மனதில் தெளிவு இருந்தது. ஆகவே,
திலீபன் உண்ணாவிரதத்தை கைவிடுவார் என்ற உறுதியை நான் பெறாதவரை, பயனற்ற ஒரு
முயற்சியை மேற்கொள்ள நான் தயாராக இல்லை என்று பிரபாகரனிடம் தெரிவித்தேன். எந்தவொரு
புறநிலை அடிப்படையிலான தூண்டுதலும் இல்லாத நிலையில் உண்ணாவிரதத்தைத் தொடங்கியவர்
திலீபன்தான். மேலும், இந்திய அரசாங்கமோ இந்திய மக்களோ எந்தவிதத்திலும்
சம்பந்தப்படாத அந்த உண்ணாவிரதத்தை ஆதரிப்பது LTTE-யின்
உயர்மட்டத் தலைமையின் முடிவாகும்.”
ஆக திலீபன்
வைத்த அந்த ஐந்து கோரிக்கைகளையும் இந்திய அரசின் சார்பில் தீக்சித் ஏற்றுக்கொண்ட பின்னும்
பிரபாகரன் திலீபனை நரபலி கொடுக்க எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளவில்லை என்பதே உண்மை. ஒரு வெள்ளாள நரபலியின் பின்னே பிரபாகரனின் பாசிசம்
உறுதிப்படுத்தப்படும் என்பதை பிரபாகரன் மாற்றத் தயாரில்லை. “திலீபன்
உறுதியான போராளி. என் சொல்லையும் கேட்கமாட்டார். ஆகவே நீங்கள் வந்து குளிர்பானம் கொடுத்தாலும் திலீபன் உண்ணாவிரதத்தை முடித்துவைப்பார்
என்பதற்கு என்னால் உத்தரவாதம் தரமுடியாது” என்று பிரபாகரன் தீக்சித்திடம்
சொன்னது மஹா சூழ்ச்சி இன்றி வேறென்ன? திலீபனின்/புலிகளின் ஐந்து அம்சக்கோரிக்கைகளையும் தீக்சித் ஏற்றுக்கொண்டபின்னும் பிரபாகரன்
அழிச்சாட்டியமாக கொடுத்த வெள்ளாள நரபலி அது.
அந்த திலீபன்
நரபலியை மிக்கனகச்சிதமாக புலிகள் பாவித்தார்கள். யாழ் குடாநாட்டிலுள்ள அனைத்து ஊர்களுக்கும் திலீபன்
என்கிற வெள்ளாளனின் சவத்தைக் காவிச்சென்று சமாதானத்துக்கு வந்த நமக்கு உதவவந்த இந்தியப்
படைகளோடு சண்டையைத் தொடங்க நாடகம் போட்டார்கள்.
தீக்சித்
உறுதியளித்தபடியே செப்டம்பர்
28 ல் புலிகள் அழிச்சாட்டியம் செய்து கேட்ட இடைக்கால நிர்வாகசபையை இந்திய
அரசின் அழுத்தத்தால் இலங்கை சனாதிபதியே ஏற்றார். அது எவ்வளவு
சனநாயக விரோதமான கோரிக்கை என்றாலும் அதன்படி இடைக்கால நிருவாக சபையில் 12 உறுப்பினர். புலிகளின் நியமனம் ஐந்து உறுப்பினர்.
தமிழர் விடுதலைக் கூட்டணி நியமனம் இருவர். முஸ்லீம்கள்
இருவர், சிங்களவர் இருவர். மாற்று தமிழ்
இயக்கக்காரர்கள் எவருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. இதைவிட இச்சபைக்கு பிரதம நிர்வாகியாக வருபவருக்கு முன்று பேரை புலிகள் முன்மொழிவார்கள்.
அதில் ஒருவரை இலங்கை,சனாதிபதி ஜெயவர்த்தனா தெரிவு
செய்வார். புலிகள் முன்மொழிந்த மூவர்
1. 1. இன்றைய
தமிழரசுக்கட்சி தலைவர் முன்னாள் யாழ் மாநகரசபை ஆளுனர் CVK சிவஞானம்.
2. 2. பத்மநாதன்
3. 3. தில்லைநாதன்
இதில்,சிவஞானத்தை சனாதிபதி தெரிவுசெய்தார்.
அதைக் கண்டித்து பிரபாகரன் சன்னதமாடினார். அட நீங்கள்
முன்மொழிந்த மூவரில் ஒருவரை சனாதிபதி தெரிவு
செய்வதுதானே உங்களாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டது. இதற்குப்பிறகு
இல்லை சனாதிபதி பத்மநாதனைத்தான் தெரிவுசெய்யவேண்டும் என்று கேட்பது நியாயமா?
பிறகென்ன? பிரபாகரன் தன் சொந்த ஊரவனான
குமரப்பாவையே அவர்கள் வந்த முழுக்க கப்பல் குழுவோடு சேர்த்து சயனைட் கடிக்கவைத்து திலீபனைப்போல
நரபலி கொடுத்தார். நமக்கு உதவ வந்த இந்தியப் படைகளோடு தன் சண்டையை
ஆரம்பிக்க பிரபாகரன் போட்ட நாடகங்கள் இவை.
ஆக
திலீபனின் மரணம் திட்டமிடப்பட்ட நரபலி.
இந்த வரலாறுகள் இன்றைய தமிழரசுக் கட்சித்தலைவர் CVK சிவஞானத்துக்கு நன்கு தெரியும். ஆனால் அப்போது கொழும்பிலும் இந்தியாவிலும் படித்துக்கொண்டிருந்த
சுமந்திரனுக்குத் தெரியாது. சுமந்திரன் வரலாற்றை ஆங்கிலத்தில்
எழுதிய DBS Jeyaraj கட்டுரைகள் மூலமே அறிபவர். ஜெயராஜின் வரலாறுகள் புலித்தேசியத்துக்கு ஆதரவாக கணிசமாகக் திரிக்கப்பட்டவை.
இது பற்றிய உண்மை வரலாறுகள் ராஜினி, திராணிகம,
ராஜன் கூல் முதலியோர் எழுதிய Broken Palmyrah, The Arrogance
of Power, Palmyrah Fallen முதலிய நூல்களிலும் இந்தியப் பத்திரிகையாளர்
நாராயண் சுவாமி எழுதிய Tigers of Lanka முதலிய நூல்களிலுமே உள்ளன.
தயவு செய்து சுமந்திரன், சுவஸ்திகா அருளிங்கம்,
கேசவன் சஜந்தன் போன்றவர்கள் இந்நூல்களைப் படித்து திலீபன் பற்றிய உண்மைகளை
அறியவேண்டும்.
திலீபன்
தியாகி அல்ல. அகிம்சா
வாதி அல்ல. மாற்று இயக்கங்கள் அழிக்கப்படுவதில் பங்கேற்றவர்.
அவர் ஒரு பலிகடா, நரபலி, கரையார பிரபாகரனின் பாசிச ஆட்சிக்காக, ஒப்பந்தத்தை குழப்புவதற்காக,
இந்தியப் படைகளோடு சண்டையைத் தொடங்குவதற்காக கொடுக்கப்பட்ட வெள்ளாள நரபலி.
ஒரு
நரபலியைக் கொண்டாடுகிறது இன்றைய ஈழத்தமிழ் சமுகம்.
தொடர்பான கட்டுரைகள்
1. புலிகளால் கடத்திக் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவன் விஜிதரனின் கதை









Comments
Post a Comment